அன்புடையீர் வணக்கம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டின் தொண்மையான தெய்வீக வழிபாட்டில் எந்த சமயம் பழமையானது என்பதில் பல்வேறு கருத்துக்களை காணமுடிகிறது. இவற்றில் எது சரியானது என்ற ஆய்வில் ஏற்பட்ட முடிவுகளே இங்கு கருத்தாக உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இருக்கக்கூடிய ஒரு தன்மை அச்சம் என்பதாகும். தனது ஒவ்வொரு செயலிலும் அச்சம் என்பது மையமாக அமைகிறது. வலுவான உயிரினம், வலுவற்ற...