Saturday 1 November 2014

புனித இந்து சமய வேதங்களில் உள்ள சோதிடம். 01-11-2014

பெருமைமிகு போடினாயக்கனூர் சோதிடப் பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் வினாவிற்கான பதில் பலரும் அறிய வேண்டிய ஒன்றாகும். அதன் பொருட்டு இங்கு விளக்கப்படுகிறது. ஏனெனில் முதுநிலை பாடத்திட்டதில் சிறிது அறிந்து இருப்பீர்கள்.






நாள்,அர்த்தமாஸம்,மாஸம், ருது, வர்ஸம்.இவற்றின் பகுப்பை பற்றியும், சூர்ய,சந்திரரின் நிலையால் நிகழும் அமாவாஸ்யை,பூர்ணிமை இவற்றைபற்றியும்,அப்போது நிகழும் கிரகணங்களைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் கூறும் நூல் சோதிஸம் ஆகும். இவையெல்லாம் யசூர் வேதம் முதலிய வேதங்களிலே கூறப்பட்டன. ஆனால் தற்பொழுது அவற்றைப்பற்றி விரிவாகக் கூறும்  நூல்கள் பிற்காலத்தனவே ஆகும் என்று குறிபிட்டுள்ளார்
வடமொழிப்பேராசிரியரின் கூற்றிலேயே நமக்கு தெளிவாக விளங்குகிறது வேதங்களில் கூறப்பட்டது வானசாத்திரம் என்று. வேதத்தில் உள்ள சோதிஸம் வானசாத்திரமாகும். எதிர்காலப்பலன்கள் கூறும் நம்முடைய சோதிடக்கருத்துக்கள் ஒன்றுமில்லை. சரிதான் சோதிடக்கருத்துக்கள் தான் இல்லை, வானசாத்திரம் இருக்கிறதே அவை பயன்படும் அல்லவா என்றால் அதுவும் இல்லை. அங்குள்ள வான சாத்திரம் நமது சாதகம் கணிப்பதற்கு பயன்படாது.கோள்கள் நிலை,பாவகநிலை போன்றதைக் கணிக்கும் எவ்வித கணிதங்களும் இல்லை.  நாம்தான் வானசாத்திரத்தை குறிக்கும் சோதிஸத்தை , நமது எதிர்காலப்பலன்கள் கூறும் சாத்திரத்திற்கும் வைத்துக்கொண்டோம். எனவே வேதங்களில் எதிர்காலப் பலனகளைக்கூறும் சோதிடசாத்திரம் இல்லை. 
பலன்களை ஆய்வு செய்து புதியவிதிகளை ஏற்படுத்துங்கள். அதுவே எதிர்கால சோதிடத்துறைக்கு ஏற்றதாகும். உங்களது பெயர்களும் நிலைத்து நிற்கும். எந்தமுறை சரியானது,எந்தமுறை தவறானது என்று வாதம் தேவையில்லை. இந்த பிரச்சனையே ஆய்வினால் ஏற்படுவதாகும்.
அனைத்து நிலைகளிலும் ஆய்வுகளைச் செய்து முன்னேற்றமடையுங்கள்.
எனது கருத்து சரியானது என்று வாதிடாதீர்கள். உங்களது கருத்து மறுக்கப்பட்டாலே சோதிடத்துறை வளர்ச்சியுறும். கே.எஸ்.கே.அவர்கள் ஒரு போதும் எனது கருத்து முழுவதும் சரியானது என்றுகூறவில்லை. அனைவரும் ஆய்வு செய்யுங்கள் என்று கூறிச்சென்றுள்ளார். எங்களது முறையே சரியானது என்று கூறுவது அவரவர்களின் கருத்துக்களாகும்.  இதைப்பற்றிகவலை கொள்ளத்தேவையில்லை.
 முற்றுப்பெற்ற முடிவுகளை கே.எஸ்.கே.அவர்கள் கூறியிருந்தால் நாம் அனைவருமே அதை தொடர்ந்திருப்போம்.அப்படி இல்லை. 
அதனால் உங்களது அனுபவத்தை பொது சபையில் கூறுங்கள் .அப்பொழுது தான் எங்கேயெல்லாம் உங்களது கருத்து மாறுபடுகிறது என்று அறிந்து புதிய விதிகளை ஏற்படுத்தும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். மறுத்துக் கருத்துக் கூறுபவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களது ஆய்வு அறிவைத்தூண்டுகிறார்கள்.  மட்டம் தட்டுபவர்களை புறந்தள்ளுங்கள்.பதில் கூறி அவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கே.எஸ்.கே அவர்கள் ஆன்மீகத்தை ஆய்வு செய்யவில்லை. பலன் கூறும் சோதிட அறிவியலை ஆய்வு செய்தார். சில விதிகளைக் கொடுத்துள்ளார்.அதனால் இன்று நம்மிடம் பேசப்படுகிறார். 

நான் கூறியகருத்துக்களை,மறுத்துக்கூறியதைஏற்றுக்கொண்டதாலேயே இவ்வளவு செய்திகள் பொது மக்களுக்கு கிடைத்துள்ளன. (எந்த ஒரு சிரமமும் இல்லாமல்) நமது செயல்கள் அனைத்துமே மற்றவர்களுக்காகவே.  அனைத்தும் மாற்றம் என்ற விதியில் மாறுதலுக்குள்ளாகும். இதை உணர்ந்து செயல் படுவோம்.

உங்களாலும் முடியும். இந்த உலகில் உங்கள் பெயரை பதிவு செய்ய. 
அன்புடன் பேராசிரியர்.விமலன்.  01-11-2014.

கீழே உள்ள பைலை கிளிக் செய்து வேதாங்கசோதிடத்தில் உள்ள குறிப்புக்களைக் காண்க.

https://drive.google.com/file/d/0B0pMQYkVx5DNSzVWSW9pMm03TWs/view?usp=sharing