Saturday 24 January 2015

நளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.


அன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்…

ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் நடந்தது என்ன,,,, அவற்றினால் பலன்கள் உண்டா,,,, நமது சோதிட உலகிற்கு தேவைதானா,,,,, போன்ற பல வினாக்கள் என்னிடம் கேட்கப்பட்டன…….

 இதற்கு விளக்கம் அளிக்கும் அடிப்படையில் சில தகவல்களை கூறிய பின்னர் .. சனியன்களுக்கு விளக்கம் தருகிறேன்…
.
1 ஏழரைச் சனிக்கு திருநள்ளாறு சென்று வந்தால் ஒரு பரிக்காரம் என்கிறார்கள்.

2 நளன் என்கிற மகாராஜா தன்னைப் பிடித்த சனியன் இங்கு வந்து வழி பட்ட பின்னரே துன்பம் நீங்கியது என்கிறார்கள்… 

3 சனியின் கொடுமை பரிகாரத்தினால் சரியாகும் என்கிறார்கள்..

நளமகாராஜன்.

மகாபாரதத்தின் ,ஆரணியகாண்டத்தின் ஐம்பத்திரண்டாம் அத்தியாயமுதல் –இருபத்தியெட்டு அத்தியாயங்களில் இந்த நளன்  பற்றிய கதை எழுதப்பட்டுள்ளது. 

அதன் பெயர், ’’’நளோபாக்கியான பர்வதம்”’ என்பதாகும்..

 இந்த நளன் பற்றிய கதையை தமிழில் புகழேந்திப் புலவரால்
’’நளவெண்பா ‘’ என்று 420 பாடல்களில் ஒரு நூல் இயற்றப்பட்டுள்ளது… அதன் அடிப்படையில் இங்கு கருத்துக்கள் கொடுக்கப்படுகிறது.

புராணத்தின் அடிப்படையில் நளனின் கதை கிருதயுகத்தில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது….ஏனெனில் மகாபாரதத்தில் தரும மகராஜா சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து வனத்தில் துன்பப்படும் பொழுது வியாசரிடம், என்னைப்போல் சூதில் நாட்டை இழந்த மன்னர் யாராவது இருந்தார்களா என்று கேட்டதற்கு பதிலாக வந்த கதையே நளன் கதையாகும். 
 
மகாபாரதம் துவாபர யுகத்தின் கடைசியில் நடந்ததாக புராணக்கால கணிதங்கள் கூறுகின்றன.  இன்றுடன் துவாபர யுகம் முடிந்து 5115 ஆண்டுகள் கலியுகத்தில் கடந்து விட்டன.. துவாபரயுகத்தின் மொத்த ஆண்டுகள் 8,64.000( எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம்) ஆகும். இதற்கு முன்னர் திரேதாயுகம் உள்ளது. அதன் மொத்த ஆண்டுகள் 12,96,000 ( பன்னிரெண்டு இலட்சத்து தொன்னூற்று ஆராயிரம்) ஆகும். இதற்கு முன்னரே கிருதயுகக் காலமாகும்.

எனும்பொழுது நளன் வாழ்ந்ததாக் கூறும் {கிருதயுகம்} காலத்தின் அளவு  கலியுகம் 5115+துவாபரயுகம் 8,64,000+திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள் = 21,65,115 { இருபத்தியொரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று புராணகாலக் கதையின் அடிப்படையில் கணிக்க முடிகிறது.

கொஞ்சம் சிந்தித்தால் இவை நடந்திருக்குமா என்பதே வினாவாகிறது.  
நளனின் கதைப்படி அவருடைய மனைவியின் பொருட்டு துன்பத்திற்கு உள்ளாக நேரிடுகிறது என்று கதை சொல்கிறது.
நிடத நாட்டின் மாவிந்த நகரம் நளமகாராஜனின் ஊராகும்
குண்டினபுரம் தமயந்தியின் ஊராகும்.

இருதுப நகரம்… நளன் சமையல், தேரோட்டியாக இருந்த நகராகும்.
இவை போல் சில ஊர்களின் பெயர்கள் கதைக்குத் தகுந்தவாறு வந்து போகின்றன. நள,தமயந்தி திருமணம் முடிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்தே கலி {சனியன்} பிடிப்பதாக கதை கூறுகிறது..பிடித்தவுடன் சூதில் நாட்டை இழக்கிறான். குழந்தைகளைப் பிரிகிறான். பின்னர் மனைவியையும் பிரிகிறான். கார்கோடன் என்கிற பாம்பினால் கடிபடுகிறான். அதன் பின்னர் தேரோட்டியாகவும், சமையல்காரனாகவும் பணி செய்கிறான். பின்னர் தனது மனவியின் இரண்டாவது சுயவரத்தில் குடும்பத்துடன் இணைகிறான்… இத்துடன் கதை முடிகிறது..

கதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது… 

கலி {சனி} விலகும் பொழுது நளனிற்கு கொடுத்த வரத்தின்படி
நளனின் கதையைக் கேட்டாலே சனி எந்த துன்பமும் தர மாட்டேன் என்று வரம் கொடுத்ததாகவும் கதை கூறுகிறது…..

கதையின்படி நளனுக்கு சனி கொடுத்த துன்பம் சில மாதங்களிலேயே முடிவிற்கு வந்து விட்டது….

இங்கு தற்காலத்தில் கூறப்படும், ஏழரை 7½ ஆண்டுகள்,
அட்டமம் 2½ ஆண்டுகள், கண்டம்2½ ஆண்டுகள் , அர்தாஸ்டமம் 2½ ஆண்டுகள் என்று எங்கும் கூறப்படவில்லை…..

நளனுடைய பயனம் முழுவதும் வட நாட்டிலேயே முடிந்து விடுகிறது. தென்னாட்டிற்கு வரவேயில்லை.. இப்படியிருக்க திருநள்ளாறு என்ற இடத்திற்கு எப்படி வர முடியும்..

{ கதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது  } இப்படியிருக்க நளன் எப்படி திருநள்ளாறு குளத்திற்கு வந்து குளிக்க முடியும்..???????????????////

திரு-நள்-ஆறு.

திருநள்ளாறு என்பது , நளன் வந்து குளித்ததால் ஏற்பட்ட காரணப்பெயர் என்று ஒரு பொழுதும் கருத முடியாது.

’’நள்’’ என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் , இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலத்திற்கானப் பெயராகும்..

வாஞ்சி ஆற்றிற்கு தெற்கேயும் { தற்பொழுது நட்டார் என்று வழங்கப்படுகிறது………….. பிரெஞ்சுக் காலத்தில் நள்ளார் என்றே கூறப்பட்டுள்ளது,,} அரசலாற்றுக்கு வடக்கேயும் உள்ள நிலப்பரப்பாகும்.
உண்மையில் இந்த நிலப்பகுதிகள் காவேரி நதியின் டெல்டா பகுதிகளாகும்.. எனவே விளைச்சலுக்குப் பஞ்சமில்லை… அதனாலேயே நள் என்ற பெயரை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.. எனவே திருநள்ளார் என்பது இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலமே தவிர …….. நளமகாராஜா வந்து போன இடம் அல்ல….

திருநள்ளாரில் உள்ள கோவில் நமது சைவ ஆகமத்தின் அமைப்பில் உள்ள தர்பாரணீயீஸ்வரர்.,போகமார்த்த பூண்முலையம்மாள் திருக்கோயிலாகும்.

சைவ ஆகமக்கோயிலாக இருப்பதால் தருமைபுர ஆதினத்திற்கு சொந்தமானதாகும்..தற்பொழுது எப்படியெண்று தெரியவில்லை.
தருமைபுர ஆதினம் , கி.பி.16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்டது என்று ஆதீன வரலாறு கூறுகின்றது.

அதற்கு முன்னரே இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினால் சில நூற்றாண்டுகளுக்குள்ளேயே இருக்கும். எனவே அதிகமாக ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் என்று வைத்துக்கொள்வோம்.

தற்பொழுது 100 ஆண்டுகளுக்குள் தானே இந்தக்கோயில் சனிக்குரிய கோயிலாக மாறியிருக்கும்.அதற்கு முன்னர் ஈஸ்வரன் கோயிலாகத்தானே வழிபாடுகள் நடத்தப்பட்டிருக்கும். தற்பொழுதும் மூலவர் தர்பாரணீஸ்வரர்க்குத் தானே முதலிடம்….

நளனிற்கும் இந்த கோவிலிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை… இதை கதையின் வழியாகவும், சைவ ஆகமத்தின் வழியாகவும்,ஆதீனங்களின் வரலாற்று ரீதியாகவும் நிரூபிக்க முடியும்..

ஏழரை நாட்டு சனிகள் என்கிற துன்பச் சனியன்களுக்கும்,,நளனிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை..

புராணக்கதையின் படி நளன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிற காலம் கிருதயுகமாகும்..அது தற்பொழுதிலிருந்து இருபத்தியொரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளதாகும்…

மானுடம் சமயங்களையும், அதற்குரிய தெய்வங்களையும் கண்டுபிடித்தே பத்தாயிரம் ஆண்டுகள் ஆகவில்லை…

 நாம் வேண்டுமானல் சொல்லிக்கொள்ளலாம்.. இலட்சக்கணக்கில் ஆண்டுகளை …….எதிர்காலம் எப்படி ஏற்றுக் கொள்ளும்.. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 


புகலேந்திப் புலவரால் எழுதப்பட்ட “ நளவெண்பா “ வில் உள்ள420+7= 427 பாடல்களில் ஒரு இடத்திலும் இந்த திருநள்ளாறுக் கோயிலை குறிப்பிடவே இல்லை...


அளவான நம்பிக்கையுடன் இருந்தால் நமது சோதிடசாத்திரம் வாழும்.
அளவற்ற பயத்தை மக்களுக்கு ஏற்படுத்தினால் நமது வாழ்வு ????? 

 மிக்க நன்றி……….

Prof.Dr.T.Vimalan Ph.D.