Sunday 28 December 2014

தீய தோசங்களும் விலகாது----நல்லயோகங்களும் விலகாது.--28 / 12 / 2014.

அன்புடையீர் வணக்கம். எனது இணையதளத்தில் திரும்பவும் தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
சமீப நாட்களாக எனது பரிகாரத்திற்கு எதிரான கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிறது. அவற்றை விளக்கும் கடமையில் எனது முடிவுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சோதிடம் என்பது பல்வேறு அடிப்படை விதிகளை ஏற்படுத்தி எதிர்காலப் பலன்களை எடுத்துரைக்கும் கலையாகும். இவற்றில் தீய தோசங்களும். நல்ல யோகங்களும் பலன்களாகக் கூறப்படும்.
தீய தோசங்களை அனைத்துக் கோள்களும்,பன்னிருபாவகங்களும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதேபோல் நல்ல யோகங்களை அனைத்துக் கோள்களும், பன்னிருபாவகங்களும் ஏற்படுத்தும். இவையும் சோதிடப் பலன்கள் கூறுவதற்குரிய அடிப்படைக் கட்டமைப்பாகும்.

தீய தோசங்கள்.
சோதிடத்தில் உள்ள ஒன்பது கோள்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இவற்றில் சூரியன்,செவ்வாய்,சனி,இராகு,கேது ஆகிய ஐந்து கோள்களும் இயற்கைத் தீய கோள்களாகும். 
சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கோள்களும்[ இவர்களுக்குள் இணைந்திருந்தால் நற்கோள்களாகும். குருக்கோளுடன் இணைந்தாலும் நல்லவர்கள் ஆவர். ஆனால் இயற்கைத் தீய கோள்களுடன் இணைந்தால் தீயவர்களாவர் } இருநிலைக் கோள்களாகும். 
குரு  ஒருவர் மட்டுமே இயற்கை நற்கோளாகும். 
எனவே சோதிடத்தில் தீய கோள்களின் ஆதிக்கமே கூடுதலாக இருக்கும். இவற்றைக்கொண்டு பன்னிரு பாவகத்தையும் இணைத்து பலநூறு தோசநிலைகளை உருவாக்கி அதற்குரிய பலன்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

இந்த தீய நிலைகளையே தோசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.     

நல்லயோகங்கள்;
தீய கோள்களும், தீயபாவங்களும் இணைந்து சில நல்ல யோகங்களை ஏற்படுத்தியுள்ளனர். தீயகோள்களும், நல்லபாவகங்களும் இணைத்து நல்லயோகங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
 அதேபோல் நற்கோள்களும் ,நல்லபாவகங்களையும், --நற்கோள்கள்,தீயபாவகங்களையும்,இணைத்து நல்லயோகப்பலன்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
தீயகோளும்,நற்கோளும் இணைந்து நல்லபாவகத்தில் இருந்தும்---தீயகோளும்,நற்கோளும் இணைந்து தீயபாவகத்திலிருந்தும் நல்ல யோகப்பலன்களை ஏற்படுத்தியுள்ளனர். 
இவ்வாறு அடிப்படை விதிகளை உடைக்காமல் சோதிட சாத்திரத்தில் பல்வேறு நல்ல யோகங்களும், தீய தோசங்களும் எழுதப்பட்டுள்ளன.

பலன்களின் நிலை;
இந்த நல்லயோகங்களூம், தீயதோசங்களும் ஒருவருடைய சாதகத்தின் எதிர்காலப் பலன்களைத் தீர்மானிப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இதில் ஒருவருடைய சாதகத்தில் நல்ல யோகங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு கூடுதலாகவும், தோசங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு குறைவாகவும் இருந்தால், அச்சாதகம் நல்ல யோகமான சாதகமாகும். ------------------
அதேபோல் நல்ல யோகங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு குறைவாகவும், தோசங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு கூடுதலாகவும் இருந்தால், அச்சாதகம் தோசசாதகமாகும்.

எனவே ஒரு சாதகம் நல்ல யோகங்களுடனும் ,தோசங்களுடன் தான் பிறக்கின்றன. இதனால் தோசமில்லாத சாதகம் உலகில் இல்லை. அதேபோல் நல்ல யோகமில்லாத சாதகமும் இல்லை.

இந்த தோசங்களும், நல்லயோகங்களும் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். இவை எப்பொழுது பெரிதாக வெளிப்படும் என்ற வினா எழுகிறது. அனைத்து செயல்களும் பிறந்ததிலிருந்து தொடங்குகிற தாசா.புத்திகள்,அந்திர,சித்திர,சூட்சும,பிராணங்கள் தீர்மாணிக்கின்றன. இத்தசா,புத்திகள்.பன்னிருபாவங்களுடன் செயல் படும் பொழுது அவற்றிக்கு ஏற்றவாறு கூடுதலாகவோ அல்லது குறைவாக வெளிப்படுகிறது.
இச்செயல்களில் நல்லயோகங்கள் எவ்வாறு நற்பலன்களை வழங்குகிறதோ ,அதேபோல் தீயநிலைகள் தீய பலன்களை வழங்கும். இதுவே சோதிடத்தின் நிலையாகும்.

இவற்றில் தீயபலன்களைக் குறைப்பதற்கு பரிகாரச்செயல்கள் செய்தால் சரியாகிவிடும் என்றால் ,நற்பலன்களைக் குறைப்பதற்கு ஏதாவது பரிகாரச் செயல்கள் கூறப்படவேண்டும் . அப்படியெல்லாம் இல்லை.
சோதிடம் பலன்களைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறது. அதற்கு மாற்றாக பரிகாரத்தை கூறினால் முன்னர் கூறிய சோதிடப்பலன்கள் பொய்யாகிவிடும். எப்பொழுதும் சோதிடம் பொய்யுரைப்பதில்லை. எதிர்காலத்தில் எது நடக்குமோ அதை தெளிவாகவே கூறுகிறது.   எனவே பரிகாரத்தை கூறினால் சோதிடப்பலன்கள் பொய்யாகிவிடும். பரிகாரம் இல்லையென்றால் சோதிடப்பலன்கள் உண்மையாகும்.   

பரிகாரம் என்பதெல்லாம் உலகச்சமயங்களின் இன்றியமையாத செயல்களாகும்.  எப்பொழுதும் மானுடம் பாவம் செய்து கொண்டேயிருக்கின்றன. அப்பாவங்களைப் போக்கும் அமைப்பில் இறை வழிபாடுகளைச் செய்யச் சொல்லி மானுடத்தை வாழ்வியல் பற்றுடன் செயல்பட வழிசெய்கிறது. நம்பிக்கை அடிப்படையானது.

ஆனால் சோதிடம் பாவத்தை போக்கும் வழிசொல்லும் கலையில்லை. இவை ஒருவர் பாவம் செய்வார்,அல்லது நல்லது செய்வார் என்று மட்டும் தான் கூறுகிறது. அதேபோல் நல்லது நடக்கும் அல்லது தீயது நடக்கும் என்று கூறுகிறது.வேறு ஒன்றும் சொல்லவில்லை. 

மாறாக பரிகாரத்தை சோதிடம் கூறுகிறது என்றால், அக்கூற்று அனைத்தும் சோதிடத்தை பொய்யாக்குவதாகும். எனவே சோதிடம் எதிர்காலத்தை உரைப்பதால் இங்கு பரிகாரத்திற்கு வேலையில்லை.
எந்தப் பரிகாரத்தினாலும் தோசங்களைக் குறைக்க முடியாது. தோசங்கள் அனைத்தும் அனுபவித்து முடிக்க வேண்டியதாகும்.

அனைத்து பலன்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதே சோதிடத்தின் கடமையாகும். [ ALL ACCEPTANCE ]

நல்ல யோகங்களை எப்படி விலக்க முடியாதோ ,அதேபோல் தீய தோசங்களையும் விலக்க முடியாது………..


மிக்க நன்றி…………………….PROFESSOR. VIMALAN.    28-12-2015.