VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Wednesday, 14 January 2015

தமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..

அன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன்.. அது தற்பொழுது நினைவிற்கு வந்தது……முழுவதுமாக எழுதி விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்…….  தமிழ் ஆண்டு பிறப்பு……… தமிழுக்கு ஆண்டு கணக்கு ……….தமிழ் வருடம் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எவர் கூறினாரோ தெரியவில்லை.  அனைவரையும் வாழவைத்து அவர்தம் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது தமிழகமே !!!!!!!! உண்மையில் தமிழர்கள் காலக்கணிதங்களில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகக் கருதமுடியவில்லை…..அப்படியிருந்திருந்தால் வடமொழி...

Monday, 12 January 2015

சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்....12-01-2015

அன்புடையீர் ,வணக்கம்…..நமது முகநூல் நண்பர் ஒருவர் சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன ???? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன என்று எழுதுமாறு கேட்டார். அதற்கான விளக்கங்கள் ……………………………………………………………………………….. சோதிடரிடம் சாதகத்தைக் கொடுக்கலாம். அல்லது தற்காலத்தில் கணனி வசதியுடன் கூடிய சோதிடர்கள் இருப்பர் .அவர்களிடம் உங்களது பிறந்த தேதி, நேரம்,ஊர். முதலியவற்றை கொடுத்து விடுங்கள்……அவர் எந்த முறையில் சோதிடப் பலன்கள் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்……( தற்காலத்தில் சோதிடர் கூறும் பலன்கள் அனைத்தையும் கைபேசியின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.)...

Thursday, 8 January 2015

சோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்---08 / 01 / 2015....

சோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் உலகில் பல கலைகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் மானுடத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு பயன் படுவதில் முதன்மையான கலையாக சோதிடத்தை தான் கூற முடியும்.     இந்த சோதிடக்கலையானது,,,,  வானசாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கலைகள் எவற்றையும் சாராமல் 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. மிகவும் பழைமையான சோதிடக்கலை தனக்கே உரிய வகையில் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த மனிதர்களால் வளர்க்கப்பட்டதாகும். அதிலிருந்தே மானுடத்திற்கு இச்...

Saturday, 3 January 2015

சோதிடமும்--சாதியியமும்.....ஒரு பார்வை..04 / 01 / 2015.....

அன்புடையீர் வணக்கம்… சோதிடத்தில் சாதிய அமைப்பு உள்ளதா என்று பலர் கேட்கின்றனர்…..இந்த வினாவிற்கு விடையாக சில செய்திகளைச் சொல்லி பின்னர் சோதிடத்தில் எவ்வாறு சாதிய அமைப்பு உள்ளது என்று பார்ப்போம். இந்திய சோதிட முறை : யவண சாதகம்,சத்யாச்சாரியார், ஜீவசர்மா,வராகமிகிரர்.பொன்ற சோதிடப் பெரியோர்களின் சாதகப் பலன்கள் கூறும் நூல்களின் வருகைக்குப் பின்னரே இந்திய சோதிடம் பெறும் வளர்ச்சி பெற்றது. இவர்கள் எழுதிய சோதிடப்பலன்கள் அனைத்தும் அடிப்படை விதிகள் மாறாமலும் ஒருசில கருதுகோள் சிந்தனைகளுடன் கூறப்பட்டவையாகும். உண்மையில் அன்பர்களே சோதிடவியல் பலன்களை எழுதியவர்கள்...

Wednesday, 31 December 2014

சோதிடத்தில் கோச்சாரப் பலன்கள் . 01-01-2015.

அன்புடையீர் வணக்கம்..மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில்                    மகிழ்ச்சியடைகிறேன். ஆரியர்களின் வருகை ; இந்திய சோதிட வரலாறு ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன் வாழ்ந்த இந்திய மக்கள் சோதிடம் பார்க்கின்ற அறிவைப் பெறவில்லை. எனும்பொழுது, ஆரியர்களின் வருகை கி.மு.2000 என்று பொதுவாக வரலாற்று அறிஞர்களின் முடிவாக உள்ளது.  இந்த ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த உடன் இங்கிருந்த இறைவழி பாட்டு அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். அதுவே இந்து சமய வேதங்களை...

Sunday, 28 December 2014

தீய தோசங்களும் விலகாது----நல்லயோகங்களும் விலகாது.--28 / 12 / 2014.

அன்புடையீர் வணக்கம். எனது இணையதளத்தில் திரும்பவும் தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். சமீப நாட்களாக எனது பரிகாரத்திற்கு எதிரான கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிறது. அவற்றை விளக்கும் கடமையில் எனது முடிவுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சோதிடம் என்பது பல்வேறு அடிப்படை விதிகளை ஏற்படுத்தி எதிர்காலப் பலன்களை எடுத்துரைக்கும் கலையாகும். இவற்றில் தீய தோசங்களும். நல்ல யோகங்களும் பலன்களாகக் கூறப்படும். தீய தோசங்களை அனைத்துக் கோள்களும்,பன்னிருபாவகங்களும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதேபோல் நல்ல யோகங்களை அனைத்துக் கோள்களும், பன்னிருபாவகங்களும்...

Friday, 12 December 2014

வேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.

வேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற்றி அக்னி சாட்சியாகச் செய்யப்படுவதாகும். இவற்றிற்கு பொதுவான காலங்களூம், குறிப்பிட்ட முகூர்த்தகாலங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன. பொதுவாக அனைத்து வழிபாடுகளும் பகலில் சூரிய உதயத்திலிருந்து, நடுப்பகலிற்குள் செய்யப்படவேண்டும். இது பொதுவிதியாகும்( உண்மையில் பிரம்ம முகூர்த்தம் என்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் செய்யப் படும் சடங்குகள் முகூர்த்த சாத்திரத்தில் கூறப்படவில்லை.). வேதகாலத்தைப்...