இந்தோ-ஈரானியர்கள் : இந்திய -ஐரோப்பியக் கலாச்சாரம், தனக்குள் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. அவை, இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆர்யம்,ஆர்யம் என்று பிரிகின்றன.இவற்றின் தலைப்பிற்கேற்ப சிறிய குறிப்புகளாக விளக்க முற்படுகிறேன்.இந்தொ-ஈரானியர்கள் என்று அழைக்கப்
படுபவர்கள்,யூப்ரடீஸ்-டைகிரீஸ் நதி சார்ந்து வாழ்ந்தமக்கள் என்று முன்னரே
அறிந்துள்ளோம்.இந் நாகரீகத்தின் எல்லைப் பகுதிகளாக வடக்கே அனடொலியன் பீடபூமியும்,தெற்கே பாரசீக வளைகுடாவும்,மேற்கே அரேபிய- சிரியா பாலைவனப் பகுதிகளும்,கிழக்கே ஈரானிய பீடபூமிகளாகவும் இருந்துள்ளன. இக்கலாச்சாரம்(நாகரீகம்) கி.மு.6000...