Saturday, 3 January 2015

சோதிடமும்--சாதியியமும்.....ஒரு பார்வை..04 / 01 / 2015.....


அன்புடையீர் வணக்கம்…
சோதிடத்தில் சாதிய அமைப்பு உள்ளதா என்று பலர் கேட்கின்றனர்…..இந்த வினாவிற்கு விடையாக சில செய்திகளைச் சொல்லி பின்னர் சோதிடத்தில் எவ்வாறு சாதிய அமைப்பு உள்ளது என்று பார்ப்போம்.

இந்திய சோதிட முறை :

யவண சாதகம்,சத்யாச்சாரியார், ஜீவசர்மா,வராகமிகிரர்.பொன்ற சோதிடப் பெரியோர்களின் சாதகப் பலன்கள் கூறும் நூல்களின் வருகைக்குப் பின்னரே இந்திய சோதிடம் பெறும் வளர்ச்சி பெற்றது. இவர்கள் எழுதிய சோதிடப்பலன்கள் அனைத்தும் அடிப்படை விதிகள் மாறாமலும் ஒருசில கருதுகோள் சிந்தனைகளுடன் கூறப்பட்டவையாகும். உண்மையில் அன்பர்களே சோதிடவியல் பலன்களை எழுதியவர்கள் சோதிடர்களே !!!!மற்றவர் எவரும் எழுதவில்லை….ஆதலால் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் பொதுவானவையாகவே இருக்கின்றன….

.எ.கா. மேசராசிக்கு ஒருபலனைக் கூறினால் அப்பலன் மேசராசியில் பிறந்த அனைவருக்கும் கூறியதாகும். தனிஒரு மனிதருக்கு கூறப்படவில்லை. பின்னர் இப்பலன்களை தனி ஒரு மனிதருக்கு எப்படி கூறுவது என்ற வினா எழுகிறது…..அதற்காகவே பலன்கள் கூறும் பொழுது

காலம்,தேசம்,,வர்த்தமானம்,சாதி,மதம்,நிறபேதம், 
யுக்தி,சுருதி,அனுபவம் என்பதை கருத்தில் கொண்டு பலனுரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,

அப்படியானால் சோதிடவியல் பலன்களை நூலில் கூறியவாறு அப்படியே எடுத்துரைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது……ஏனெனில் அவை அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்..எனவே சரியான பலனைக் கண்டு பிடிக்க மேலே கூறப்பட்ட வழிகளைக் கடைபிடிக்கவேண்டும்…..

காலம்:
காலம் என்பது மிகவும் முதன்மையானதாகும். நமக்கு பலன்கள் கூறுவதற்கு எழுதப்பட்ட நூல்களின் காலம் பழமையானதாகும்.. அக்காலத்தில் இரும்பு சம்பந்தமான தொழில் என்று எழுதியிருப்பர். அதே கூற்றை தற்பொழுது கூறினால் தவறாக வரும்.. ஏனெனில் தற்பொழுது இரும்பு சம்பந்தமான தொழில் என்பதிலிருந்து மாறி தனித் தனியாக தொழிலைக்கூறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. எனவே காலத்திற்கு ஏற்றாற் போல் பலனைக் கண்டு பிடிக்கவேண்டும்.

மற்றொரு காலம் என்பது இயற்கையைச் சார்ந்ததாகும். எந்தப் பலனை எந்தக் காலத்தில் கூறினால் சரியாக வரும் என்று ஆராய்ந்து கூற வேண்டும். பருவமாற்றங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்……

தேசம்:

ஒவ்வொரு ஊரிலும் வாழ்வியல் முறை மாற்றமுடனே காணப்படும். தங்களுடைய கலாச்சார அமைப்பிற்கு ஏற்ப சில விதிகளையும். விலக்குகளையும் ஏற்படுத்தியிருப்பர். அவை சோதிடத்தின் பலன்களை குழப்பமடையச் செய்யும்.

எ.கா…..குஜராத்தில் மக்கள் அதிகமாக மது அருந்துவதற்கு வாய்ப்பில்லை. எனவே சோதிடத்தில் அவை சம்பந்தமான பலன்களைப் பார்த்துக் கூற வேண்டும்…அதேபோல்  தமிழகத்தில் மக்கள் மது அருந்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு சோதிடப்பலன்களை இதற்கு ஏற்றாற் போல் கூறவேண்டும்…….இவை போல் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் தங்கள் வசதிக்கு விதிகளை ஏற்படுத்தி வாழ்வதால் பலன்களை அவற்றிற்கு தகுந்தாற்போல் கூற வேண்டும். (ஊத்துக்குளி- வெண்ணைத் தொழில்//////திருப்பூர்-துணித் தொழில்)

வர்த்தமானம்;

உண்மை நிலை.அதாவது யதார்த்தமான நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதுவும் பலன் கூறுவதற்கு பயனுள்ளதாகும். தற்பொழுதுள்ள மாற்றங்களை அறிந்து கொண்டே இருத்தல் வேண்டும்..அதனாலேயே சரியான பலன்களைக்கூற முடியும்

சாதி (ஜாதி);

சோதிடம் சொல்வதிலேயே மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது..
சாதி,,சாதி,,,சாதி………என்னய்யா இந்த சாதி ? சாதியை வைத்து அப்படி என்ன பலன்களைக் கண்டு பிடிக்கமுடியும்??
இந்தியாவில் எங்கு பிறந்தாலும் அவர் சாதி என்ற அமைப்பிற்குள் கட்டாயம் வந்து விடுவார். ஏற்றுக்கொள்கிறோமோ,,, மறுதளிக்கிறோமோ,,,சாதி என்பது நமது தலைமேல் உட்கார்ந்து விடும். இதை மாற்ற எவராலும் முடியாது…..இந்து சமயமே சாதிகளுக்கு வித்திட்ட சமயமாகும்….

இந்துசமய சாதிய அமைப்பு::;…….இந்துசமயத்தை தோற்றுவித்த காலத்தில் நான்கு வர்ணங்களில் மக்கள் பிரிக்கப்பட்டனர். அவை 1.அந்தண்ர். / 2.சத்திரியர் / 3. வைசியர் / 4.சூத்திரர்..ஆகியனவாகும். பின்னர் சற்சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்றெல்லாம் பிரித்தனர். இவ்வாறு வர்ணங்கள் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய தொழில்களும் பிரிக்கப்பட்டன……..இதன் வழியாக வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது…

பின்னர் கி.மு முதலாம் நூற்றாண்டில் மனு தர்ம சாத்திரம் என்ற நூல் உருவாக்கப் பட்டது…..இது ஒன்றே இந்து சமயத்தில் சாதிகளை உருவாக்கி அவரவர் செய்யும் தொழிலையும் கூறியது.
மனுதர்மம்… இந்த ஸ்மிருதி நூலில் தான் இந்துக்களுக்குரிய சாதிய அமைப்பும் ,,,,புனிதம்//தீட்டு..போன்ற விதிகளும் கூறப்பட்டன. எப்படியெனில் மேலே கூறப்பட்ட நான்கு வர்ணத்தினரும் தமது வர்ணங்களில் திருமணம் செய்வதை விட்டு விட்டு. வேறு வர்ணத்தினரையும் திருமணம் செய்தனர். அதனால் வர்ணக் கலப்பு ஏற்பட்டன. இதன் விளைவாக பிறந்த குழந்தை எந்த வர்ணத்தை சார்ந்த்து என்று பிரிக்க முடியவில்லை..

ஏனெனில் ஆண்.பெண் இருவரும் ஒரே வர்ணத்தில் திருமணம் செய்து பெற்றெடுக்கும் குழந்தையே அதே வர்ணமாகும். வர்ணக்கலப்பில் பிறக்கும் குழந்தை எந்த வர்ணத்தையும் சாராமலே இருக்கும்..இவ்வாறு பல பிரச்சனைகள் உருவானதால் மனுஸ்மிருதி மூலம் தீர்வு காணப்பட்டது..

வர்ணக்கலப்பு;; அனுலோமர்////ப்ரிதிலோமர் என்று பிரித்து வர்ணம் இல்லாத சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த சாதிகளுக்குள்ளும் உட்பிரிவுகளாகப் பிரித்து,பிரித்து நூற்றுக்கணக்கான சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. இவர்கள் அனைவருமே சூத்திரர்களாகவும்,, சூத்திரர்களுக்கும் கீழானவர்களாகவும் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட அனைவரும் செய்ய வேண்டிய தொழில்களையும் பிரித்தனர்.

.{ எப்படி வர்ணங்களைப் பிரித்து தொழில்களை ஏற்படுத்தினரோ…...அதேபோல் சாதிகளைப் பிரித்து அவர்களுக்குரிய தொழில்களையும் ஏற்படுத்தினர்.அவற்றின் அடிப்படையில் தீட்டுடையவர்கள் என்றும் பிரித்து விட்டனர்..} 

சாதியைப் பிரித்த பின்னரே தொழில்களை ஏற்படுத்தினர்….மாறாக தொழிலை வைத்து
சாதிகளைப் பிரிக்கவில்லை. எனவே மனுஸ்மிருதியினால் சாதிகளும் அவர்கள் செய்யும் தொழிலும் பிரிக்கப்பட்டதால் மக்கள் வேறு தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை..

இதனால் சோதிடத்தில் உள்ள பொதுப்பலன்களைக் கூறும் பொழுது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன..சாதகம் பெரிய அரசயோகமாக இருக்கும்.ஆனால் அவர் சாதியமைப்பில் அடிமை வேலை தான் பார்த்துக்கொண்டிருப்பார்…அரசயோகம் எல்லாம் வேலை செய்யாது…………………...அதேபோல் உருப்படாத மேல்சாதிக்காரர் சாதகமாக இருக்கும்.அவர் நல்ல சுக போகத்தில் இருப்பர்……………….. இதனாலேயே சாதிகளை அறிந்து பலனுரைக்க வேண்டும் என்றுள்ளது…. மற்றொருகாரணமும் உள்ளது இன்னமும் நமது மக்கள் அவரவர் சாதிக்குரிய தொழில்களைச் செய்வதைக்காண முடிகிறது….

இப்பொழுது சொல்லுங்கள் சோதிடப்பலன்கள் கூறுவதில் சாதியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று……  நமது இந்திய கிராமங்களில் வாழும் மக்களில் பெருவாரியானயனவர்கள் தங்களது சாதியத் தொழிலையும், சாதியத்திற்கான செயல்களையும் செய்து வருகின்றனர்.. எனவே இந்திய சோதிடவியலில் சாதிய அமைப்பைப் பார்த்து பலனுரைப்பது இன்றியமையாகிறது……….

மதம்:

உலகில் உள்ள மானுடர்கள் அனைவருக்கும் எதிர்காலப் பலன்களைக் கூறக்கூடியது சோதிடக்கலையாகும். எனவெ உலகில் மதத்தினர்க்கு ஏற்றாற்போல்பலன்களைஎடுத்துரைக்கவேண்டும்..ஒவ்வொரு மதத்தினரின்  செயல்கள்,தொழில்கள் போன்றவற்றை பிரித்து அறிந்து அவர்களுக்கு ஏற்றாற் போல் பலனுரைக்கவேண்டும்….  மதங்களுக்குரிய மாற்று விதிகளையும் அறிய வேண்டும்,,[சில மதங்களில் மாமிசம் சாப்பிடுவது புனிதமானது……….சிலமதங்களில் மாமிசம் சாப்பிடுவது தீட்டானது.} எனவே இவற்றின் பிரிவுகளை அறிந்து பலனுரைக்கவேண்டும்…மதத்தின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு தகுந்தாற்போல் பலனுரைக்க வேண்டும்..

நிறபேதம்:
அய்யா….இலக்னத்தில் சனி இருக்கிறது என்று. அனவரையும் அழகற்றவர் என்று கூறக்கூடாது….அதேபோல் இலக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது என்று அழகானவர் என்றும் கூறமுடியாது….எனவே இவற்றை மற்ற அமைப்புகளான மேலே கூறியவற்றை கணக்கில் கொண்டு பலனை க்கூற வேண்டும்…இவை போல் பல்வேறு பொதுப்பலன்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நிறபேதத்தை அறிந்து பலன் காண வேண்டும்…….

யுக்தி :

சோதிடப் பலன்கள் கூறுவதில் அதிகமாக பயன்படுவது யுக்தியாகும்….இந்த யுக்தியானது எவரிடம் இல்லையோ அவரால் சோதிடப் பலன்களைக் கூறமுடியாது…பலன் கூறும் பொழுது..யூகம் என்பது கண்டிப்பாக வந்துவிடும்…

மேலே கூறப்பட்ட காலம், தேசம் போன்றவற்றை கணக்கில் கொண்டு சரியாக யூகித்து பலன்களைக் கூற வேண்டும்

சுருதி;

சோதிடப் பலன்களும்,,கணிதங்களும் கூறுகின்ற நூல்களாகும்..அல்லது விதிகளாகும். இவை கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர அப்படியே எடுத்துப்போட்டு பலன்களைக்கூற முடியாது..அனைத்து இடங்களிலும் 1+1= 2..என்கிற முடிவு வராது..அதனாலேயே இக்கலை முழுமையான அறிவியல் ஆக முடியாமல் உள்ளது….

பாரம்பரியம்,,கே.பி.,.சாரம்,மேற்கத்தியம், நாடி,, போன்ற அனைத்திலுமே பலன்களில் தடுமாறும் நிலையிருக்கும்…ஏனெனில் நாம் கண்டுபிடித்து கூறுகின்ற சில பலன்கள் நடைபெறாமலே போய்விடும்…அதனால் யூகித்து அறிந்து பலனைக்கூற வேண்டும்.

அனுபவம் ;

எங்கு பலன்களக்கூறுகிறோம், யாருக்கு கூறுகிறோம் எப்படி கூறுகிறோம்,,,என்ற அனுபவம் மிகவும் முக்கியமானதாகும். சனி தசா அனைத்து வயதினருக்கும் வரும்…எல்லொரும் நூலில் கூறியபடி பலன்களை அப்படியே அனுபவிக்க மாட்டார்கள்…துன்பம் என்பது ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டதாகும்…அதனால் அனுபவம் கொண்டு பலனுரைக்க வேண்டும்…

அதேபோல் அனுபவத்தினால் எளிதாகப் பலன்களைக்கூற முடியும்.
எனவே

காலம்,தேசம்,,வர்த்தமானம்,சாதி,மதம்,நிறபேதம், யுக்தி,சுருதி,அனுபவம் தேவையென்றாலும் இவற்றில் முக்கியமாக சாதியம் வந்து விடுகிறது..

சமுதாயக்கலாச்சாரம் சாதியத்தையும்,,மதத்தையும் வைத்து ஏற்படுத்தியிருப்பதால் அவற்றின் அடிப்படையில் வாழும் மனிதர்களுக்கு பலன்களைக் கூறும் பொழுது அவர்களின் மதத்தையும்,,சாதியத்தையும் வைத்தே பலன் கூறும் நிலையில் சோதிடம் உள்ளது…

என்னதான் சாதிகள் இல்லையடி பாப்பா என்றாலும் இந்துவாகப் பிறந்தவர் அனைவரும் சாதிகளுக்குள் வந்து தான் ஆக வேண்டியுள்ளது……சாதிகள் இல்லையென்றால் இந்துமதமே இல்லை…..

இந்து சமயத்தின் அடிப்படை ஆணிவேரே சாதிய அமைப்பாகும்…….அதனால் சோதிடப் பலன்கூறுவதில் சாதியமைப்பு தவிர்க்க முடியாததாக உள்ளன…….
 
மிக்க நன்றி……

Professor.Dr.Vimalan…… 

04-01-2015.