VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Friday, 31 October 2014

ஆன்மீகத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியாது. ஆனால் சோதிடத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியும்.

மதிப்பிற்குரிய சோதிடப் பெரியோர் போடிநாயக்கனூர் திரு.பாஸ்கரன் அவர்களுக்குவணக்கம்.சோதிடவிதிகளைக்கொண்டுஆன்மீகப்பரிகாரங்களை ஆய்வு செய்யமுடியுமா? ஆய்வுகளின் அடிப்படை விதி ஏன்,எதற்கு,எப்படி? என்ற வினாக்களாகும். இவற்றில் எந்த ஒரு வினாவிற்கும் ஆன்மீகத்தினால் பதில் கொடுக்க முடியாது. புனிதமானஆன்மீகச்சமயங்கள்மூலநூல்களினால்கட்டப்பட்டதாகும்.யூதர்களின்-பழையஏற்பாடு / இந்துக்களின் –நான்குவேதங்கள் /சமணர்களின் – கல்பசூத்ரா,/ பெளத்தர்களின் –தீப்திகா,வைரசூத்திரம்/ பார்சிகளின் –அவெஸ்தா /கிறித்துவர்களின்-திருவிவிலியம்,/இசுலாத்தியர்களின் –அல்குரான்,அல்ஹதீஸ்,சைவர்களின்பன்னிருதிருமுறைகள்,சிவஞானபோதம்/வைணவர்களின்...

Tuesday, 28 October 2014

தனித்தன்மையான ஆலயப்பரிகாரங்கள் சோதிடவியலில் இல்லை.

மதிபிற்குரிய போடிநாயக்கனூர் சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள். ஆலயப் பரிகாரத்திற்கான சுருக்கமான பதில். ஆலயப் பரிகாரம்: தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மூன்று பிரிவுகளில் காணப்படுகின்றன. அவை இனக்குழு வழிபாட்டுச் சமயத்தைக்குறிக்கும் குலதெய்வஆலயங்கள்.2.சைவத்திருத்தலஆலயங்கள்.3.வைணவத்திருத்தல ஆலயங்கள் என்றுள்ளன. இவை மூன்றிற்கும் பொதுவாக வேள்வி வழிபாடு செய்யும் இந்து சமய அமைப்பும் உள்ளன. எனவே தமிழகத்தில் நான்கு பிரிவுகளிலும் வழிபாடு செய்யும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.( பிற மதத்தினர் இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.) ஆலயத்தின் அடிப்படைக்கோட்பாடு...

Monday, 27 October 2014

சோதிடம் ஆன்மீகம் சார்ந்தது அல்ல. அறிவியல் சார்ந்ததாகும்.

பேரன்புடைய சோதிடப்பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு ,உங்கள் பேராசிரியர் விமலன் அளிக்கும் சுருக்கமான பதில்கள். வினா எண்கள்: 3,4-ஆலயப் பரிகாரங்கள் செய்வதால் தனிநபர் சோதிடப்பலன்கள் மாற்றம் ஏற்படுமா ? ஆலயப்பரிகாரம் என்பது என்ன அவற்றை எவ்வாறு கண்டு கொள்வது?       இந்த இரண்டு வினாக்களும் ஒரே செய்தியை விழிப்பதால் அதற்குரிய பதில்கள் இணைத்தே கொடுக்கப்படுகின்றன. முதலில் சோதிடம் ஆன்மீகமா ? அல்லது அறிவியலா? என்பதில் விளக்கம் பெற்று பின்னர் பதிலுக்கு வருவோம். ஆன்மீகம் : மெய்பொருளைத்தேடும் அமைப்பாகும். இதற்கு காட்சி பொருள் என்று ஒன்று தேவையில்லை....

சோதிடப்பரிகாரத்தினால் கர்மவினைப்பலன்களை மாற்ற முடியாது.

அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு, பேராசிரியர் .விமலனின் வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது.  வினா எண் 2. பரிகாரத்தினால் கர்மவினைப் பலன்களை மாற்றியமைக்க முடியுமா ?   இவ்வினாவிற்கு விடையளிப்பதற்கு முன்னர் ஒருமுடிவிற்கு வரலாம்.    வானசாத்திர சோதிடம் என்பது நட்சத்திரங்கள்,இராசிகள்,    கோள்கள், பாவகங்கள், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறுகணிதப் பிரிவுகளை கணித்து...

Sunday, 26 October 2014

தலைவிதியை மாற்றியமைக்கும் வழி சோதிடசாத்திரதில் இல்லை. அப்படியிருந்திருந்தால் உலகில் அனைவராலும் மதிக்கக்கூடிய கோடீஸ்வரக் கலைஞர்கள் நாம் தான் !!!

அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் வினாக்களுக்கு பதில்கள் விரிவாகவும், விளக்கமாகவும் எழுத வேண்டியுள்ளது. எனவே விளக்கமான பதில்களை நூலில் காண்க. தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது.   வினா எண் ; 1. ஒருவரின் தலைவிதியை சோதிடப்பலன்கள் மாற்றமடைய செய்யுமா?     நிச்சயமாக முடியாது. சோதிடப்பலன்கள் எதிர்காலத்தில் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று கூறுகிறதே தவிர மாற்றியமைக்கும்...

Wednesday, 22 October 2014

இந்து சமயம் - அறிந்து கொள்ளுங்கள் -7---22/10/2014

இந்தோ-ஆரியர் ; உலகத்தின் தொன்மையான வைதீக சமயம்,சனாதன சமயம் என்று புகழப்படுகிற இந்து சமயத்தை தோற்றுவித்தவர்கள் இந்தோ- ஆரியர்கள் ஆவர்.இந்துகுஸ் மலைப்பகுதிகளிலும்,  சிந்து நதிகளின் நிலப்              பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் இந்தோ-ஈரானியர்கள் குடி பெயர்ந்துள்ளனர். அக்குடிப்பெயர்ச்சியினால் ஏற்கனவே இருந்த இறைவழி பாட்டு அமைப்புகளை மாற்றினர். தங்களுடைய கடவுள்கள் அனைத்து அச்சங்களையும் அழிக்கக்கூடியவர்கள் என்றனர். அதன்படி தாங்கள் ஏற்கனவே ஈரான் பகுதிகளில் அறிந்து கொண்ட இறை வழிபாட்டு அமைப்பையும்...