அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் வினாக்களுக்கு பதில்கள் விரிவாகவும், விளக்கமாகவும் எழுத வேண்டியுள்ளது. எனவே விளக்கமான பதில்களை நூலில் காண்க. தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது.
வினா எண் ; 1. ஒருவரின் தலைவிதியை சோதிடப்பலன்கள் மாற்றமடைய செய்யுமா? நிச்சயமாக முடியாது. சோதிடப்பலன்கள் எதிர்காலத்தில் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று கூறுகிறதே தவிர மாற்றியமைக்கும்...