Monday 27 October 2014

சோதிடம் ஆன்மீகம் சார்ந்தது அல்ல. அறிவியல் சார்ந்ததாகும்.

பேரன்புடைய சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு ,உங்கள் பேராசிரியர் விமலன் அளிக்கும் சுருக்கமான பதில்கள்.
வினா எண்கள்: 3,4-ஆலயப் பரிகாரங்கள் செய்வதால் தனிநபர் சோதிடப்பலன்கள் மாற்றம் ஏற்படுமா ? ஆலயப்பரிகாரம் என்பது என்ன அவற்றை எவ்வாறு கண்டு கொள்வது?
      இந்த இரண்டு வினாக்களும் ஒரே செய்தியை விழிப்பதால் அதற்குரிய பதில்கள் இணைத்தே கொடுக்கப்படுகின்றன. முதலில் சோதிடம் ஆன்மீகமா ? அல்லது அறிவியலா? என்பதில் விளக்கம் பெற்று பின்னர் பதிலுக்கு வருவோம்.
ஆன்மீகம் : மெய்பொருளைத்தேடும் அமைப்பாகும். இதற்கு காட்சி பொருள் என்று ஒன்று தேவையில்லை. நாமாக பல்வேறு உருவக அமைப்பைக் கொண்டு வழிபட்டாலும் முடிவில் பிரபஞ்சம் ஈஸ்வர சொருபம் என்று முடித்து விடுவோம். இருட்டான அறைக்குள் இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவது போல் உள்ளது மெய்ப்பொருள் என்று கூறுவதும் உண்டு. அதன்படி சிலர் மெய்ப்பொருளை அறிந்தேன் என்பார்கள், சிலர் அறிய முயல்கிறேன் என்பார்கள். இவை அனைத்தும் அவரவர் அனுபவத்தை ஒத்ததாகும். தான் கண்ட காட்சியையோ,அனுபவத்தையோ அடுத்தவருக்கு காட்டமுடியாது. ஒன்றைகண்கொண்டுபார்க்காமலேஅனுமானித்துசெயல்படுவது
(வழிபடுவது) ஆன்மீகமாகும்.
சோதிடவியல் : வான சாத்திரம் பிரபஞ்ச ஆய்வுகள் செய்து பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மானுட வாழ்விற்கு மையமாகத் திகழ்கிறது.  அதைப்போலவே அறிவியலின் முன்னோடியான வானச் சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மானுடவியலிற்கு எதிர்காலப்பலகளைக் கூறுவது சோதிடவியலாகும்.  வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும் ,கோள்களையும், இராசி மண்டலங்களையும் நாம் காட்டமுடியும்.அதன் நகர்ச்சிகளுக்குத்தகுந்தவாறு பலன்களை எடுத்துக்கூற முடியும். நமது சோதிடத்தில் பல்வேறு கணித அமைப்புகள் உண்டு. அதைக்கொண்டு கணித்து எதிர்காலப்பலன்களக்கூறும் அமைப்பாக சோதிடக்கலை உள்ளது. வானசாத்திரமும், கணிதமும் அறிவியல் சார்ந்ததாகும்.  ஒன்றைப்பார்த்து அனுமானித்து செயல்படுவது அறிவியலாகும். ஒன்றை பார்க்காமல் அனுமானித்து செயல்படுவது ஆன்மீகமாகும். எனவே  வானத்தில் உள்ள நட்சத்திரங்களையும்,கோள்களையும் பார்த்து அனுமானித்து சரியான எதிர்காலப்பலன்களைக் கூறுவதால் நமது சோதிடவியல் அறிவியல் சார்ந்த கலையாகும். சோதிடப்பலன்கள் கூறுவதற்கு ஆன்மீகத்தின் பங்கு ஒன்றும் இல்லை. (பரிகாரச் செயல்கள் வரும் பொழுதே ஆன்மிகம் உள்ளே வருகிறது.) மற்றபடி ஆன்மீகத்திற்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையே.