Wednesday 14 January 2015

தமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..

அன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்……

மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன்.. அது தற்பொழுது நினைவிற்கு வந்தது……முழுவதுமாக எழுதி விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்…….

 தமிழ் ஆண்டு பிறப்பு……… தமிழுக்கு ஆண்டு கணக்கு ……….தமிழ் வருடம்

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எவர் கூறினாரோ தெரியவில்லை.  அனைவரையும் வாழவைத்து அவர்தம் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது தமிழகமே !!!!!!!!

உண்மையில் தமிழர்கள் காலக்கணிதங்களில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகக் கருதமுடியவில்லை…..அப்படியிருந்திருந்தால் வடமொழி கணிதங்களை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்…..தமிழன் ஒரு நாளைக்குத் தேவையான காலக்கணிதத்துடன் நின்றுவிட்டான்…அதற்கு மேற்பட்ட அத்தனை கணிதங்களையும் சமஸ்கிருதத்தில் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டான்…

சரியானது என்று அறிந்து கொண்டால் அதை போற்றி வாழ வைப்பதில் தமிழர்களுக்கு இணை தமிழர்கள் மட்டுமே….

தமிழர்களின் ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது என்பதில் பல் வேறு கருத்துக்கள் உள்ளன…….

சித்திரை மாதத்தை முதல் தேதியாக எடுத்துக் கொண்டாலும் சரி,,,,தை மாதத்தை முதல் தேதியாக எடுத்துக் கொண்டாலும் சரி..இரண்டுமே தமிழர்களின் காலக் கணிதங்கள் அல்ல….இந்தக் காலக் கணிதங்களை கண்டு பிடித்தது.. வடமொழியினரே….அவர்களின் கணிதத்தையே இந்தியர்கள் அனைவரும் பின்பற்றி வருகிறோம்…..சொல்வதற்கு வருத்தமாகத் தான் இருக்கிறது….இருந்தாலும் உண்மை தெரிய வேண்டுமே…அதனால் காலத்தை கணிக்கும் சோதிடராகிய நான் இங்கு விளக்க முற்படுகிறேன்…..

இடமும் ----காலமும் 

உலகில் உள்ள அனைத்து நவடிக்கைகளும் காலம்,,இடத்திற்குள் கொண்டு வந்து தான் முடிவெடுக்கப்படுகிறது….ஒருவர் எங்கு பிறந்தார்..எப்பொழுது பிறந்தார்...என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரிந்த பின்னரே மற்ற நடவடிக்கைகள் தொடக்கம் பெறும்……அதனாலேயே தொடர்புகள் அனைத்திலும் காலமும்,இடமும் குறிக்கப் பட்டிருக்கும்…. காலமும் இடமும் இல்லாமல் உலகில் எந்த ஒரு செயலும் நடைபெறுவதில்லை….

மானுடவாழ்வின்ஒவ்வொருசெயலிற்கும்காலமும்,இடமும்முதன்மையானதாக இருந்தாலும் ,,காலத்தை கணிப்பதில் சில சிக்கல்கள் இருந்துள்ளன…காலத்தை கணிப்பதற்கு வானத்தில் ஏற்படும் மாற்றங்களும், இயற்கை மாற்றங்களூமே பெரிதும் துணை செய்கின்றன.

எனவே காலத்தை கணிப்பதற்கு வான சாத்திரமும் , காலக்கணித சாத்திரமும் தேவையானதாக இருக்கிறது. இவை இரண்டையும் பழந்தமிழர்கள் பயன் படுத்தியதாக இதுவரை தகவல் இல்லை….அப்படியே வடமொழியில்  உள்ளதை ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது…அதனாலேயே  தமிழில் ஒரு வானசாத்திர நூலும் கிடைக்கவில்லை…….
வடமொழியினர் பயன்படுத்திய வேதகாலத்தில் முகூர்த்தங்கள் , அர்த்த முகூர்த்தங்கள்.,மாதங்கள்.,திதிகள்.,ருதுக்கள்.,ஸம்வத்ஸ்ரங்கள்..இருந்துள்ளன.

 வேதகால மாதங்கள் :

12 மாதங்களின் பெயர்கள்….
1 அருணா, 2. அருணராஜ், 3.புண்டரிகா. 4.விஸ்வஜித்,5 அபிஜித், 6 ஆர்த்ரா, 7 பின்வமானா, 8 உன்னவான், 9 ரஸவான், 10 இர்வான்,11 ஸர்வவுஸாதா, 12 ஸம்பார…

வேதகால அர்த்த மாதங்கள்; 24 ஆகும்…

பவித்ரன், பவயிஸ்யன், புதா, மேதயா, யஸா, யஸாவன், அயூப், அம்ர்தா, ஜீவ, ஜீவிஸ்யன்,ஸ்வர்க, லோகா, ஸகஸ்வன், ஸகியான், அஜஸ்வன், ஸ்கமான, ஜனயன், அபிஜயன், சுத்ரவினா, த்ரவினோதா, அர்த்ர-பவித்ர, ஹரிகேஸ, மோத, பிரமோத, ஆகியவையாகும்…..

தற்கால மாதங்கள் பெயர்கள் ;

மாதங்கள் அனைத்தும் இரண்டு அயனங்களிலும் பிரிக்கப்பட்டிருக்கும். அவை உத்தராயனம், தட்சிணாயனம் ஆகும். ஒரு அயனத்திற்கு ஆறு மாதங்களாகும்…

1 சைத்ர மாதம்----சித்திரை , இம்மாதத்திற்கு இந்த பெயர் ஏற்படுவதற்கு காரணம் தெரிய வேண்டுமல்லவா ….அதைவிவரித்தால் மற்ற மாதங்களின் பெயர்களுக்கு விளக்கமளிப்பது எளிதாகிவிடும்..

 கி.பி..1000 க்கு முன்னர் எழுதப்பட்ட சமஸ்கிருத வான சாத்திரத்தில், வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் 28 கூட்டங்களாக பிரித்து அவற்றிற்கு  பெயர்களையும் ஏற்படுத்தினர்.. இவை 360 பாகை கொண்ட வட்டதிற்குள் பிரித்து கொடுக்கப் பட்டன.
அவற்றில்பன்னிரெண்டுபிரிவுகள்ஏற்படுத்தப்பட்டன..அவை ஒவ்வொன்றிற்கும்மேசம்.ரிசபம்.மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்று பன்னிரெண்டு இராசிகள் பெயர்கள் கொடுக்கப்பட்டன. 

இப்பொழுது பன்னிரெண்டு இராசிகளிலும் கோள்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும்…. இதில் சூரியன் எந்த இராசியில் இருக்கிறதோ அதுவே மாதப் பெயராக இருந்துள்ளது..இதில் எந்த மாதம் முதல் மாதம் என்பதில் கணக்கில் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டதே ஆண்டுகளும் ,நட்சத்திரப்பெயர்கொண்ட மாதப்பெயர்களும் ஆகும்.( தற்பொழுது நாம் சொல்லிக் கொண்டிருப்பது நட்சத்திரப்பெயருடன் கூடிய மாதங்களாகும்)

ஒரு ஆண்டில்  சமமான  பகல்,இரவு காலங்கள் கொண்ட நாட்களை கணக்கில் எடுத்துக் கொண்டனர்…அவற்றில்..மார்ச் 21 தேதியை கொண்டு தொடங்கும் மேச மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிட்டனர்….மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையுள்ள நாட்களில் ஒரு நாள் பௌர்ணமி வரும் .அப்பொழுது சூரியன் மேச இராசியிலும், சந்திரன் துலாம் இராசி சைத்ரம் (சித்திரை) நட்சத்திரத்திலும் இருக்கும். இந்த நட்சத்திரத்தையே அந்த மாதத்தின் பெயராக மாற்றினர்…

இது போலவே ஒவ்வொரு பௌர்ணமியும் வரும் காலங்களில் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது…

சைத்ரம்—            சித்திரை  (சித்திரை நட்சத்திரம்)
வைசாகம்---          வைகாசி (விசாகம் நட்சத்திரம்)
ஜேஸ்டம்---          ஆனி     ( கேட்டை நட்சத்திரம்)
ஆஸாடம்--          ஆடி      (பூராடம் நட்சத்திரம்)
சிராவணம்---         ஆவணி  (திருவோணம் நட்சத்திரம்)
பாத்ரபதம்---         புரட்டாசி  ( பூரட்டாதி நட்சத்திரம் )
ஆஸ்வின ---        ஐப்பசி    ( அசுபதி நட்சத்திரம் )
கார்த்திகம் ----      கார்த்திகை ( கார்த்திகை நட்சத்திரம்)
அக்ரஹாயன----     மார்கழி   ( மிருகசீரிடம் நட்சத்திரம்)
பௌஸ ---           தை     (பூசம் நட்சத்திரம்)
மாகம்   ----        மாசி      (மகம் நட்சத்திரம்)
பால்குன-----        பங்குனி  ( உத்திர பல்குனி நட்சத்திரம்) 

இந்த பன்னிரெண்டு நட்சத்திரப் பெயர்களும் கொண்ட மாதங்களையே நாம் தமிழ் மாதங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.…நட்சத்திரம் என்ற சொல்லே ஸமஸ்கிருதம் ஆகும்…எனும் பொழுது தமிழ் மாதம் என்று எப்படி அழைக்க முடியும்…. தற்பொழுது சில பெயர்கள் வழக்கில் மறுவியுள்ளன.

அறுபது ஸமஸ்கிருத ஆண்டுகள்.

இப்பொழுது ஆண்டுகளின் கணிதத்திற்கு வருவோம்…. பஞ்சாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னரான வேதகாலத்தில் தற்பொழுதுள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்கள் வைக்கப் படவில்லை.
 
வேதகால ஸம்வத்ஸ்ரங்கள் ;

வேதகால தொடக்கத்தில் சதுர்யுக ஆண்டுக் கணக்கெல்லாம் கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால் அவர்கள் ஐந்து மற்றும் ஆறு ஆண்டுகள் கொண்ட சுற்று யுகங்களாகவே கணக்கில் கொண்டனர். அவை
1 சம்வத்சர, 2 பரிவத்சர, 3 இதாவத்சர, 4 இத்வத்சர, 5 வத்சர என்றும் நாளடைவில் இவற்றுடன் ஒன்று கூட்டி இதுவத்சர என்ற ஆறு சுற்று யுகங்களைக் கணக்கில் கொண்டனர்…

வராகமிகிரரின் யுக ஆண்டுக்காலம்:

வராகமிகிரரின் பிருகத் சம்கிதா எனும் நூலில் அவர் ,யுகக்கணிதத்திற்காக  அறுபது ஆண்டுகள் கொண்ட தொகுப்பை பயன் படுத்தியுள்ளார்..ஒவ்வொரு யுகத்திற்கும் 5 ஆண்டுகள் என்று பிரித்து பன்னிரெண்டு பெயர்களைக் கொடுத்துள்ளார். 1 விஸ்ணு, 2 குரு, 3 இந்திரன், 4 அக்னி, 5 த்வஸ்டா, 6 அகிர் புதன்யா, 7 ஆவிஉலகம், 8 விஸ்வதேவர்கள், 9 சந்திரன்,10 இந்திராக்னி, 11 அசுவினி தேவர்கள்,12 சூரியன் என்று கணித்துள்ளார்…

இவற்றிற்கு பலனாக ..முதல் நான்கு யுகத்தில் நல்ல செல்வச்செழிப்பும், அடுத்த நான்கு யுகத்தில் நடுத்தர செல்வச்செழிப்பும், அடுத்த நான்கு யுகத்தில் வறுமையும் ,பிணிகளும் ஏற்படும் என்கிறார்…….
வராகமிகிரருக்குப் பின்னர் பஞ்சாங்க கணிக்கும் பொழுது அறுபது ஆண்டுப்பெயர்கள் ஏற்படுத்தப்பட்டன
.
பிரபாவதி சுற்று என்றும், குரு சுற்று என்றும் தற்காலத்தில் பஞ்சாங்கங்கள் கடைபிடிக்கிற அறுபது ஆண்டுப் பெயர்களும் ஸமஸ்கிருத மொழியாகும்..

1 பிரபவ, 2 விபவ,3 சுக்கில,4 பிரமோதுத, 5 பிரஜோற்பதி,6 ஆங்கிரச,
7 ஸிரிமுக, 8பவ,9 யுவ,10 தாது என்று அச்சய முடிய அறுபது பெயர்கள் இடம் பெற்றுள்ளன…

இவை எதிலும் தமிழ் பெயர் என்று ஒன்று கூட கிடையாது….
இப்பொழுது கூறுங்கள் தமிழர்கள் எப்படி ஆண்டு விழாக்கள் நடத்தியிருக்க முடியும்…..காலக் கணிதத்தைப் பற்றி கவலைப் படாத தமிழன் வாழ்வியல் இன்பத்தை அதன் போக்கிலேயே அனுபவித்திருப்பான்….அதனாலேயே வந்தாரை வாழவைக்கும் தமிழனாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மார்ச் 21ல் தொடங்கும் ஆண்டின் கணிதம் சாயன முறையைச் சார்ந்ததாகும். அங்கு தான் சைத்ர மாதம் தொடக்குகிறது.. இதை இந்தியர்கள் சக ஆண்டின் தொடக்கம் என்றும் பிரித்துள்ளனர்…..

நாம் தமிழகத்தில் கொண்டாடும் ஏப்ரல் மாதம் 14 தேதி நிராயன முறையைச் சார்ந்ததாகும்….( அதாவது மேசப் புள்ளியை தொடக்கமாகக் கொண்டு கணிப்பதாகும்) தற்பொழுது இந்தியாவில் பெறும் பகுதியினர் சோதிடம் பார்க்கும் கணிதமுறையாகும்.

எனவே தமிழர்களுக்கு ஆண்டுக் கணிதம் என்று ஒன்று இல்லை..அப்படியே சமஸ்கிருத கணிதத்தை ஏற்றுக்கொண்டனர்..ஏப்ரல் 14{ சித்திரை 1,என்பது சமஸ்கிருத ஆண்டின் தொடக்க நாளாகும்.}

தை 1 தேதி தமிழர்களின் ஆண்டு தொடங்குகிறது என்றால் அதுவும் உத்தராயண காலத்தின் தொடக்க காலமாகும்….

உண்மையில் எந்த ஒரு தேதியிலும் தமிழர்களின் ஆண்டு விழாவைக் கொண்டாடலாம்…ஏனெனில் தமிழனக்குத் தான் ஆண்டுக் கணிதமே இல்லையே !!!!!!

{ கேரளாவில் ஆவணி மாத பௌர்ணமி திருவோணமே ஆண்டுத் தொடக்க நாளாகும்…}

கடந்த 700 ஆண்டுகளாக தமிழரை தமிழன் ஆட்சி செய்யவில்லை என்பது அறிஞர் அனைவரும் அறிந்ததே…
அதற்கு முன்னர் நாடு பிடிக்கும் போராட்டம் ..அதனால் அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை …அதனால் வடமொழி கற்றறிந்த பெரியோரின் சொற்களைக் கேட்டிருப்பார்கள்..அவற்றில் உண்மை இருந்ததால் அப்படியே ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள்….

எப்படியிருப்பினும் காலக்கணிதம் இல்லாத தமிழன் எந்த தேதியில் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடினாலும் அதில் தவறு இல்லை. எழுதுவதற்கு வருத்தம் தான்... உண்மை எழுதத் தூண்டுகிறது....

தமிழ் வாழ்க !   தமிழ் வாழ்க!!   தமிழ் வாழ்க!!!!

மிக்க நன்றி............

Professor Dr.T.Vimalan. Ph.D.