அன்புடையீர் வணக்கம். திரும்பவும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தமிழகப் பல்கலைக் கழக சோதிடவியல் துறை வரலாறு
என்பது கி.பி 2002 ல் இருந்து தொடங்குகிறது. கி.பி.2001ல் இந்திய வரலாற்றில் சோதிடத்திற்கு
என்று பல்கலைக் கழக மானியக்குழு ஒரு சிறப்பான முடிவைஎடுத்தது. என்னவெனில் இந்தியப்
பல்கலை கழகங்களில் சோதிடவியல்பாடமாக வைக்கப்பட்டு சோதிடவியல்துறை தொடங்க ஆணையிடப்பட்டது.
பதினாறு பல்கலைக்கழகங்களுக்கு மானியமாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்சம்) வழங்கப்
பட்டது. ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர், இரண்டு விரிவுரையாளர்கள்,...