Sunday 26 October 2014

தலைவிதியை மாற்றியமைக்கும் வழி சோதிடசாத்திரதில் இல்லை. அப்படியிருந்திருந்தால் உலகில் அனைவராலும் மதிக்கக்கூடிய கோடீஸ்வரக் கலைஞர்கள் நாம் தான் !!!

அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் வினாக்களுக்கு பதில்கள் விரிவாகவும், விளக்கமாகவும் எழுத வேண்டியுள்ளது. எனவே விளக்கமான பதில்களை நூலில் காண்க. தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது. 
 வினா எண் ; 1. ஒருவரின் தலைவிதியை சோதிடப்பலன்கள் மாற்றமடைய செய்யுமா?     நிச்சயமாக முடியாது. சோதிடப்பலன்கள் எதிர்காலத்தில் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று கூறுகிறதே தவிர மாற்றியமைக்கும் வழிகளைக் கூறவில்லை. கூறவும் முடியாது. ஏனெனில். 6,8,12, ம்பாவக தன்மையில் ஏற்படும் தீய பலன்கள்,பின்னர் வரும் நற்பாவக காலங்களிலேயே மாற்றம் ஏற்படும்.அதுவரை பொறுமையாகத்தான் வாழ்ந்து முடிக்கவேண்டும். தீயதை ,நன்மையாகவோ, அல்லது நன்மையை,தீமையாகவோ மாற்றியமைக்கும் வழியை சோதிடசாத்திரத்தில் எங்கும் காணமுடியாது. அவ்வாறு கூறப்பட்டு இருந்தால் நாம் அனைவரும் மிகப்பெரிய மனிதர்களாகவும்.செல்வந்தர்களாகவும் மாறியிருக்கமுடியம்
இந்த உலகம் மதிக்கும் சாதனை விருதுகளை நம்மில் பலர் பெற்றும் இருப்பர். 5000 ஆண்டுகள் பழைமையான இந்த சோதிடவியலை நான்( Prof.Dr.T.Vimalan.) வந்து 2002ல் இளங்கலை பட்டப்படிப்பை தொடங்க வேண்டியநிலையில் உலகம் வைத்திருந்தது. இதுதான் சோதிடவியலின் உண்மை நிலை. மாற்றமடையக் கூடிய தன்மையில் இச்சோதிடக்கலை இருந்திருக்குமானால் உலகில் உள்ளோர் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இச்சோதிடக்கலையை பாடமாக நடத்தி பல்வேறு ஆய்வுகள் நிகழ்த்தி வளர்த்து வந்திருப்பர்.                    நாம் வேண்டுமானால் சோதிடராக மாறியிருக்கலாம். நமது பிள்ளைகளை சோதிடராக்குவதற்கு எவ்வளவு தயக்கம் ஏற்படுகிறது. சோதிடத்தினால் எதிர்காலம் ஒன்றை மட்டுமே கூற முடியும். எதையும் மாற்றி அமைக்க முடியாது. மீதியை நூலில் காண்க.