Monday 22 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--2

பகுத்தறிவு ; மானுடத்தின் உச்ச பட்ச வக்கிரமான அனைத்து செயல்களுக்கும் காரணமாகத் திகழ்வது பகுத்தறிவே ஆகும். இப்பகுத்தறிவு இல்லாமல் இருந்தால் மற்ற விலங்கினங்கள் போல் ஒரே துன்பத்துடன்(பசி)வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட பகுத்தறிவு மானுடத்தை மீள முடியாத துன்பத்தில் சிக்க வைத்துவிட்டது.எதை பகுப்பது என்று புரியாமல் அனைத்தையும் பகுத்து விட்டார்கள். இப்பவும் பகுத்து கொண்டேயிருக்கிரார்கள்.
         அச்சம்-துணிச்சல்/நல்லது-கெட்டது/துன்பம்-இன்பம்/கடவுள்-சாத்தான்/புனிதம்--தீட்டு/தலைவன் -தொண்டன்/உயர்வு-தாழ்வு /ஆண்-பெண் /போன்று ஆயிரக்கணக்கானஇருமைக்கொள்கைகளைக்கண்டுபிடித்துள்ளனர்.
இக்கண்டு பிடிப்புகளினால் மானுடம் தனக்கு நன்மை தரும் செயல்களை சிந்திக்கத் தொடங்கியது. அதன் விளைவால்ஏற்பட்டதேஉழைப்பாகும்.மற்ற விலங்கினங்கள் போல் உழைக்கத்தெரியாமல் இருந்த மானுடம், பகுத்தறிவினால் உழைப்பைக்கண்டுபிடித்து வாழ்வமைப்பை மாற்றி அமைத்தது.இதன் பெயரே கலாச்சாரமாகும். கலாச்சாரத்தின் கட்டமைப்புகள்    விதிகள்(சட்டங்கள்) என்ற வரையறைக்குள் அடங்குவதாகும்.
            மானுட உழைப்பினால் ஏற்படும் முடிவுகள் அனைத்தும் நன்மை-தீமை  என்று பகுக்கப்பட்டு அவற்றிற்கு தகுந்தாற் போல் கலாச்சாரக் கோட்பாடுகள் (விதிகள்)ஏற்படுத்தப்பட்டன.
          பகுத்தறிவைக் கொண்டு மானுடம் அச்சத்திலிருந்து விடுபடும் வழியை கண்டு பிடிக்கத்தொடங்கியது.அதன் ஒரு பகுதியே இறைக்கோட்பாடுகளாகும்

கடவுள் ; நன்மை கொடுக்கும் அனைத்தும் கடவுளுக்குப் பகுக்கப்பட்டது. தீமையைக் கொடுக்கும் அனைத்தும் சாத்தானுக்குப் பகுக்கப்பட்டது, எனவெ மானுடம் அச்சத்தின் பிடியிலிருந்து விடுபடும் அமைப்பாக கடவுள் கொள்கை ஏற்படுத்தப்பட்டது. கடவுளும்,சாத்தானும் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பர். கடவுள் இல்லை என்றால் சாத்தானுக்கும் வேலை இல்லை. அச்சம் கொடுக்கும் அனைத்தும் சாத்தான் செயலாகும். துணிச்சல் மிக்க செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகும். பகுத்தறிவு பெற்ற மானுடத்தின் முதற் கடவுள் இயற்கையாகும். இயற்கையில் உள்ள மரம், செடி,கொடிகள், விலங்கினங்கள், தங்கள் கூட்டத்தை காத்த முன்னோர்கள் போன்றவற்றை வணங்கி வந்துள்ளனர்.