Wednesday 24 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்.5---25/09/2014.

 திராவிடர்கள் : ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த மக்களை  திராவிடர்கள் என்றே அழைக்கின்றனர். இவர்களுக்குள் இனக்குழு பிரிவுகள் தான் இருந்துள்ளன. சாதிய அமைப்பு ஏற்படுத்தப் படவில்லை. ஆதலால் குழுக் குழுவாக வாழ்ந்த இவர்களுக்கு பொதுத் தெய்வ வழிபாடுகள் இல்லை. பொது ஆட்சியமைப்பும் இல்லை. எனவே இயற்கையில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தனர். மாமிச உணவும் உண்டு. சைவ உணவும் உண்டு. தங்கள் இனக்குழுவிற்குள்ளேயே திருமணம் நிகழ்த்தப் பட்டதால் மற்ற குழுவுடன் தொடர்புகளும் இல்லாமல் வாழ்ந்துள்ளனர். தங்கள் கடவுள் வழிபாடுக்கு என்று தனி ஒரு இடத்தையும் தேர்வு செய்துவழி பட்டனர். இவர்களுடைய உடலின் நிறம் கருப்பு ஆகும். ஆரியர் வருகைக்குப் பின்னர் இனக்குழுவினருடைய குறீயீடு,உருவ வழிபாடுகள் அழிக்கப் பட்டன. பொதுத் தெய்வ வழிபாடுகள் ஏற்படுத்தப் பட்டன. கடவுள் வழி பாட்டிற்குரிய இடங்களும் அழிக்கப்பட்டன.

இந்தோ--ஐரோப்பியர்கள்: ஐரோப்பாவில் உள்ள வால்கா நதி சார்ந்த மக்களின் தொடர்ச்சியான இடமாற்ற வாழ்வே இந்திய ஐரோப்பிய கலாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் நதி சார்ந்த இடப் பெயர்ச்சியினால் பல் வேறு கலாச்சாரப் பெயர்களையும் பெறுகின்றனர். இவர்களின் இடப்பெயர்ச்சியின் காலம் கி.மு.4000 க்கு முன்பிருந்து தொடங்குகிறது. இந்திய ஐரோப்பியர்கள் தங்களுடைய உணவு ,மேய்ச்சல் நிலங்களிற்காக குடி பெயர்ந்த பொழுது ஒரு பிரிவினர் கிரேக்கத்திற்கு சென்றனர். ஒருபிவினர் நைல் நதிக்கும், மற்றொருபிரிவினர் யூப்ரடீஸ், டைகிரிஸ் நாகரீகத்திலும் கலந்துள்ளனர். இக்குடிப்பெயர்ச்சி ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகள் கால இடைவெளியில் நடைபெற்றுள்ளன. ஆதலால் இந்தோ-ஐரோப்பியர்கள் தாங்கள் கலந்த கலாச்சாரப்பிரிவினரின் வாழ்வியல் அமைப்பில் ஒன்று பட்டனர். அதனால் கலப்புடைய கலாச்சார வாழ்வும் ஏற்பட்டன.
இவ்வாறு பிரிந்துபட்ட கலாச்சார அமைப்பில் யூப்ரடீஸ்,டைகிரீஸ் நதி சார்ந்த கலாச்சாரம்(இந்தோ-ஈரானியம்)நம்முடைய இந்து சமயத்திற்கு சிறிது பங்களிப்பும் செய்துள்ளது.