உங்கள்
சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 3 .
4. சிரிக்
அல்லது மாலா யொகம் ;
நற்கோள்கள் கேந்திர பாவங்களில் இருந்தால் சிரிக் யோகம் என்று கூறப்பட்டுள்ளது.
கேந்திரம் என்பது இலக்னம் , நான்கு , ஏழு , பத்து ஆகிய நான்கு
பாவங்களாகும். இப் பாவங்களில் வளர்பிறை சந்திரன், புதன் , குரு, சுக்கிரன் ஆகிய நான்கு
கோள்கள் மட்டும் இருக்க வேண்டும். மற்ற எந்த கோள்களின் இணைவும் இருக்கக்கூடாது.
குருவும் ,சந்திரனும் மாதத்தின் ஒன்பது நாட்கள் தங்களுக்குள்
கேந்திரத்தில் இருக்கும். சுக்கிரனும், புதனும் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பது
என்பது நிச்சயமாக...