Wednesday 24 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்- 4 --24/09/2014

இனக்குழு சமயத் தெய்வங்கள் ; இனக்குழு வாழ்க்கை என்பது சமயத் தோற்றங்க்ளுக்கு முன்னர் வாழ்ந்த அமைப்பாகும். ஆதலால் இங்கு தெய்வங்கள் என்பது இயற்கையில் உள்ள மரம்,மலை,விலங்கு,சில குறீயீடுகள், தாய் தெய்வங்கள்,மூதாதைகள் போன்று சில சிலைகளை உருவகப்படுத்தி  குறீயீடு வழிபாடுகளாக அமைக்கப்பட்டது. சமய நூல்கள் இருக்காது, மாறுபடக்கூடிய விதிகளே ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆடல்,பாடல். கொண்டாட்டங்கள் என்று தெய்வீக வழிபாடுகள் இருக்கும். நிலையான குறீயீடுகள் தெய்வங்களாக இருப்பதில்லை.சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் குறியீடுகளும் மாறிக் கொண்டே இருக்கும். எனவே இனக்குழு மானுடம் தனது தெய்வீக வழிபாட்டில் இயற்கையின் குறியீடுகளை தெய்வமாக வழிபாடு செய்தனர். 
பரிணாம வளர்ச்சியில் ஆண் தனது துணையின்றி பெண்கள் மக்கட் பேறு அடைய முடியாது என்று எப்பொழுது அறிந்து கொண்டானோ அப்பொழுதிலிருந்து தனது ஆதிக்கத்தை இனக்குழுவில் நிலைப் படுத்திக் கொண்டான். இதனடிப்படையிலேயே மொகஞ்சதாரோ நாகரீகத்தில் காணப் படும் லிங்கம் (யோனி) வழிபாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆதலால் இனக் குழுவினர் இயற்கைக் குறியீடுகளையும்,சிலைகளையும் வணங்கி வந்துள்ளனர். எனவே இந்தியர்களின் ஆதி மக்கள் உருவ வழிபாடுடையவர் ஆவர். 
நதிசார்ந்த வாழ்வியல் அமைப்பு; கி.மு.4000--2000 வரை வாழ்ந்த சிந்து சமவெளி மக்களும் தங்களுடைய தெய்வீக வழிபாட்டில் உருவ வழிபாட்டு அமைப்பையும் வணங்கியுள்ளனர். இவர்களே சிந்து நதி நாகரீகத்தினர் என்று பாரசீக கலாச்சார மக்களால் அழைக்கப்பட்டனர்.(பாரசீகக் கலாச்சாரம்-யூப்ரடீஸ்,டைகிரீஸ் நதி சார்ந்ததாகும்.) பாரசீகர்களால்,சிந்துக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் நாளடைவில் சிந்து என்ற சொல் பிறழ்ந்து இந்து என்று ஆனது. அதிலிருந்து சிந்து நதிக்கு கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் இந்துக்கள் என்றுஅழைக்கப்பட்டனர். இவர்கள் வழிபடும் தெய்வீக அமைப்பிற்கும் இந்துசமயம் என்றும் பெயர் ஏற்பட்டது. ஆனால் தற்பொழுது நாம் கூறிக்கொண்டிருக்கும் இந்துசமயத்திற்கு (வேதகால கலாச்சாரம்) உருவ வழிபாடு என்பது இல்லை, கோயிலும் இல்லை.