பெருமைமிகு போடினாயக்கனூர் சோதிடப் பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் வினாவிற்கான பதில் பலரும் அறிய வேண்டிய ஒன்றாகும். அதன் பொருட்டு இங்கு விளக்கப்படுகிறது. ஏனெனில் முதுநிலை பாடத்திட்டதில் சிறிது அறிந்து இருப்பீர்கள்.
புனிதமான இந்து சமயத்தின் நான்கு வேதங்களுக்கும் பொதுவாக ஆறு வேதஅங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
1.சிட்சை--உச்சரிப்புக்கலை.
2. வ்யாகரணம்-- மந்திரச்சொற்களின் இலக்கணம்.
3.ஸந்தஸ்---யாப்பிலக்கணம்.
4.நிருக்தம்--சொல்லிலக்கணம்.
5. சோதிடம் ---வானசாத்திரம்.
6. கல்பம் ---சடங்குகளின் மந்திர சூத்திரங்களாகும்....