VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Saturday 24 January 2015

நளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.


அன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்…

ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் நடந்தது என்ன,,,, அவற்றினால் பலன்கள் உண்டா,,,, நமது சோதிட உலகிற்கு தேவைதானா,,,,, போன்ற பல வினாக்கள் என்னிடம் கேட்கப்பட்டன…….

 இதற்கு விளக்கம் அளிக்கும் அடிப்படையில் சில தகவல்களை கூறிய பின்னர் .. சனியன்களுக்கு விளக்கம் தருகிறேன்…
.
1 ஏழரைச் சனிக்கு திருநள்ளாறு சென்று வந்தால் ஒரு பரிக்காரம் என்கிறார்கள்.

2 நளன் என்கிற மகாராஜா தன்னைப் பிடித்த சனியன் இங்கு வந்து வழி பட்ட பின்னரே துன்பம் நீங்கியது என்கிறார்கள்… 

3 சனியின் கொடுமை பரிகாரத்தினால் சரியாகும் என்கிறார்கள்..

நளமகாராஜன்.

மகாபாரதத்தின் ,ஆரணியகாண்டத்தின் ஐம்பத்திரண்டாம் அத்தியாயமுதல் –இருபத்தியெட்டு அத்தியாயங்களில் இந்த நளன்  பற்றிய கதை எழுதப்பட்டுள்ளது. 

அதன் பெயர், ’’’நளோபாக்கியான பர்வதம்”’ என்பதாகும்..

 இந்த நளன் பற்றிய கதையை தமிழில் புகழேந்திப் புலவரால்
’’நளவெண்பா ‘’ என்று 420 பாடல்களில் ஒரு நூல் இயற்றப்பட்டுள்ளது… அதன் அடிப்படையில் இங்கு கருத்துக்கள் கொடுக்கப்படுகிறது.

புராணத்தின் அடிப்படையில் நளனின் கதை கிருதயுகத்தில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது….ஏனெனில் மகாபாரதத்தில் தரும மகராஜா சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து வனத்தில் துன்பப்படும் பொழுது வியாசரிடம், என்னைப்போல் சூதில் நாட்டை இழந்த மன்னர் யாராவது இருந்தார்களா என்று கேட்டதற்கு பதிலாக வந்த கதையே நளன் கதையாகும். 
 
மகாபாரதம் துவாபர யுகத்தின் கடைசியில் நடந்ததாக புராணக்கால கணிதங்கள் கூறுகின்றன.  இன்றுடன் துவாபர யுகம் முடிந்து 5115 ஆண்டுகள் கலியுகத்தில் கடந்து விட்டன.. துவாபரயுகத்தின் மொத்த ஆண்டுகள் 8,64.000( எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம்) ஆகும். இதற்கு முன்னர் திரேதாயுகம் உள்ளது. அதன் மொத்த ஆண்டுகள் 12,96,000 ( பன்னிரெண்டு இலட்சத்து தொன்னூற்று ஆராயிரம்) ஆகும். இதற்கு முன்னரே கிருதயுகக் காலமாகும்.

எனும்பொழுது நளன் வாழ்ந்ததாக் கூறும் {கிருதயுகம்} காலத்தின் அளவு  கலியுகம் 5115+துவாபரயுகம் 8,64,000+திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள் = 21,65,115 { இருபத்தியொரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று புராணகாலக் கதையின் அடிப்படையில் கணிக்க முடிகிறது.

கொஞ்சம் சிந்தித்தால் இவை நடந்திருக்குமா என்பதே வினாவாகிறது.  
நளனின் கதைப்படி அவருடைய மனைவியின் பொருட்டு துன்பத்திற்கு உள்ளாக நேரிடுகிறது என்று கதை சொல்கிறது.
நிடத நாட்டின் மாவிந்த நகரம் நளமகாராஜனின் ஊராகும்
குண்டினபுரம் தமயந்தியின் ஊராகும்.

இருதுப நகரம்… நளன் சமையல், தேரோட்டியாக இருந்த நகராகும்.
இவை போல் சில ஊர்களின் பெயர்கள் கதைக்குத் தகுந்தவாறு வந்து போகின்றன. நள,தமயந்தி திருமணம் முடிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்தே கலி {சனியன்} பிடிப்பதாக கதை கூறுகிறது..பிடித்தவுடன் சூதில் நாட்டை இழக்கிறான். குழந்தைகளைப் பிரிகிறான். பின்னர் மனைவியையும் பிரிகிறான். கார்கோடன் என்கிற பாம்பினால் கடிபடுகிறான். அதன் பின்னர் தேரோட்டியாகவும், சமையல்காரனாகவும் பணி செய்கிறான். பின்னர் தனது மனவியின் இரண்டாவது சுயவரத்தில் குடும்பத்துடன் இணைகிறான்… இத்துடன் கதை முடிகிறது..

கதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது… 

கலி {சனி} விலகும் பொழுது நளனிற்கு கொடுத்த வரத்தின்படி
நளனின் கதையைக் கேட்டாலே சனி எந்த துன்பமும் தர மாட்டேன் என்று வரம் கொடுத்ததாகவும் கதை கூறுகிறது…..

கதையின்படி நளனுக்கு சனி கொடுத்த துன்பம் சில மாதங்களிலேயே முடிவிற்கு வந்து விட்டது….

இங்கு தற்காலத்தில் கூறப்படும், ஏழரை 7½ ஆண்டுகள்,
அட்டமம் 2½ ஆண்டுகள், கண்டம்2½ ஆண்டுகள் , அர்தாஸ்டமம் 2½ ஆண்டுகள் என்று எங்கும் கூறப்படவில்லை…..

நளனுடைய பயனம் முழுவதும் வட நாட்டிலேயே முடிந்து விடுகிறது. தென்னாட்டிற்கு வரவேயில்லை.. இப்படியிருக்க திருநள்ளாறு என்ற இடத்திற்கு எப்படி வர முடியும்..

{ கதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது  } இப்படியிருக்க நளன் எப்படி திருநள்ளாறு குளத்திற்கு வந்து குளிக்க முடியும்..???????????????////

திரு-நள்-ஆறு.

திருநள்ளாறு என்பது , நளன் வந்து குளித்ததால் ஏற்பட்ட காரணப்பெயர் என்று ஒரு பொழுதும் கருத முடியாது.

’’நள்’’ என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் , இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலத்திற்கானப் பெயராகும்..

வாஞ்சி ஆற்றிற்கு தெற்கேயும் { தற்பொழுது நட்டார் என்று வழங்கப்படுகிறது………….. பிரெஞ்சுக் காலத்தில் நள்ளார் என்றே கூறப்பட்டுள்ளது,,} அரசலாற்றுக்கு வடக்கேயும் உள்ள நிலப்பரப்பாகும்.
உண்மையில் இந்த நிலப்பகுதிகள் காவேரி நதியின் டெல்டா பகுதிகளாகும்.. எனவே விளைச்சலுக்குப் பஞ்சமில்லை… அதனாலேயே நள் என்ற பெயரை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.. எனவே திருநள்ளார் என்பது இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலமே தவிர …….. நளமகாராஜா வந்து போன இடம் அல்ல….

திருநள்ளாரில் உள்ள கோவில் நமது சைவ ஆகமத்தின் அமைப்பில் உள்ள தர்பாரணீயீஸ்வரர்.,போகமார்த்த பூண்முலையம்மாள் திருக்கோயிலாகும்.

சைவ ஆகமக்கோயிலாக இருப்பதால் தருமைபுர ஆதினத்திற்கு சொந்தமானதாகும்..தற்பொழுது எப்படியெண்று தெரியவில்லை.
தருமைபுர ஆதினம் , கி.பி.16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்டது என்று ஆதீன வரலாறு கூறுகின்றது.

அதற்கு முன்னரே இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினால் சில நூற்றாண்டுகளுக்குள்ளேயே இருக்கும். எனவே அதிகமாக ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் என்று வைத்துக்கொள்வோம்.

தற்பொழுது 100 ஆண்டுகளுக்குள் தானே இந்தக்கோயில் சனிக்குரிய கோயிலாக மாறியிருக்கும்.அதற்கு முன்னர் ஈஸ்வரன் கோயிலாகத்தானே வழிபாடுகள் நடத்தப்பட்டிருக்கும். தற்பொழுதும் மூலவர் தர்பாரணீஸ்வரர்க்குத் தானே முதலிடம்….

நளனிற்கும் இந்த கோவிலிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை… இதை கதையின் வழியாகவும், சைவ ஆகமத்தின் வழியாகவும்,ஆதீனங்களின் வரலாற்று ரீதியாகவும் நிரூபிக்க முடியும்..

ஏழரை நாட்டு சனிகள் என்கிற துன்பச் சனியன்களுக்கும்,,நளனிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை..

புராணக்கதையின் படி நளன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிற காலம் கிருதயுகமாகும்..அது தற்பொழுதிலிருந்து இருபத்தியொரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளதாகும்…

மானுடம் சமயங்களையும், அதற்குரிய தெய்வங்களையும் கண்டுபிடித்தே பத்தாயிரம் ஆண்டுகள் ஆகவில்லை…

 நாம் வேண்டுமானல் சொல்லிக்கொள்ளலாம்.. இலட்சக்கணக்கில் ஆண்டுகளை …….எதிர்காலம் எப்படி ஏற்றுக் கொள்ளும்.. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 


புகலேந்திப் புலவரால் எழுதப்பட்ட “ நளவெண்பா “ வில் உள்ள420+7= 427 பாடல்களில் ஒரு இடத்திலும் இந்த திருநள்ளாறுக் கோயிலை குறிப்பிடவே இல்லை...


அளவான நம்பிக்கையுடன் இருந்தால் நமது சோதிடசாத்திரம் வாழும்.
அளவற்ற பயத்தை மக்களுக்கு ஏற்படுத்தினால் நமது வாழ்வு ????? 

 மிக்க நன்றி……….

Prof.Dr.T.Vimalan Ph.D.




   


Wednesday 14 January 2015

தமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..

அன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்……

மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன்.. அது தற்பொழுது நினைவிற்கு வந்தது……முழுவதுமாக எழுதி விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்…….

 தமிழ் ஆண்டு பிறப்பு……… தமிழுக்கு ஆண்டு கணக்கு ……….தமிழ் வருடம்

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எவர் கூறினாரோ தெரியவில்லை.  அனைவரையும் வாழவைத்து அவர்தம் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது தமிழகமே !!!!!!!!

உண்மையில் தமிழர்கள் காலக்கணிதங்களில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகக் கருதமுடியவில்லை…..அப்படியிருந்திருந்தால் வடமொழி கணிதங்களை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்…..தமிழன் ஒரு நாளைக்குத் தேவையான காலக்கணிதத்துடன் நின்றுவிட்டான்…அதற்கு மேற்பட்ட அத்தனை கணிதங்களையும் சமஸ்கிருதத்தில் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டான்…

சரியானது என்று அறிந்து கொண்டால் அதை போற்றி வாழ வைப்பதில் தமிழர்களுக்கு இணை தமிழர்கள் மட்டுமே….

தமிழர்களின் ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது என்பதில் பல் வேறு கருத்துக்கள் உள்ளன…….

சித்திரை மாதத்தை முதல் தேதியாக எடுத்துக் கொண்டாலும் சரி,,,,தை மாதத்தை முதல் தேதியாக எடுத்துக் கொண்டாலும் சரி..இரண்டுமே தமிழர்களின் காலக் கணிதங்கள் அல்ல….இந்தக் காலக் கணிதங்களை கண்டு பிடித்தது.. வடமொழியினரே….அவர்களின் கணிதத்தையே இந்தியர்கள் அனைவரும் பின்பற்றி வருகிறோம்…..சொல்வதற்கு வருத்தமாகத் தான் இருக்கிறது….இருந்தாலும் உண்மை தெரிய வேண்டுமே…அதனால் காலத்தை கணிக்கும் சோதிடராகிய நான் இங்கு விளக்க முற்படுகிறேன்…..

இடமும் ----காலமும் 

உலகில் உள்ள அனைத்து நவடிக்கைகளும் காலம்,,இடத்திற்குள் கொண்டு வந்து தான் முடிவெடுக்கப்படுகிறது….ஒருவர் எங்கு பிறந்தார்..எப்பொழுது பிறந்தார்...என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரிந்த பின்னரே மற்ற நடவடிக்கைகள் தொடக்கம் பெறும்……அதனாலேயே தொடர்புகள் அனைத்திலும் காலமும்,இடமும் குறிக்கப் பட்டிருக்கும்…. காலமும் இடமும் இல்லாமல் உலகில் எந்த ஒரு செயலும் நடைபெறுவதில்லை….

மானுடவாழ்வின்ஒவ்வொருசெயலிற்கும்காலமும்,இடமும்முதன்மையானதாக இருந்தாலும் ,,காலத்தை கணிப்பதில் சில சிக்கல்கள் இருந்துள்ளன…காலத்தை கணிப்பதற்கு வானத்தில் ஏற்படும் மாற்றங்களும், இயற்கை மாற்றங்களூமே பெரிதும் துணை செய்கின்றன.

எனவே காலத்தை கணிப்பதற்கு வான சாத்திரமும் , காலக்கணித சாத்திரமும் தேவையானதாக இருக்கிறது. இவை இரண்டையும் பழந்தமிழர்கள் பயன் படுத்தியதாக இதுவரை தகவல் இல்லை….அப்படியே வடமொழியில்  உள்ளதை ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது…அதனாலேயே  தமிழில் ஒரு வானசாத்திர நூலும் கிடைக்கவில்லை…….
வடமொழியினர் பயன்படுத்திய வேதகாலத்தில் முகூர்த்தங்கள் , அர்த்த முகூர்த்தங்கள்.,மாதங்கள்.,திதிகள்.,ருதுக்கள்.,ஸம்வத்ஸ்ரங்கள்..இருந்துள்ளன.

 வேதகால மாதங்கள் :

12 மாதங்களின் பெயர்கள்….
1 அருணா, 2. அருணராஜ், 3.புண்டரிகா. 4.விஸ்வஜித்,5 அபிஜித், 6 ஆர்த்ரா, 7 பின்வமானா, 8 உன்னவான், 9 ரஸவான், 10 இர்வான்,11 ஸர்வவுஸாதா, 12 ஸம்பார…

வேதகால அர்த்த மாதங்கள்; 24 ஆகும்…

பவித்ரன், பவயிஸ்யன், புதா, மேதயா, யஸா, யஸாவன், அயூப், அம்ர்தா, ஜீவ, ஜீவிஸ்யன்,ஸ்வர்க, லோகா, ஸகஸ்வன், ஸகியான், அஜஸ்வன், ஸ்கமான, ஜனயன், அபிஜயன், சுத்ரவினா, த்ரவினோதா, அர்த்ர-பவித்ர, ஹரிகேஸ, மோத, பிரமோத, ஆகியவையாகும்…..

தற்கால மாதங்கள் பெயர்கள் ;

மாதங்கள் அனைத்தும் இரண்டு அயனங்களிலும் பிரிக்கப்பட்டிருக்கும். அவை உத்தராயனம், தட்சிணாயனம் ஆகும். ஒரு அயனத்திற்கு ஆறு மாதங்களாகும்…

1 சைத்ர மாதம்----சித்திரை , இம்மாதத்திற்கு இந்த பெயர் ஏற்படுவதற்கு காரணம் தெரிய வேண்டுமல்லவா ….அதைவிவரித்தால் மற்ற மாதங்களின் பெயர்களுக்கு விளக்கமளிப்பது எளிதாகிவிடும்..

 கி.பி..1000 க்கு முன்னர் எழுதப்பட்ட சமஸ்கிருத வான சாத்திரத்தில், வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் 28 கூட்டங்களாக பிரித்து அவற்றிற்கு  பெயர்களையும் ஏற்படுத்தினர்.. இவை 360 பாகை கொண்ட வட்டதிற்குள் பிரித்து கொடுக்கப் பட்டன.
அவற்றில்பன்னிரெண்டுபிரிவுகள்ஏற்படுத்தப்பட்டன..அவை ஒவ்வொன்றிற்கும்மேசம்.ரிசபம்.மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்று பன்னிரெண்டு இராசிகள் பெயர்கள் கொடுக்கப்பட்டன. 

இப்பொழுது பன்னிரெண்டு இராசிகளிலும் கோள்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும்…. இதில் சூரியன் எந்த இராசியில் இருக்கிறதோ அதுவே மாதப் பெயராக இருந்துள்ளது..இதில் எந்த மாதம் முதல் மாதம் என்பதில் கணக்கில் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டதே ஆண்டுகளும் ,நட்சத்திரப்பெயர்கொண்ட மாதப்பெயர்களும் ஆகும்.( தற்பொழுது நாம் சொல்லிக் கொண்டிருப்பது நட்சத்திரப்பெயருடன் கூடிய மாதங்களாகும்)

ஒரு ஆண்டில்  சமமான  பகல்,இரவு காலங்கள் கொண்ட நாட்களை கணக்கில் எடுத்துக் கொண்டனர்…அவற்றில்..மார்ச் 21 தேதியை கொண்டு தொடங்கும் மேச மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிட்டனர்….மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையுள்ள நாட்களில் ஒரு நாள் பௌர்ணமி வரும் .அப்பொழுது சூரியன் மேச இராசியிலும், சந்திரன் துலாம் இராசி சைத்ரம் (சித்திரை) நட்சத்திரத்திலும் இருக்கும். இந்த நட்சத்திரத்தையே அந்த மாதத்தின் பெயராக மாற்றினர்…

இது போலவே ஒவ்வொரு பௌர்ணமியும் வரும் காலங்களில் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது…

சைத்ரம்—            சித்திரை  (சித்திரை நட்சத்திரம்)
வைசாகம்---          வைகாசி (விசாகம் நட்சத்திரம்)
ஜேஸ்டம்---          ஆனி     ( கேட்டை நட்சத்திரம்)
ஆஸாடம்--          ஆடி      (பூராடம் நட்சத்திரம்)
சிராவணம்---         ஆவணி  (திருவோணம் நட்சத்திரம்)
பாத்ரபதம்---         புரட்டாசி  ( பூரட்டாதி நட்சத்திரம் )
ஆஸ்வின ---        ஐப்பசி    ( அசுபதி நட்சத்திரம் )
கார்த்திகம் ----      கார்த்திகை ( கார்த்திகை நட்சத்திரம்)
அக்ரஹாயன----     மார்கழி   ( மிருகசீரிடம் நட்சத்திரம்)
பௌஸ ---           தை     (பூசம் நட்சத்திரம்)
மாகம்   ----        மாசி      (மகம் நட்சத்திரம்)
பால்குன-----        பங்குனி  ( உத்திர பல்குனி நட்சத்திரம்) 

இந்த பன்னிரெண்டு நட்சத்திரப் பெயர்களும் கொண்ட மாதங்களையே நாம் தமிழ் மாதங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.…நட்சத்திரம் என்ற சொல்லே ஸமஸ்கிருதம் ஆகும்…எனும் பொழுது தமிழ் மாதம் என்று எப்படி அழைக்க முடியும்…. தற்பொழுது சில பெயர்கள் வழக்கில் மறுவியுள்ளன.

அறுபது ஸமஸ்கிருத ஆண்டுகள்.

இப்பொழுது ஆண்டுகளின் கணிதத்திற்கு வருவோம்…. பஞ்சாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னரான வேதகாலத்தில் தற்பொழுதுள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்கள் வைக்கப் படவில்லை.
 
வேதகால ஸம்வத்ஸ்ரங்கள் ;

வேதகால தொடக்கத்தில் சதுர்யுக ஆண்டுக் கணக்கெல்லாம் கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால் அவர்கள் ஐந்து மற்றும் ஆறு ஆண்டுகள் கொண்ட சுற்று யுகங்களாகவே கணக்கில் கொண்டனர். அவை
1 சம்வத்சர, 2 பரிவத்சர, 3 இதாவத்சர, 4 இத்வத்சர, 5 வத்சர என்றும் நாளடைவில் இவற்றுடன் ஒன்று கூட்டி இதுவத்சர என்ற ஆறு சுற்று யுகங்களைக் கணக்கில் கொண்டனர்…

வராகமிகிரரின் யுக ஆண்டுக்காலம்:

வராகமிகிரரின் பிருகத் சம்கிதா எனும் நூலில் அவர் ,யுகக்கணிதத்திற்காக  அறுபது ஆண்டுகள் கொண்ட தொகுப்பை பயன் படுத்தியுள்ளார்..ஒவ்வொரு யுகத்திற்கும் 5 ஆண்டுகள் என்று பிரித்து பன்னிரெண்டு பெயர்களைக் கொடுத்துள்ளார். 1 விஸ்ணு, 2 குரு, 3 இந்திரன், 4 அக்னி, 5 த்வஸ்டா, 6 அகிர் புதன்யா, 7 ஆவிஉலகம், 8 விஸ்வதேவர்கள், 9 சந்திரன்,10 இந்திராக்னி, 11 அசுவினி தேவர்கள்,12 சூரியன் என்று கணித்துள்ளார்…

இவற்றிற்கு பலனாக ..முதல் நான்கு யுகத்தில் நல்ல செல்வச்செழிப்பும், அடுத்த நான்கு யுகத்தில் நடுத்தர செல்வச்செழிப்பும், அடுத்த நான்கு யுகத்தில் வறுமையும் ,பிணிகளும் ஏற்படும் என்கிறார்…….
வராகமிகிரருக்குப் பின்னர் பஞ்சாங்க கணிக்கும் பொழுது அறுபது ஆண்டுப்பெயர்கள் ஏற்படுத்தப்பட்டன
.
பிரபாவதி சுற்று என்றும், குரு சுற்று என்றும் தற்காலத்தில் பஞ்சாங்கங்கள் கடைபிடிக்கிற அறுபது ஆண்டுப் பெயர்களும் ஸமஸ்கிருத மொழியாகும்..

1 பிரபவ, 2 விபவ,3 சுக்கில,4 பிரமோதுத, 5 பிரஜோற்பதி,6 ஆங்கிரச,
7 ஸிரிமுக, 8பவ,9 யுவ,10 தாது என்று அச்சய முடிய அறுபது பெயர்கள் இடம் பெற்றுள்ளன…

இவை எதிலும் தமிழ் பெயர் என்று ஒன்று கூட கிடையாது….
இப்பொழுது கூறுங்கள் தமிழர்கள் எப்படி ஆண்டு விழாக்கள் நடத்தியிருக்க முடியும்…..காலக் கணிதத்தைப் பற்றி கவலைப் படாத தமிழன் வாழ்வியல் இன்பத்தை அதன் போக்கிலேயே அனுபவித்திருப்பான்….அதனாலேயே வந்தாரை வாழவைக்கும் தமிழனாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மார்ச் 21ல் தொடங்கும் ஆண்டின் கணிதம் சாயன முறையைச் சார்ந்ததாகும். அங்கு தான் சைத்ர மாதம் தொடக்குகிறது.. இதை இந்தியர்கள் சக ஆண்டின் தொடக்கம் என்றும் பிரித்துள்ளனர்…..

நாம் தமிழகத்தில் கொண்டாடும் ஏப்ரல் மாதம் 14 தேதி நிராயன முறையைச் சார்ந்ததாகும்….( அதாவது மேசப் புள்ளியை தொடக்கமாகக் கொண்டு கணிப்பதாகும்) தற்பொழுது இந்தியாவில் பெறும் பகுதியினர் சோதிடம் பார்க்கும் கணிதமுறையாகும்.

எனவே தமிழர்களுக்கு ஆண்டுக் கணிதம் என்று ஒன்று இல்லை..அப்படியே சமஸ்கிருத கணிதத்தை ஏற்றுக்கொண்டனர்..ஏப்ரல் 14{ சித்திரை 1,என்பது சமஸ்கிருத ஆண்டின் தொடக்க நாளாகும்.}

தை 1 தேதி தமிழர்களின் ஆண்டு தொடங்குகிறது என்றால் அதுவும் உத்தராயண காலத்தின் தொடக்க காலமாகும்….

உண்மையில் எந்த ஒரு தேதியிலும் தமிழர்களின் ஆண்டு விழாவைக் கொண்டாடலாம்…ஏனெனில் தமிழனக்குத் தான் ஆண்டுக் கணிதமே இல்லையே !!!!!!

{ கேரளாவில் ஆவணி மாத பௌர்ணமி திருவோணமே ஆண்டுத் தொடக்க நாளாகும்…}

கடந்த 700 ஆண்டுகளாக தமிழரை தமிழன் ஆட்சி செய்யவில்லை என்பது அறிஞர் அனைவரும் அறிந்ததே…
அதற்கு முன்னர் நாடு பிடிக்கும் போராட்டம் ..அதனால் அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை …அதனால் வடமொழி கற்றறிந்த பெரியோரின் சொற்களைக் கேட்டிருப்பார்கள்..அவற்றில் உண்மை இருந்ததால் அப்படியே ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள்….

எப்படியிருப்பினும் காலக்கணிதம் இல்லாத தமிழன் எந்த தேதியில் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடினாலும் அதில் தவறு இல்லை. எழுதுவதற்கு வருத்தம் தான்... உண்மை எழுதத் தூண்டுகிறது....

தமிழ் வாழ்க !   தமிழ் வாழ்க!!   தமிழ் வாழ்க!!!!

மிக்க நன்றி............

Professor Dr.T.Vimalan. Ph.D.


 








Monday 12 January 2015

சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்....12-01-2015


அன்புடையீர் ,வணக்கம்…..நமது முகநூல் நண்பர் ஒருவர் சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன ???? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன என்று எழுதுமாறு கேட்டார். அதற்கான விளக்கங்கள் ………………………………………………………………………………..

சோதிடரிடம் சாதகத்தைக் கொடுக்கலாம். அல்லது தற்காலத்தில் கணனி வசதியுடன் கூடிய சோதிடர்கள் இருப்பர் .அவர்களிடம் உங்களது பிறந்த தேதி, நேரம்,ஊர். முதலியவற்றை கொடுத்து விடுங்கள்……அவர் எந்த முறையில் சோதிடப் பலன்கள் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்……( தற்காலத்தில் சோதிடர் கூறும் பலன்கள் அனைத்தையும் கைபேசியின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.) அந்த முறையின் அடிப்படையில் பலன்கள் கூறச்செய்யுங்கள்…….முக்கியமாக மற்ற சோதிடரைக் குறை கூறும் பேச்சை தவிர்க்கச் சொல்லுங்கள்..அவருடைய கருத்தை மட்டும் கூறச் செய்யுங்கள்……..அதுவே போதுமானதாகும்……

கேட்க வேண்டிய கேள்விகள்


1 உங்கள் இலக்னத்தின் பொதுப் பலன்களைக் கேளுங்கள்….
உங்கள் சாதகப் பலன்களின் பொதுப் பலனாக,, இலக்னத்தின் பலன்களைக் கேளுங்கள்…..இதில் எத்தனை விழுக்காடு சரியாக வருகிறதுஎன்று பாருங்கள்….

2 பன்னிரு பாவகத்திலும் கோள்கள் இருக்கும் பலன்கள், பாவக அதிபதி மாறி நிற்கும் பலன்களை இணைத்து கூறும் பலன்களைக் கேளுங்கள்….

3 கூட்டுக்கோள்களின் பலன்களைக் கேளுங்கள்……

4 சிறப்பு அரச யோகப் பலன்களைக் கேளுங்கள்….

5 தசா புத்திப் பலன்களைக் கேளுங்கள்…..

ஒரு சிறந்த சோதிடர் மேற்கண்ட ஐந்து கேள்விகளிலுமே அனைத்துப் பலன்களையும் கூறி விட முடியும்……… அவ்வாறு கூறாமல் குறைத்து கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்…..அதற்காக  சில கேள்விகளைக் கேட்கலாம்..
படிப்பு
தொழில்
திருமணம்
மனைவி / கணவர் எவ்வாறு இருப்பார்கள்.
செல்வம்
குழந்தைகள்
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

கடன்
நோய்
நஸ்டம்
துன்பம்
தர்ம காரிய சிந்தனை
போன்றவற்றை மட்டும் கேட்டால் போதும்…….
----------------------------------------------------------------------------------------------------------------------------

கேட்கக் கூடாத கேள்விகள்?????

         முன்னர் நடந்த பிறப்புகள்,,,,இறப்புகள் பற்றி கண்டிப்பாக கேட்கக் கூடாது…  ஏனெனில் சரியாகச் சொல்கிறேன் என்று கூறி தோசங்களை அதிகப் படுத்தி உங்களைப் பயமுறுத்தி பரிகாரச் செயல்களில் ஏமாற்றி விடுவார்கள்……………எந்த ஒரு பரிக்காரத்தினாலும் எதையும் மாற்றிவிட முடியாது….அனைத்தும் ஏமாற்றும் வேலையே……

             தோசங்கள் ஏதாவது இருக்கிறதா ? என்ற கேள்வியைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் தோசமில்லாத சாதகம் உலகில் இல்லை…..எனவே பயந்து பரிகாரம் நீங்களே கேட்காதீர்கள்…..அதற்குப் பதிலாக உங்கள் கேள்விக்கான செயல்கள் எப்பொழுது நடக்கும் என்று கேட்டு அதை ஞாபகத்துடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்………நடக்கவில்லை என்றால் அவரை தவிர்க்கலாம்…….

          நீங்கள் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அக்கேள்விக்கான செயல் நடக்கும் காலத்தை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள்…………………………………செயலை நடக்கச் செய்கிறேன் என்று கூறுபவராக இருந்தால் அவரை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்………

           ஆயிரக்கணக்கான கேள்விகள் உள்ளன….அவற்றில் தற்பொழுது தேவையற்ற கேள்விகள் நிறைய இருக்கும்..அவற்றை எல்லாம் கேட்காதீர்கள். ஒருவர் சாதகத்தைக் கொண்டு இன்னொரு உறவினர்க்குப் பலன்கள் கேட்காதீர்கள்………கூடுமானவரை அவரவர் சாதகத்தைக் கொண்டு சாதகப் பலன்கள் பார்ப்பது மிகவும் பயனுடையதாகும்…..

          ருது சாதகம் என்று ஒன்றை எழுதாதீர்கள்..அதற்குப் பலன்களும் பார்க்காதீர்கள்….

         எடுத்தவுடன் பெண்களின் ஒழுக்கம் பற்றி பேசும் சோதிடரிடம் கவனமாக இருங்கள் ..அவர் உங்களையும் ஒழுக்கக்கேடாக சித்தரித்து விடுவார்………. சில செய்திகள் கேட்கப்பட்டாலே கூற வேண்டும்…….((((((((((( புத்தர் கூறுகிறார் ……………அவரவர் தனது மனதிற்கு ஒளியாக இருக்க வேண்டும்….என்கிறார்…)))).எனவே கீழ்த்தரமான செய்திகளைக் கூறும் சோதிடரை தவிர்த்து விடுங்கள்………………………

         எனது உடன் பிறப்பு,,,,,,,,,,குழந்தைகள் எத்தனை என்ற வினாக்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்…….ஏனெனில் இவை அனைத்தும் தற்காலத்திற்கு ஏற்ற கணீதங்களாக இல்லை……. மாறாக அவை கிடைப்பதற்கு சோதிடக் கோள்கள் துணை செய்கின்றனவா என்று கேட்கலாம்…….

       எனக்கு செல்வ யோகம் வருவதற்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்காதீர்கள்… அது அச்சோதிடரை செல்வந்தராக்கும்…உங்களை அல்ல…………….

       கோடீஸ்வரராகுவதற்கு ஏதாவது தொழில் கூறுங்கள் என்று கேட்காதிர்கள்….மாறாக எனக்குரிய தொழில் என்ன என்று கேளுங்கள்…..
((( நமக்குறியத் தொழிலைக் கூறும் பொழுது ..அதைச் செய்வதால் இலாபம் வரும் காலத்திலும் சரி…நஸ்டம் வரும் காலத்திலும் சரி நமது மனம் ஏற்றுக்கொள்ளச் செய்யும்………))))))))))))))) உலகில் ஒருவரை இலாபமாக்குவதும்…நஸ்டமாக்குவதும் அவருடைய தனிப்பட்ட சாதகத்தின் நேரமே ஆகும்….அதனால் காலம் கட்டாயமானதாகும்…..

        அதிர்ஸ்டத்திற்கு ஏதாவது வழியைக் கூறுகிறேன் என்றால் அதனால் முழுவதுமாக பாதிக்கப்படுவது நீங்களாகத் தான் இருக்கும்………

எதிர்காலம் எப்படி என்று கேள்விகள் அமைந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்……………. எதிர்காலப் பலன்களை மாற்றி அமைக்கும் கேள்விகள் இருந்தால் அவர்கள்(((((((((( மாற்றுகிறேன் என்பவர்கள்)))))))) நன்றாக இருப்பார்கள்……..

எதிர்காலப்பலன்கள் துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ எப்படி இருப்பினும் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் மக்களும் வாழ்வர்,,சோதிடர்களும் வாழ்வர்..


வாழ்க சோதிடம்!!!!!!!!!!!!!
 THANKS…

PROFESSOR DR. T.VIMALAN. Ph.D.


12 / 01 / 2015 ..

Thursday 8 January 2015

சோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்---08 / 01 / 2015....


சோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

உலகில் பல கலைகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் மானுடத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு பயன் படுவதில் முதன்மையான கலையாக சோதிடத்தை தான் கூற முடியும்.     இந்த சோதிடக்கலையானது,,,,  வானசாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கலைகள் எவற்றையும் சாராமல் 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

மிகவும் பழைமையான சோதிடக்கலை தனக்கே உரிய வகையில் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த மனிதர்களால் வளர்க்கப்பட்டதாகும். அதிலிருந்தே மானுடத்திற்கு இச் சோதிடக் கலையின் பயன் எவ்வாறு இருந்துள்ளது என்று யூகித்துக் கொள்ளலாம்.

உலகில் உள்ள பல நாட்டவர்களின் கூட்டு உழைப்பின் முழு வடிவமாக தற்பொழுதுள்ள சோதிடக்கலையைக் காணலாம்…. உலகில் உள்ள நாடுகளில் சோதிடத்தை அதிகமாக பயன் படுத்துவது இந்தியாவாகும்…..இதை ஒரு சிறப்பாகவே கூறலாம்….

இந்திய சோதிடம் வானசாத்திரத்தை மையமாகக் கொண்டாலும் எதிர் காலப்பலன்களைக் கண்டுபிடிப்பதில் பல விதிகளை வகுத்துள்ளது…அவ்விதிகளைக் கொண்டு எதிர்காலத்தில் நடைபெறும் ,நற்பலன்கள்,தீயபலன்களை வரையறுக்கிறது…அவற்றைக் கொண்டு எதிர்காலத்தின் பலன்களை மக்களுக்கு கூறுகின்றது..

மிகுதியானப் பலன்கள் சோதிடம் கூறியது போல் நடைபெறுவதால் நம் மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒருகலையாக இடம் பெற்றுள்ளது……



சில வினாக்கள் ;

 1.அப்படியானால் சோதிடம் ஏன் எதிர்க்கப் படுகிறது???

சோதிடத்தை எவரும் எதிர்க்கவில்லை. சோதிடம் என்ற பெயரைக் கொண்டு மாற்று வழிச் சிந்தனைகளைக் கூறுவதால் எதிர்க்கப் படுகிறது…
சொதிடத்தில் கூறப்பட்ட பொதுவானப் பலன்களை அப்படியே தனி ஒரு சாதகருக்கு கூறுவதினால் எதிர்க்கப்படுகிறது. ( பெண்களின் ருது சாதகப் பலன்களில் ,,,செவ்வாய்கிழமை ருதுவானால் விதவை என்று பொதுவாகக் கூறப் பட்டிருக்கும்..இப்பலனை அப்படியே கூறுவது ) இதனால் 
தற்பொழுது பெண்களுக்கு ருது சாதகம் எழுதுவது மிகவும் குறைந்துள்ளது.

அதேபோல் தீய கோள்கள் எட்டில் இருந்தால் அதற்குரியப் பொதுப் பலன்களைக் அப்படியே கூறுவது… இவை போன்று பல் வேறு நிலைகளைக் கூறலாம்.

ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு எதிர்காலப் பலன்களை மாற்றுகிறேன் என்பதால் எதிர்க்கப் படுகிறது…இவை போல் நிறைய உள்ளன..…
ஆனால் சில ஆன்மீகப் பெரியோர்கள் சோதிடத்தை மறுத்துள்ளனர்…

.எடுத்துக்காட்டாக   சுகபோதானந்த சுவாமிகள் தங்களது மனமே ரிலாக்ஸ் என்கிற கேசட்டில் HOROSCOPE சாதகம் என்பதை/////////////  HORROR SCOPE திகில்கலை என்று கூறியுள்ளார்……ஏன் அப்படி கூறியிருப்பார் என்று சிந்தித்தால் ஒருவருக்கு அச்சம் தரும் பலன்களைப் பெரிது படுத்திக் கூறுவதால் இந்த முடிவிற்கு வந்திருக்கலாம்…
 
இவர்களைப் போலவே சக்கிவாசுதேவ் சுவாமிகளும் சோதிடம் வேலையா செய்கிறது..என்று கேட்டுள்ளார்……..

இவர்கள் எல்லாம் ஆன்மீகப் பெரியோர்கள் இவர்கள் தங்கள் ஆன்மீக வழிகளில் மானுடப் பிரச்சனைகள் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள். ஆதலால் இவர்களுக்கு சோதிடம் பெரிதாகப் படவில்லை..எனவே சோதிடம் பற்றிய இவர்களது முடிவுகள் மாறுபட்டதாகிறது…

ஆனால் தத்துவாதியான ரஜனிஸ் ஓசோ அவர்கள் இப்படிக் கூறவில்லை…அவர் சோதிடம் பற்றிய தனது கருத்தில் அழகான முடிவை கொடுத்துள்ளார்…..சோதிடம் ஒரு நல்ல கலையாகும்.. அக்கலை மானுடத்தின் எதிர்கால நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது என்கிறார்….

எதிர்காலத்தில் நடைபெறும் நற்பலன்கள், தீயபலன்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதால் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய தேவையற்ற அச்சத்தைப் போக்குகிறது என்கிறார்…….

உண்மையில் நமது சோதிடத்தை உருவாக்கிய அக்காலச்  சோதிடப் பெரியோர்கள் எதிர்காலப் பலன்களை அப்படியே கூறியுள்ளனரே தவிர மாற்று வழி சிந்தனைகளைக் கூறவில்லை….அதனாலேயே சோதிடக்கலை பலரால் நம்பப்பட்டு வளர்ந்து வந்துள்ளது………

ஆனால் தற்கால அறிவியல் வளர்ச்சியில் சோதிடம் வளர வேண்டு மானால் சோதிடப்பலன்களை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதிலேயே உள்ளது…..

2. தலையெழுத்தை மாற்ற முடியாது என்றால் சோதிடம் பார்ப்பதினால் என்ன பலன்?????

எத்தனையோ நன்மைகள் உள்ளன…. …எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிவதால் அதற்கு தகுந்தாற்போல் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்வர்.
தீயபலன்களைத் தெரிந்து கொள்வதால் அவற்றை முழுமனதுடன் ஏற்று கொண்டு குழப்பம் அடையாமல் வாழ்க்கையை நடத்துவர்…

3 எதிர்காலத் தீயபலன்களை அறிவதால் அச்சம் ஏற்படாதா??//

நிச்சயமாக அச்சம் ஏற்படாது…தனக்கு இப்படி தான் நடக்கும் என்பதை அறிந்த எவரும் மனக்குழப்பமோ வருத்தமோ, அதிர்ச்சியோ அடைய மாட்டார்கள்…..
6—8---12----ஆகிய பாவங்களின் பலன்களை மறைத்துக் கூறச் சொல்லி தான் சோதிடப் பெரியோர்கள்…கூறியிருப்பர்……{ஆனால் தற்பொழுது அவை மறைவு வீடு என்றுள்ளது }…அதன்படி இப்பாவங்களின் பலன்களை மிகைப் படுத்தாமல் பக்குவமாக எடுத்துக் கூறி ஏற்றுக்கொள்ளச் செய்வதிலே சோதிடரின் அனுபவம் இருக்கிறது..

சோதிடம் எதிர்காலப் பலன்களைக் கூறும் அற்புதமானக்கலையாகும். இக்கலைபோல் வேறு எந்தக் கலையும் இல்லை…ஆலயத்திற்கு சென்றால் கூட அங்கு அவரே பேசி,,அவரே முடிவெடுப்பார்…………………………..
ஆனால் சோதிடம் பார்த்தால் எதிர்காலம் பற்றிய அச்சத்தைப் போக்கி செயல்களை பற்றுடன் செய்வதற்கு வழி ஏற்படும்

 4.அப்படியானால் சோதிடம் மானுட முயற்சியைத் தடுக்கிறதா??//

நிச்சயமாக இல்லை…மாறாக மானுட முயற்சிகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது………சோதிடம் ஒரு பொழுதும் ஒருவரின் செயலை நிறுத்துவதற்குப் பலன்களை ஏற்படுத்தவில்லை………………………… எதிர்காலத்தில் என்னென்ன முடிவுகள் ஏற்படும் என்று கூறுகின்றது….

5.அப்படியானால் ஒவ்வொருவரும் சோதிடப்படி வாழ்வை அமைத்துக் கொள்ளலாமா????

இது அவரவர் விருப்பம்……தேவையானவர்களுக்கு பயன்படும் கலையாகும்….ஒருவர் விரும்பினாலும்..விரும்பாவிட்டாலும் ..அவரின் வாழ்வை சோதிடத்தின் மூலமாக எளிதில் அறியலாம்….

மானுடத்தின் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் ஒரே கலை சோதிடமாகும்……..உலகில் வேறு எந்த கலைக்கும் இல்லாத சிறப்பான அம்சமாகும்….

நாம் சோதிடத்தில் கூறியுள்ள அடிப்படை விதிகளைக் கொண்டு எதிர்காலப் பலன்களை மட்டும் கூறினால் சோதிடமும் வாழும்…நாமும் வாழுவோம்…..


மிக்க நன்றி……………………………………………….professor..vimalan. 

08-01-2015..

Saturday 3 January 2015

சோதிடமும்--சாதியியமும்.....ஒரு பார்வை..04 / 01 / 2015.....


அன்புடையீர் வணக்கம்…
சோதிடத்தில் சாதிய அமைப்பு உள்ளதா என்று பலர் கேட்கின்றனர்…..இந்த வினாவிற்கு விடையாக சில செய்திகளைச் சொல்லி பின்னர் சோதிடத்தில் எவ்வாறு சாதிய அமைப்பு உள்ளது என்று பார்ப்போம்.

இந்திய சோதிட முறை :

யவண சாதகம்,சத்யாச்சாரியார், ஜீவசர்மா,வராகமிகிரர்.பொன்ற சோதிடப் பெரியோர்களின் சாதகப் பலன்கள் கூறும் நூல்களின் வருகைக்குப் பின்னரே இந்திய சோதிடம் பெறும் வளர்ச்சி பெற்றது. இவர்கள் எழுதிய சோதிடப்பலன்கள் அனைத்தும் அடிப்படை விதிகள் மாறாமலும் ஒருசில கருதுகோள் சிந்தனைகளுடன் கூறப்பட்டவையாகும். உண்மையில் அன்பர்களே சோதிடவியல் பலன்களை எழுதியவர்கள் சோதிடர்களே !!!!மற்றவர் எவரும் எழுதவில்லை….ஆதலால் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் பொதுவானவையாகவே இருக்கின்றன….

.எ.கா. மேசராசிக்கு ஒருபலனைக் கூறினால் அப்பலன் மேசராசியில் பிறந்த அனைவருக்கும் கூறியதாகும். தனிஒரு மனிதருக்கு கூறப்படவில்லை. பின்னர் இப்பலன்களை தனி ஒரு மனிதருக்கு எப்படி கூறுவது என்ற வினா எழுகிறது…..அதற்காகவே பலன்கள் கூறும் பொழுது

காலம்,தேசம்,,வர்த்தமானம்,சாதி,மதம்,நிறபேதம், 
யுக்தி,சுருதி,அனுபவம் என்பதை கருத்தில் கொண்டு பலனுரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,

அப்படியானால் சோதிடவியல் பலன்களை நூலில் கூறியவாறு அப்படியே எடுத்துரைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது……ஏனெனில் அவை அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்..எனவே சரியான பலனைக் கண்டு பிடிக்க மேலே கூறப்பட்ட வழிகளைக் கடைபிடிக்கவேண்டும்…..

காலம்:
காலம் என்பது மிகவும் முதன்மையானதாகும். நமக்கு பலன்கள் கூறுவதற்கு எழுதப்பட்ட நூல்களின் காலம் பழமையானதாகும்.. அக்காலத்தில் இரும்பு சம்பந்தமான தொழில் என்று எழுதியிருப்பர். அதே கூற்றை தற்பொழுது கூறினால் தவறாக வரும்.. ஏனெனில் தற்பொழுது இரும்பு சம்பந்தமான தொழில் என்பதிலிருந்து மாறி தனித் தனியாக தொழிலைக்கூறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. எனவே காலத்திற்கு ஏற்றாற் போல் பலனைக் கண்டு பிடிக்கவேண்டும்.

மற்றொரு காலம் என்பது இயற்கையைச் சார்ந்ததாகும். எந்தப் பலனை எந்தக் காலத்தில் கூறினால் சரியாக வரும் என்று ஆராய்ந்து கூற வேண்டும். பருவமாற்றங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்……

தேசம்:

ஒவ்வொரு ஊரிலும் வாழ்வியல் முறை மாற்றமுடனே காணப்படும். தங்களுடைய கலாச்சார அமைப்பிற்கு ஏற்ப சில விதிகளையும். விலக்குகளையும் ஏற்படுத்தியிருப்பர். அவை சோதிடத்தின் பலன்களை குழப்பமடையச் செய்யும்.

எ.கா…..குஜராத்தில் மக்கள் அதிகமாக மது அருந்துவதற்கு வாய்ப்பில்லை. எனவே சோதிடத்தில் அவை சம்பந்தமான பலன்களைப் பார்த்துக் கூற வேண்டும்…அதேபோல்  தமிழகத்தில் மக்கள் மது அருந்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு சோதிடப்பலன்களை இதற்கு ஏற்றாற் போல் கூறவேண்டும்…….இவை போல் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் தங்கள் வசதிக்கு விதிகளை ஏற்படுத்தி வாழ்வதால் பலன்களை அவற்றிற்கு தகுந்தாற்போல் கூற வேண்டும். (ஊத்துக்குளி- வெண்ணைத் தொழில்//////திருப்பூர்-துணித் தொழில்)

வர்த்தமானம்;

உண்மை நிலை.அதாவது யதார்த்தமான நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதுவும் பலன் கூறுவதற்கு பயனுள்ளதாகும். தற்பொழுதுள்ள மாற்றங்களை அறிந்து கொண்டே இருத்தல் வேண்டும்..அதனாலேயே சரியான பலன்களைக்கூற முடியும்

சாதி (ஜாதி);

சோதிடம் சொல்வதிலேயே மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது..
சாதி,,சாதி,,,சாதி………என்னய்யா இந்த சாதி ? சாதியை வைத்து அப்படி என்ன பலன்களைக் கண்டு பிடிக்கமுடியும்??
இந்தியாவில் எங்கு பிறந்தாலும் அவர் சாதி என்ற அமைப்பிற்குள் கட்டாயம் வந்து விடுவார். ஏற்றுக்கொள்கிறோமோ,,, மறுதளிக்கிறோமோ,,,சாதி என்பது நமது தலைமேல் உட்கார்ந்து விடும். இதை மாற்ற எவராலும் முடியாது…..இந்து சமயமே சாதிகளுக்கு வித்திட்ட சமயமாகும்….

இந்துசமய சாதிய அமைப்பு::;…….இந்துசமயத்தை தோற்றுவித்த காலத்தில் நான்கு வர்ணங்களில் மக்கள் பிரிக்கப்பட்டனர். அவை 1.அந்தண்ர். / 2.சத்திரியர் / 3. வைசியர் / 4.சூத்திரர்..ஆகியனவாகும். பின்னர் சற்சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்றெல்லாம் பிரித்தனர். இவ்வாறு வர்ணங்கள் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய தொழில்களும் பிரிக்கப்பட்டன……..இதன் வழியாக வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது…

பின்னர் கி.மு முதலாம் நூற்றாண்டில் மனு தர்ம சாத்திரம் என்ற நூல் உருவாக்கப் பட்டது…..இது ஒன்றே இந்து சமயத்தில் சாதிகளை உருவாக்கி அவரவர் செய்யும் தொழிலையும் கூறியது.
மனுதர்மம்… இந்த ஸ்மிருதி நூலில் தான் இந்துக்களுக்குரிய சாதிய அமைப்பும் ,,,,புனிதம்//தீட்டு..போன்ற விதிகளும் கூறப்பட்டன. எப்படியெனில் மேலே கூறப்பட்ட நான்கு வர்ணத்தினரும் தமது வர்ணங்களில் திருமணம் செய்வதை விட்டு விட்டு. வேறு வர்ணத்தினரையும் திருமணம் செய்தனர். அதனால் வர்ணக் கலப்பு ஏற்பட்டன. இதன் விளைவாக பிறந்த குழந்தை எந்த வர்ணத்தை சார்ந்த்து என்று பிரிக்க முடியவில்லை..

ஏனெனில் ஆண்.பெண் இருவரும் ஒரே வர்ணத்தில் திருமணம் செய்து பெற்றெடுக்கும் குழந்தையே அதே வர்ணமாகும். வர்ணக்கலப்பில் பிறக்கும் குழந்தை எந்த வர்ணத்தையும் சாராமலே இருக்கும்..இவ்வாறு பல பிரச்சனைகள் உருவானதால் மனுஸ்மிருதி மூலம் தீர்வு காணப்பட்டது..

வர்ணக்கலப்பு;; அனுலோமர்////ப்ரிதிலோமர் என்று பிரித்து வர்ணம் இல்லாத சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த சாதிகளுக்குள்ளும் உட்பிரிவுகளாகப் பிரித்து,பிரித்து நூற்றுக்கணக்கான சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. இவர்கள் அனைவருமே சூத்திரர்களாகவும்,, சூத்திரர்களுக்கும் கீழானவர்களாகவும் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட அனைவரும் செய்ய வேண்டிய தொழில்களையும் பிரித்தனர்.

.{ எப்படி வர்ணங்களைப் பிரித்து தொழில்களை ஏற்படுத்தினரோ…...அதேபோல் சாதிகளைப் பிரித்து அவர்களுக்குரிய தொழில்களையும் ஏற்படுத்தினர்.அவற்றின் அடிப்படையில் தீட்டுடையவர்கள் என்றும் பிரித்து விட்டனர்..} 

சாதியைப் பிரித்த பின்னரே தொழில்களை ஏற்படுத்தினர்….மாறாக தொழிலை வைத்து
சாதிகளைப் பிரிக்கவில்லை. எனவே மனுஸ்மிருதியினால் சாதிகளும் அவர்கள் செய்யும் தொழிலும் பிரிக்கப்பட்டதால் மக்கள் வேறு தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை..

இதனால் சோதிடத்தில் உள்ள பொதுப்பலன்களைக் கூறும் பொழுது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன..சாதகம் பெரிய அரசயோகமாக இருக்கும்.ஆனால் அவர் சாதியமைப்பில் அடிமை வேலை தான் பார்த்துக்கொண்டிருப்பார்…அரசயோகம் எல்லாம் வேலை செய்யாது…………………...அதேபோல் உருப்படாத மேல்சாதிக்காரர் சாதகமாக இருக்கும்.அவர் நல்ல சுக போகத்தில் இருப்பர்……………….. இதனாலேயே சாதிகளை அறிந்து பலனுரைக்க வேண்டும் என்றுள்ளது…. மற்றொருகாரணமும் உள்ளது இன்னமும் நமது மக்கள் அவரவர் சாதிக்குரிய தொழில்களைச் செய்வதைக்காண முடிகிறது….

இப்பொழுது சொல்லுங்கள் சோதிடப்பலன்கள் கூறுவதில் சாதியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று……  நமது இந்திய கிராமங்களில் வாழும் மக்களில் பெருவாரியானயனவர்கள் தங்களது சாதியத் தொழிலையும், சாதியத்திற்கான செயல்களையும் செய்து வருகின்றனர்.. எனவே இந்திய சோதிடவியலில் சாதிய அமைப்பைப் பார்த்து பலனுரைப்பது இன்றியமையாகிறது……….

மதம்:

உலகில் உள்ள மானுடர்கள் அனைவருக்கும் எதிர்காலப் பலன்களைக் கூறக்கூடியது சோதிடக்கலையாகும். எனவெ உலகில் மதத்தினர்க்கு ஏற்றாற்போல்பலன்களைஎடுத்துரைக்கவேண்டும்..ஒவ்வொரு மதத்தினரின்  செயல்கள்,தொழில்கள் போன்றவற்றை பிரித்து அறிந்து அவர்களுக்கு ஏற்றாற் போல் பலனுரைக்கவேண்டும்….  மதங்களுக்குரிய மாற்று விதிகளையும் அறிய வேண்டும்,,[சில மதங்களில் மாமிசம் சாப்பிடுவது புனிதமானது……….சிலமதங்களில் மாமிசம் சாப்பிடுவது தீட்டானது.} எனவே இவற்றின் பிரிவுகளை அறிந்து பலனுரைக்கவேண்டும்…மதத்தின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு தகுந்தாற்போல் பலனுரைக்க வேண்டும்..

நிறபேதம்:
அய்யா….இலக்னத்தில் சனி இருக்கிறது என்று. அனவரையும் அழகற்றவர் என்று கூறக்கூடாது….அதேபோல் இலக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது என்று அழகானவர் என்றும் கூறமுடியாது….எனவே இவற்றை மற்ற அமைப்புகளான மேலே கூறியவற்றை கணக்கில் கொண்டு பலனை க்கூற வேண்டும்…இவை போல் பல்வேறு பொதுப்பலன்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நிறபேதத்தை அறிந்து பலன் காண வேண்டும்…….

யுக்தி :

சோதிடப் பலன்கள் கூறுவதில் அதிகமாக பயன்படுவது யுக்தியாகும்….இந்த யுக்தியானது எவரிடம் இல்லையோ அவரால் சோதிடப் பலன்களைக் கூறமுடியாது…பலன் கூறும் பொழுது..யூகம் என்பது கண்டிப்பாக வந்துவிடும்…

மேலே கூறப்பட்ட காலம், தேசம் போன்றவற்றை கணக்கில் கொண்டு சரியாக யூகித்து பலன்களைக் கூற வேண்டும்

சுருதி;

சோதிடப் பலன்களும்,,கணிதங்களும் கூறுகின்ற நூல்களாகும்..அல்லது விதிகளாகும். இவை கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர அப்படியே எடுத்துப்போட்டு பலன்களைக்கூற முடியாது..அனைத்து இடங்களிலும் 1+1= 2..என்கிற முடிவு வராது..அதனாலேயே இக்கலை முழுமையான அறிவியல் ஆக முடியாமல் உள்ளது….

பாரம்பரியம்,,கே.பி.,.சாரம்,மேற்கத்தியம், நாடி,, போன்ற அனைத்திலுமே பலன்களில் தடுமாறும் நிலையிருக்கும்…ஏனெனில் நாம் கண்டுபிடித்து கூறுகின்ற சில பலன்கள் நடைபெறாமலே போய்விடும்…அதனால் யூகித்து அறிந்து பலனைக்கூற வேண்டும்.

அனுபவம் ;

எங்கு பலன்களக்கூறுகிறோம், யாருக்கு கூறுகிறோம் எப்படி கூறுகிறோம்,,,என்ற அனுபவம் மிகவும் முக்கியமானதாகும். சனி தசா அனைத்து வயதினருக்கும் வரும்…எல்லொரும் நூலில் கூறியபடி பலன்களை அப்படியே அனுபவிக்க மாட்டார்கள்…துன்பம் என்பது ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டதாகும்…அதனால் அனுபவம் கொண்டு பலனுரைக்க வேண்டும்…

அதேபோல் அனுபவத்தினால் எளிதாகப் பலன்களைக்கூற முடியும்.
எனவே

காலம்,தேசம்,,வர்த்தமானம்,சாதி,மதம்,நிறபேதம், யுக்தி,சுருதி,அனுபவம் தேவையென்றாலும் இவற்றில் முக்கியமாக சாதியம் வந்து விடுகிறது..

சமுதாயக்கலாச்சாரம் சாதியத்தையும்,,மதத்தையும் வைத்து ஏற்படுத்தியிருப்பதால் அவற்றின் அடிப்படையில் வாழும் மனிதர்களுக்கு பலன்களைக் கூறும் பொழுது அவர்களின் மதத்தையும்,,சாதியத்தையும் வைத்தே பலன் கூறும் நிலையில் சோதிடம் உள்ளது…

என்னதான் சாதிகள் இல்லையடி பாப்பா என்றாலும் இந்துவாகப் பிறந்தவர் அனைவரும் சாதிகளுக்குள் வந்து தான் ஆக வேண்டியுள்ளது……சாதிகள் இல்லையென்றால் இந்துமதமே இல்லை…..

இந்து சமயத்தின் அடிப்படை ஆணிவேரே சாதிய அமைப்பாகும்…….அதனால் சோதிடப் பலன்கூறுவதில் சாதியமைப்பு தவிர்க்க முடியாததாக உள்ளன…….
 
மிக்க நன்றி……

Professor.Dr.Vimalan…… 

04-01-2015.