VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Tuesday, 21 April 2015

நவக்கிரகம்-இனக்குழு சமயம் – குலசாமி - /// 21-04-2015..


இனக்குழு சமயம் – குலசாமி - நவக்கிரகம்.

அன்புடன் அனைவரையும் எனது பிளாகில் வரவேற்கிறேன்.

சமயம் {மதம்} ;

மதம் என்பது, மனிதனையும் கடவுளையும் இணைக்கும் கண்ணி ஆகும். கடவுளால் விதிக்கப்பட்டு , கடவுள் நம்பிக்கையுள்ளவரைக் கட்டுப்படுத்துகிற நடத்தை பற்றிய விதிகள் ,சூத்திரங்கள்,வழிபாடுகள்,சடங்குகள்,கோட்பாடுகள் ஆகியவற்றின் கூட்டுத் தொகுதிதான் மதம் ஆகும்…..மதம் என்பதை தமிழில் ”சமயம்” என்று கூறுகிறார்கள்….

சமயங்களை இரண்டு முக்கிய பிரிவாக உள்ளன. அவை 1. இனக்குழுசமயம்..2. நிறுவன சமயங்களாகும்….
இந்த பகுதியில் இனக்குழு சமயத்தை விளக்குகிறேன்…..

1.இனக்குழு அல்லது நாட்டுச் சமயங்கள்…. \

இனக்குழுசமயங்கள் நிறுவனமற்றதாகும்.வரலாற்றில் பழமை வாய்ந்ததாகும்..கி.மு6000 த்திலிருந்து இன்று வரை இச்சமய வழிபாடு இன்றும் தொடர்கிறது.இதன் அடிப்படையில் நமது கிராமங்களில் பலவித குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இச்சமயம் இயற்கையோடு மிக நெருக்கமாக ஒன்று படுத்திய வாழ்க்கை முறையை நடத்தி செல்கிறது..

வாழ்வியல் முறை

இவர்கள் காவல் தெய்வங்கள் போன்ற பல தெய்வ வழிபாடுகளை கொண்டு இருந்தனர். உணவு சேகரிப்பு முக்கிய பணியாகும். மீன், கிழங்கு,தேன்,பழம், காய் என உணவை சேகரித்து பின்பு பகிர்ந்து உண்டனர்…கூட்டு பண்புடன் கூட்டம் கூட்டமாக ஒர் இனக்குழுவாக வாழ்ந்தனர்… ஒரே இரத்த உறவு கொண்டவர்களாகவும், மூடிய வாழ்க்கையுடையவர்களாகவும், தங்கள் கூட்டங்களுக்குள் விசேச பரிவர்த்தனை இல்லாதவர்களாகவும் இருந்தனர்…தங்களுக்குள் திருமணம் முடித்தனர். ஒருதார மணம் கிடையாது…தாய்வழி இரத்த உறவுகள் தான் இம் மக்களின் பரம்பரையாக எடுத்துக் கொள்ளப்பட்டன….

பெண்களே பெரும்பாலும் இனக்குழுக்களின் தலைவராக இருந்துள்ளனர். தாங்கள் வாழும் இடம், மரம், கல்,பூமி, ஆகியவற்றை புனிதமாக போற்றினர்..இனக்குழுவின் தலைவரே மாந்திரீகர், புரோகிதர்,சோதிடர்,வைத்தியர்,ஆசிரியர்,சாமியார் போன்ற அனைத்து அதிகாரங்களும் உடையவராவார்….

சமய நம்பிக்கை;

இனக்குழுவினர் ஒரே குலம், ஒரே இரத்த உறவு கொண்டவர்களாக இருப்பதால் , தோற்றத்தில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பர்….தங்கள் குழுவிற்கு தனியாக ஒரு குறியீடு ஏற்படுத்திக் கொள்வர்….மலை,பசு,சூரியன்,சந்திரன்,தண்ணீர்,மரம்,பறவை,விலங்கு,என குழுவை அடையாளப் படுத்திக் கொள்வர். இந்த குலக் குறியீடுகள் மிக மிகப் புனிதமானவையாகும். இனக் குழுவின் புனித சின்னமாகும்…தங்களுடைய நாடி, நரம்பு, உயிர் ஆகிய அனைத்தையும் குலகுறியுடன் தொடர்பு படுத்தி வாழ்ந்து வந்துள்ளனர்…

ஒரு இனக்குழுவிற்கு மரம் குலக்குறியீடாக இருந்து ,அதை யாராவது வெட்டினால் தலைவருக்கு வலிக்கும் என்று நம்பினர்… எனவே அனைத்து வகைச் செயல்களும் குலக் குறியீட்டை மையமாக வைத்தே நடத்தியுள்ளனர்… தங்களுடைய எண்ணம்,சிந்தனை,செயல், ஆகிய அனைத்தும் குலக்குறியீட்டை அடிப்படையாகக் கொண்டதால் அனைத்திற்கும் உருவம் உண்டு என்று நம்பினர்….

இனக்குழுவின் குலக்குறியிடு ஒரு விலங்காக இருந்தால் திருவிழா போன்ற நாட்களில் அதை வேட்டையாடுவார்கள். பின்பு அந்த விலங்கை அனைவரும் பகிர்ந்து உண்ணுவார்கள்…இதனால் குலக்குறியீடுடன் தங்களது இரத்த உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் குலக்குறியிடு நாளடைவில் கடவுளாக வழிபட்டு வந்தமையால், கடவுளும் இவர்களுடன் இரத்த உறவு வைத்துக் கொண்டுள்ளார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு பகிர்ந்து உண்ணப்பட்டது….ஆனால் மற்ற நாட்களில் அவ்விலங்கை வேட்டையாடக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்துள்ளது….

இவர்களுடைய வாழ்வு முறை சுழற்சிவிதியின் படி அமைந்துள்ளது…தங்களது குழந்தைகளுக்கு தாத்தா பெயர்,அப்பா பெயர்,பாட்டிபெயர், என திரும்ப, திரும்ப ஒரெ பெயரே வைக்கப்பட்டது. கிறித்துவத்தில் அப்பமும்.ரசமும், பகிர்ந்து கொண்டதால் இயேசுவின் இரத்தம் ,சதையை உட் கொண்டதாக அமையும்..அவர் உள்ளிருந்து நம்மை காப்பாற்றுவார் என்று நம்பப் படுகிறது…

கிராம விழாக்களில் பலி,படையல்,கூட்டு உணவு இறைவனுக்குப் படைக்கப்பட்டு,,,பின்னர் மானுடத்தால் உண்னப்படுகிறது. இதன் மூலமாக இறைவனுக்கும், மானுடத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

”பகவான்” என்ற சொல் பாகம், பங்கு என்று பங்காளி போல் இறைவனுக்கும் பக்தர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக கருதி இறைவனை பகவான் என்ற சொல்லால் அழைக்கிறோம்

 ஆவி,மந்திரக் கோட்பாடு

உலகில் உள்ள அனைத்திற்கும் உயிர் உண்டு என்றும் சிலவற்றிற்கு அடர்த்தியான உயிர் தன்மை உண்டு என்று நம்பினர்… மலை முகடு,பச்சைமரம், வீட்டின் மூலைப்பகுதி, மரங்களின் உச்சிக்கிளை, நடுப்பகல்,நடுஇரவு, பிறப்பு ,பருவமடைகிற வயது, கருக்கல் நேரம், கிழக்கும்-மேற்கும் சந்திக்கும் பகுதி என இரட்டை தன்மையுடன் கூடிய நிகழ்வுக்கு ஆவித்தன்மையை ஏற்றி, அதில் ஆவிகள் வசிப்பதாகவும் நம்பினர். அதனிடத்தில் பயமும்,பக்தியும் கொண்டிருந்தனர். இடில் பக்தியைவிட பயமே அதிகமாக இருந்தது. செய்வினையின் போது ஆவிக்கோட்பாட்டின்படி அதற்கு உயிர்தன்மை உள்ளது என்று நம்பினர்…

தன் இனக்குழு மக்களின் அறிவியல்,இயற்கை சார்ந்த.ஒன்றை பாவனை செய்வது மந்திரம் ஆகும். { ஆனி மாதத்தில் மழை வரவில்லை என்றால் மழை வரத் தூண்டுவார்கள்.அதற்காக பாவனைச் சடங்கு செய்வது மந்திரம் எனப்பட்டது. மழை வேண்டி களிமண் உருண்டையை மரத்தின் கீழ் வைப்பார்கள். பின்னர் அம்மரத்தின் மேல் பகுதியில் தண்ணீரைத் தெளிப்பார்கள். இம்மாதிரி பாவனைச் சடங்குகள் மூலம் மழை வரத் தூண்டுவார்கள்… இதனால் இயற்கை மழை வரும் என்று நம்பப்பட்டது.} தற்பொழுது செய்வினை பற்றிய கருத்துக்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் வந்ததாகும்.

குறியீட்டுத் தளம்..

இனக்குழு சமயத்தில் அடர்த்தியான குறியீட்டுத்தன்மை இருந்தது. திருமணம்,பிறப்பு, அனைத்திற்கும் சடங்குகள் இருந்தன..வாழ்க்கையின் பிரச்சனைகள் அனைத்தும் குறியிட்டுத்தளத்திற்கு சென்றுவிடும்… நோய்களினால் ஏற்படும் துன்பங்கள்,மானுட மனதில் ஏற்படும் அச்சங்கள் போன்ற அனைத்தும் குறியீட்டுத்தளத்திற்கு சென்றுவிடும்…{ எ.கா} வாழ்வில் தீய நிகழ்வுகள் ஏற்பட்டால்,,,,புதியதாக ஏதாவது வாங்கினாயா? அல்லது செய்தாயா/ போன்ற வினாக்கள் குறியீட்டுத்தளத்தில் கேட்பார்கள்….

புனிதம்-புனிதமற்றது…

சமயங்களின் அடிப்படை ஆணிவேர் புனிதம்-புனிதமற்றது என்ற இரண்டு பிரிவுகளாகும்…
நல்லது.கெட்டது, திசைகள், நேரம், செயல்கள், கிழமைகள்,,குணம்,சகுனம்,ஆகிய அனைத்திலும் புனிதம்-புனிதமற்றது என்ற இரண்டு தன்மைகளும் இனக்குழு சமயத்திலிருந்தே பார்க்கப் பட்டன. இதனடிப்படையிலேயே உயர்ந்தது-தாழ்ந்தது என்ற கருத்துக்கள் தோன்றின.

இனக்குழு சமயத்தின் பண்புகள்..
இனக்குழு சமயத்திற்கு என்று மூலநூல் இருக்காது..
சமய கட்டமைப்பு,கட்டுப்பாடுகள் கிடையாது.
அதிகாரம், எல்லைகள் முடிவு செய்யப்படாது.
படைப்புத்தன்மை இருக்கும்.
புதுப் புது உத்தரவுகள், சிந்தனைகள் கூடியவளர்ச்சி நிலை பங்கேற்பு தன்மையிருக்கும்.
சமரசம் செய்து கொள்ளலாம்
பக்தி இருக்கும் ,பணிவு இருக்க வேண்டியது இல்லை..
மூலத்தை மாற்ற முடியும்..  இதுவே இனக்குழு சயங்களின் பண்புகளாகும்..

தற்பொழுது நாம் கிராமங்களில் வழிபடும் குலசாமி வழிபாடுகள் அனைத்தும் இனக்குழு வழிபாடுகளின் மறு அமைப்பாகும்… இப்பொழுதும் மேலே கூறப்பட்ட அனைத்து விதிகளும் நமது குலசாமி வழிபாட்டில் கடைபிடிக்கப்படுகின்றன.. இதில் கூறப்பட்ட எந்த விதியும் மற்ற சமயங்களில் காணமுடியாது…{ எடுத்துக்காட்டாக இனக்குழு சாமியைக்கூட மாற்ற முடியும்,ஆனால் மற்ற சமயங்களில் எதையும் மாற்றமுடியாது..}

நவக்கிரகம்

இனக்குழுவில் பொதுவாக அனைத்தும் வழிபடுவதால் தனியாக நவக்கிரக வழிபாடு என்று ஒன்று கிடையாது…இங்கு அனைத்தும் தங்களைக் காக்கும் குலக்குறியீடு கடவுளே தீர்த்து வைக்கும் என்று நம்புவதால் மற்ற அனைத்தையும் பிரித்து வைத்து வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது…..


 அன்புடையீர் பெரியோர்களுக்கு வணக்கம்…

இந்தியாவை பொருத்தவரை காலத்தால் முந்திய சமயம் [ கி.மு6000முன்னிருந்து தற்பொழுது வரை வாழ்ந்து கொண்டிருக்கின்ற } இனக்குழு சமயமாகும்... ஆதி மானுடத்தின் சமயமும் ஆகும்.....மக்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்....

அந்த வாழ்வியல் முறையில் தங்களுக்குப் பிடித்தவற்றை கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர்.....இங்கு சிலகட்டுப்பாடுகள், விதிகள் ஏற்படுத்தி வழிபாடுகள் செய்தனர். தங்களின் கோரிக்கைகள் நடைபெறவில்லை என்றால் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மாற்றிவிடுவர்....நிரந்தரமான நூல் வடிவ விதிகள் இன்று வரை ஏற்படுத்தவில்லை....

இதில் இறைவனாக இயற்கையின் அனைத்தையும் வணங்கி வந்துள்ளனர்.....இந்த கடவுள்களை கிராமம் தோறும் காணமுடியும்....இவற்றிற்கு பூசாரிகள் என்று அழைக்கப்படும் பொது அமைப்பினரே வழிபாடுகளை செய்து வருவர்.....இங்கு நவக்கிரக வழிபாடு என்று ஒன்றும் கிடையாது. பொதுவாக தங்கள் குலம் விருத்தி அடைவதற்காக பொதுவான கடவுளை ஏற்படுத்தி வழிபட்டு வருகின்றனர்.........

.தற்பொழுது புதிதாக கட்டப்படும் கோயில்களில் வேண்டுமானால் உருவாக்கலாமே தவிர குலசாமி கோயில்களில் நவக்கிரக வழிபாடுகள் இல்லை........

மிக்க நன்றி....

Professor.Dr.T.Vimalan. Ph.D.


Wednesday, 15 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 .....15-04-2015...


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 

அன்புடையீர் வணக்கம் ...திரும்பவும் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.19.நெள யோகம் ;

அனைத்துக் கோள்களும் இலக்னமுதல் வரிசையாய் இருப்பது நெள யோகமாகும்.

நெள யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் சிக்கனமாக செலவு செய்யும் கருமியாவார். சில செயல்களில் சுகபோகங்களூடன் வாழ்வார். புகழ் பெறுபவராவார்.

20. கூடயோகம் ;

அனைத்துக் கோள்களும் நான்காம் பாவமுதல் ஏழு பாவங்களில் இருப்பது கூடயோகமாகும்
.
கூடயோகப் பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் சிறை அதிகாரியாக இருப்பார். பொய் பேசுபவராகவும் இருப்பார்.

21.சத்ர யோகம்

அனைத்துக் கோள்களும் ஏழாம் பாவமுதல் ஏழுபவங்களில் இருப்பது சத்ரயோகமாகும்..

சத்ரயோகப்பலன்கள்.

இந்த யோகத்தில் பிறந்தவர் முதுமையில் சுகபோகங்களை அனுபவிப்பவராகவும், தனது சொந்தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துபவராகவும் இருப்பர்….

22.சாபயோகம்

அனைத்துக்கோள்களும் பத்தாம் பாவமுதல் ஏழுபாவங்களில் இருப்பது சாபயோகமாகும்.

சாபயோகப்பலன்கள்.

இந்தயோகத்தில் பிறந்தவர் வாலிப வயதிலிருந்து மகிழ்ச்சியாகவும் , சுகங்களை அனுபவிப்பராகவும் இருப்பார்…..

23.அர்த்த சந்திரயோகம்.

அனைத்துக் கோள்களும் ஒரு பணபர பாவமுதல் வரிசையாக இருந்தாலும் அல்லது ஒரு  ஆபோக்லிய பாவ முதல் வரிசையாக இருந்தாலும் அர்த்த சந்திரயோகமாகும்.

அர்த்த சந்திர யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் அனைவருக்கும் நல்லவராகவும், மேன்மையுடனும், புகழுடனும் வாழ்வார்.

24.சகர யோகம்

அனைத்துக் கோள்களும் இலக்ன முதல் ஒன்றுவிட்டு ஆறு பாவத்தில் இருப்பது சகரயோகமாகும். { 1,3,5,7,9,11 பாவங்களில் }

இந்த யோகத்தில் பிறந்தவர் மக்களாலும், மன்னர்களாலும் போற்றக்கூடிய மாமன்னர் ஆவார்…ஏகசக்ரவர்த்தியாவார்….

25.சமுத்திரயோகம்

அனைத்து கோள்களும் இரண்டாம் பாவமுதல் ஒன்றுவிட்டு ஆறு பாவத்தில் இருப்பது சமுத்திரயோகமாகும்..  { 2,4,6,8,10,12 பாவங்கள் }

சமுத்திரயோகப்பலன்கள்

இந்த யோகத்தில் பிறந்தவர் மகிழ்ச்சியுடனும் ,சுகபோகங்களை அனுபவித்து அரசருக்கு இணையாக வாழ்வார்….


சாங்கிய யோகங்கள்

26.கோளயோகம்

அனைத்துக் கோள்களும் ஒரே பாவத்திலிருப்பது கோளயோகமாகும்.

கோளயோகப் பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் ஏழையாகவும், மந்தபுத்தி உள்ளவராகவும், செயல்களில் திறமையில்லாதவராகவும், அதனால் இழிவான செயல்களைச் செய்பவராகவும். வெளியூர்களில் சுற்றிக் கொண்டிருப்பவராகவும், சுத்தமற்ற ஆடைகளுடன் உடையவராகவு இருப்பர்….செல்வம் இல்லாதவர்…

27.யுக யோகம்;

யுகயோகப்பலன்கள்;

அனைத்துக்கோள்களும் இரண்டு பாவங்களில் இருப்பது யுகயோகமாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர் ஏழையாகவும். சாத்திர அறிவிற்கு எதிராக. நாத்திகராக வாழ்வார்… செல்வமில்லாதவர்….

28. சூலயோகம்

அனைத்து கோள்களும் மூன்று பாவங்களில் இருப்பது சூலயோகமாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர் வீரனாவார்…பொருட்களில் பற்றுள்ளவராவார. ஏழையாகவும் இருப்பார்..

29. கேதாரயோகம்;

அனைத்துக் கோள்களும் நான்கு பாவங்களில் இருப்பது கேதார யோகமாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர் நல்ல செயல்களைச் செய்பவராவார்..மற்றவருக்கு உதவுவதில் முன்னோடியாவார். வேளாண்மைத் தொழில் செய்வதில் விருப்பமுடையவராவார்….

30.பாச யோகம்.

அனைத்துக் கோள்களும் ஐந்து பாவங்களில் இருப்பது பாசயோகமாகும்..

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் உற்றார் –உறவினருடன் இணைந்து வாழ்பவராகவும், நல்ல வழியில் செல்வம் சேர்ப்பவராகவும் இருப்பர்..

31. திமினி யோகம்;

அனைத்துக்கோள்களும்  ஆறு பாவங்களீல் இருப்பது திமினியோகமாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர் தானங்களையும், தருமங்களையும் முறையாக செயல்படுத்து பவராவார்… தயாளகுணமுடையவராவார். எண்ணற்ற பசுக்களை வளர்ப்பவராவார். மற்றவருக்கு உதவி செய்வதில் விருப்பமுடையவராவார்……

32. வல்லகியோகம். { வீணை யோகம் }

அனைத்துக் கோள்களும் ஏழு பாவங்களில் இருப்பது வல்லகி யோகமாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர் இயல்,இசை போன்றவற்றில் தேர்ந்தவராவார். அறிவாற்றலுடன் செயல்படுபவர். அனைவருக்கும் இனியர். நற்செயல்கள் செய்பவர்……

ஒரு வழியாக நாபச யோகங்கள் முடிந்தன…
அன்புடையீர் வணக்கம்..
தற்பொழுது 26 முதல் 32 வரையுள்ள ஏழு யோகங்களும் சங்கிய யோகங்களாகும். இவற்றில் கூறப்பட்டுள்ள கோள்கள் நிலை,,,,, முன்னர் கூறியுள்ள யோகங்களில் ஏதேனும் ஒன்றில் இடம் பெற்றிருந்தால் அந்த யோகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாங்கிய யோகப்பலனாகக் கணக்கிடக்கூடாது.. 
{எ-கா } அனைத்துக் கோள்களும் சர ராசியில் இருப்பது ரச்சு யோகமாகும்..இதற்குரிய பலனாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.. அதைவிடுத்து சாங்கிய யோகமான கோளயோகப் பலனாக கணக்கிடக்கூடாது….
அனைத்து யோகப்பலன்களும் எந்த தசா நடந்தாலும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெறுவதாகும்.
இங்கு கூறப்படுகிற நாபசயோகப் பலன்கள் அனைத்தும்,,, பொதுவாக பாவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்…இவை எவ்வாறு செயல் படும் என்று இதுவரை யாரும் ஆய்வு செய்யவில்லை..எனவே ஆய்வாளர்கள் இந்த யோகங்கள் எந்தெந்த காலங்களில் உருவாயின. அவற்றில் பிறந்தவர்கள் யார். என்று அறிந்து அவர்களிடம் பலன்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.. அதன் பின்னர் இந்த ராஜயோகங்கள் எவ்வாறு வேலை செய்யும் என்று தெளிவாகக் கூறலாம்…. நான் நிச்சயமாக ஒருசில ராஜயோகங்களை ஆய்வு செய்து வெளியிடுவேன்….நன்றி…


Professor.Dr.T.Vimalan Ph.D. 15-04-2015..

Monday, 6 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4


அன்புடன் அனைவருக்கும் வணக்கம்.......

6.கதயோகம்;

அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கேந்திர பாவங்களில் இருந்தால் கத யோகமாகும்..
அடுத்த கேந்திர பாவகம் என்பது 1.இலக்னமும்,நான்காம்பாவமும் அல்லது 2.நான்காம் பாவமும்,ஏழாம் பாவமும் அல்லது3. ஏழாம்பாவமும்,பத்தாம்பாவமும், அல்லது 4.பத்தாம் பாவமும்,இலக்னபாவமும் ஆகும்.

கதயோகப் பலன்கள்

இந்த யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார். அனைத்து காலங்களிலும் செல்வந்தேடும் முயற்சி உடையவராகவும் இருப்பார்.. ஆன்மீகப் பற்றுடன் வாழ்வார். ஆன்மீக செயல்பாடுகள் உடையவராவார்.

சிறப்புப் பலன்கள்;

சொல்லப்பட்டிருக்கும் இரண்டு கேந்திரங்களில், எதில் கோள்கள் அதிகமாக இருக்கிறதோ அப்பாவகத்தின் செயல்கள் கலப்பு பலன்களாகவும்,கோள்கள் குறைவாக இருக்கக்கூடியப் பாவங்களில் இருக்கும் கோள்களின் காரகங்களும்+ பாவகத்தின் காரகக் குணங்களும் கூதலாக செயல்படும் என்று அறிந்து கொள்க.
இவற்றில் தீயகோள்களின் செயல்கள்,அவை இருக்கும் கேந்திரத்தின் அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்துவனவாக அமையும்.

7.சகட யோகம்;

அனைத்துக் கோள்களும் இலக்னம் மற்றும் ஏழாம் பாவத்தில் இருந்தால் சகடயோகமாகும்.

சகடயோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் வண்டி வாகனத் தொழில் செய்பவராக இருப்பார். பெருந்தன்மை இல்லாத மனைவியையுடையவராவார். நோயாளியாகவும் இருப்பார்.

சிறப்புப் பலன்கள்;

பொதுவாக இலக்னத்தில் கோள்கள் இருப்பது நன்மையென்றால், ஏழில் கோள்கள் இருப்பது அவ்வளவாக நன்மை கிடையாது.. எனும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் துன்பப் பலன்கள், நமது கணிதத்திற்கும் அப்பாற்பட்டவையாகவே ஏற்படும். அதனால் ஏழில் உள்ள கோளின் குணத்திற்கு ஏற்ப பலன்களை யூகித்துக் கூறுதல் வேண்டும்.
இக்கட்டுரையில் ஒவ்வொரு பலனாக எழுதமுடியாது என்பதால் உங்கள் யூகத்திற்கு கொடுத்து விட்டேன்…

8.விஹக யோகம்;

அனைத்துக்கோள்களும் 4 ஆம் பாவத்திலும், 10ஆம் பாவத்திலும் இருந்தால் விஹக யோகமாகும்.

விஹகயோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் அனைத்து செய்திகளையும் கூறும் தொழில் செய்பவராவார். பயணத்தில் நாட்டமுடையவராவார். கலகம் செய்வதில் விருப்பமும் இருக்கும்.

ஒவ்வொரு இலக்னத்திற்கும் 4,10 ஆம் பாவங்கள் யாரென்றும்,அங்கு எந்தெந்த கோள்கள் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று சோதிடவியலின் அடிப்படை நூல்களைக் கொண்டு ஆய்ந்துணர்ந்து பலன்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்……..

9. ஸிரிங்காடக யோகம் ;

அனைத்துக் கோள்களும் 1,5,9 ஆகிய திரிகோண பாவகங்களில் இருந்தால் ஸிரிங்காட யோகமாகும்.

ஸிரிங்காடக யோகப்பலன்கள்;

இந்தயோகத்தில் பிறந்தவன் முதுமையில் சுகமாக வாழ்வான். மற்ற வயதுகளில் சில துன்பங்களை அனுபவிப்பான்…

இப்பலன்களை கோள்களைக்கொண்டு பிரித்துப் பலன்களைக் காணுங்கள்…..

10.ஹலயோகம்;

 அனைத்துக் கோள்களும் மற்ற திரிகோண பாவங்களில் இருந்தால் ஹலயோகமாகும்.
மற்ற திரிகோணங்கள் என்பது 2,6,10 ஆம் பாவங்கள், 3,7,11ஆம் பாவங்கள், 4,8,12 ஆம் பாவங்கள் கொண்ட மூன்று பாவங்களாகும்…..

ஹல யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் நிலத்தை உழுது பயிரிட்டு அதன் வழியாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பார். ((( பொதுவாக கலப்பு பாவகங்களில் கோள்கள் இருந்தால் உழைப்பாளி என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.)))))))

11.வஜ்ரயோகம்;

நற்கோள்கள் இலக்னத்திலும்,ஏழாம் பாவத்திலும் இருந்து, —தீயகோள்கள் நான்காம் பாவத்திலும்,பத்தாம்பாவத்திலும் இருந்தால் வஜ்ரயோகமாகும்.

வஜ்ர யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் குழந்தையிலும்,  முதுமையிலும், அனைத்து சுகங்களையும் அனுபவிப்பவராகவும், மக்கள் செல்வாக்கைப் பெற்றவராயும், வீரமுடையவராகவும் திகழ்வார்….

12. யவயோகம் ;

தீயகோள்கள் இலக்னத்திலும், ஏழாம் பாவகத்திலும் இருந்து – நற்கோள்கள் நான்காம் பாவத்திலும், பத்தாம் பாவத்திலும் இருந்தால் யவயோகமாகும்.

யவயோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் இளமைக்காலத்தில் சுகபோகங்களை அனுபவிப்பராக இருப்பார். வீர, தீரத்துடனும் செயல்படுவார்….

13.பத்ம யோகம் ;

அனைத்துக் கோள்களும் நான்கு கேந்திர பாவங்களில் இருந்தால் பத்ம யோகம் அல்லது கமலயோகமாகும். ( தீயகோள்கள்+ நற்கோள்களின் கலப்பு நிலை)

பத்ம யோகப்பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் எல்லையற்ற இன்பங்களை அனுபவிப்பவராகவும், எங்கும் புகழுடன் இருப்பவராகவும், அனைத்து வித்தைகளையும் அறிந்தவராகவும் இருப்பார்…

14.வாபியோகம் ;

அனைத்துக் கோள்களும் பணபரத்திலிருந்தாலும் ( 2,5,8,11,ஆம் பாவங்கள் பணபரம்) அல்லது ஆபோக்கிலியத்தில் இருந்தாலும்( 3,6,9,12 ஆம் பாவங்கள் ஆபோகிலியம்) வாபியோகம் என்று அழைக்கப்படும்.

வாபியோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் பலகாலங்கள் சுகமற்றவராகவும், கருமியாகவும் வாழ்வார்.  செல்வங்களை நிலத்தில் புதைத்து வைப்பவராகவும் இருப்பார்கள்…. அற்ப சுகவாசி….

15.யூபயோகம்;

அனைத்துக் கோள்களும் இலக்ன முதல்  வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது யூபயோகமாகும்… ( 1,2,3,4,)

யூபயோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் அரசரைப் போல் மிகப் பெறும் செயல்களைச் செய்பவராகவும், யாகங்களை செய்வதில் பெயரும் புகழும் அடைபவராவார். எப்பொழுதும் தயாள குணத்துடன் வாழ்பவராவார்.

16. இஸூ யோகம்

அனைத்துக் கோள்களும் நான்காம் பாவ முதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது இஸூ யோகம் அல்லது பானயோகமாகும். ( 4,5,6,7 ).

இஸூ யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் இம்சை செய்வதில் விருப்பமானவரும், போர்க்கருவிகளைச் செய்பவராகவும் சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் பணி செய்பவராகவும் இருப்பார்…..

17.சக்தியோகம்

அனைத்துக் கோள்களும் ஏழாம் பாவமுதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது சக்தியோகமாகும்.

சக்தியோகப் பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் தன் குலத்திற்கு தாழ்ந்த தொழிலை செய்பவராவார். செயலில் திறமையற்றவராவார். மகிழ்ச்சி என்பது சிறிதும் இல்லாதவர். செல்வமும் இல்லாதவராவார்….

18.தண்ட யோகம்.

அனைத்துக் கோள்களும் பத்தாம் பாவமுதல் வரிசையாய் நான்கு பாவங்களில் இருப்பது தண்ட யோகமாகும்.

தண்ட யோகப்பலன்கள்;

இந்த யோகத்தில் பிறந்தவர் கீழ்நிலைப் பணியாளராகவும் , தனது நெருக்கமான உறவினர்கள், நண்பர்களை விடுத்து தனிமையில் வாழ்பவராகவும் இருப்பார்…


நாபச யோகங்களில் 18 யை விளக்கியுள்ளேன். இன்னும் உள்ள 14 யோகங்களை அடுத்த தலைப்பில் விளக்கிய பின்னர் இந்த யோகங்களைப் பற்றிய கருத்துரையை எழுதுகிறேன். நன்றி…. நாளை சந்திப்போம்…..Professor Dr.T.Vimalan. Ph.D. 06-04-2015.

Friday, 3 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 3 . சிரிக், சர்ப்பயோகம். 03-04-2015


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 3 .


4. சிரிக் அல்லது மாலா யொகம் ;

நற்கோள்கள் கேந்திர பாவங்களில் இருந்தால்  சிரிக் யோகம் என்று கூறப்பட்டுள்ளது.

கேந்திரம் என்பது இலக்னம் , நான்கு , ஏழு , பத்து ஆகிய நான்கு பாவங்களாகும். இப் பாவங்களில் வளர்பிறை சந்திரன், புதன் , குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கோள்கள் மட்டும் இருக்க வேண்டும். மற்ற எந்த கோள்களின் இணைவும் இருக்கக்கூடாது.

குருவும் ,சந்திரனும் மாதத்தின் ஒன்பது நாட்கள் தங்களுக்குள் கேந்திரத்தில் இருக்கும். சுக்கிரனும், புதனும் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பது என்பது நிச்சயமாக நமது நாட்டில் ஏற்படாது…ஏனெனில் சுக்கிரன் சூரியனிலிருந்து 47 பாகை விலகியிருக்கும் .அதேபோல் புதன் 29 பாகையளவில் விலகியிருக்கும். இந்த இரு கோள்களின் தூரத்தையும் கூட்டினால் இடைப்பட்ட தூரம் 76 பாகையாகும். இந்த அளவு மூன்று இராசிகளுக்குள் மட்டும் வருகிறது. எனவே சுக்கிரனும் , புதனும் தங்களுக்குள் ஒவ்வொரு கேந்திரத்தில் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அதனால் சுக்கிரனும்.புதனும் ஒரே கேந்திர பாவத்தில் இருக்க முடியும். எனவே ஏதேனும் மூன்று கேந்திர பாவகத்திலோ அல்லது இரண்டு கேந்திர பாவகத்திலோ, அல்லது ஒரு கேந்திர பாவகத்திலோ இந்த கோள்கள் அமைப்பு ஏற்படும்.

சிரிக் யோகப் பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் உலக இன்பங்களை அனுபவிப்பதும், மகிழ்ச்சியாகவும், அனைவரும் விரும்பும்படி வாழ்வார்.

சிறப்புப் பலன்களை காண்போம் :

இந்த யோகத்தில் இலக்ன பாவகம் தொடர்பில்லாமல் போனால் சாதகரது பெயர் அதிகமாக வெளிப்படாது. மற்றவர் தயவை நாட வேண்டியிருக்கும்.

நான்காம் பாவக தொடர்பு இல்லை என்றால் சாதகரது உறவினர்கள் உதவியை எதிர்பார்க்க முடியாது. அனுபவிக்கும் சுகங்களும் வரையறுக்கப் பட்டதாக அமையும்
.
ஏழாம் பாவக தொடர்பு இல்லை என்றால் சாதகருக்கு எதிர்பாராத மனிதர்களின் உதவிகள் ஏற்படாது. எதிர் பாலினரின் உதவியும் எற்படாது.

பத்தாம் பாவக தொடர்பு இல்லை என்றால், தனது தொழில்முறை அமைப்பு ரீதியாக பெயர் ஏற்படாது. பெரிய மனிதர்களின் உதவியும் தடைபடும்.

( இந்த நிலைகளில் நற்கோள்கள் இருப்பதும் கடினமாகும். ஏனெனில் தீய கோளான சூரியனை விட்டு புதனும், சுக்கிரனும் இணைந்திருக்க வேண்டும். அதன் பின்பு அந்த இணைவு குருவிற்கு கேந்திரமாக அமைய வேண்டும்…).

5.சர்ப்பயோகம். ;

தீய கோள்கள் கேந்திரத்தில் இருந்தால் சர்ப்பயோகமாகும்.

தீய கோள்கள் என்பது சூரியன், செவ்வாய், சனி, ஆகிய மூன்று கோள்களைக்குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. தற்பொழுது நிழல் கோள்களான இராகு, கேதுவையும் சோதிடத்தில் இணைத்துள்ளதால் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்…. அதனடிப்படையில் உரேனஸ், நெப்ட்யூன் கோள்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்… இவை அனைத்துமே தீய கோள்களாகும்..

இக்கோள்கள் அனைத்தும் கேந்திரங்களில் இருப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். முதலில் சூரியன், செவ்வாய்,சனி கோள்கள் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பதற்கு ஒரு ஆண்டுக்குள் வருவதற்கு வாய்ப்புண்டு.

சர்ப்பயோகப் பலன்கள் ;

இந்த யோகத்தில் பிறந்தவர் எப்பொழுதும் துன்பத்துடனே வாழ்க்கையை நடத்துவார். மகிழ்ச்சியற்ற வாழ்வினால் திருப்தியற்ற நிலயில் காணப்படுவார்….

சிறப்புப் பொதுப்பலன்கள் ;

இலக்னத்தில் இக் கோள்கள் இல்லையானால் சாதகர் தன்னம்பிக்கையுடன் தனது செயல்களில் ஈடுபட்டு தனது துன்பங்களை வெற்றி கொள்வார்.

நான்காம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் உறவினர் உதவியுடன் தனது துன்பத்திலிருந்து விடுபடுவார்.

ஏழாம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் புதிய மனிதர்களின் உதவியும், எதிர் பாலினரின் உதவியும் பெற்று துன்பத்தைக் குறத்துக் கொள்வார்.

பத்தாம் பாவத்தில் இக்கோள்கள் இல்லையானால் சாதகர் பெரிய மனிதர்களின் உதவியும். தனது கௌரவத்தினாலும் துன்பத்தை எதிர் கொண்டு வெற்றியும் பெறுவார்….

இராகு-கேது.

இராகுவையும், கேதுவையும் இணைத்துப் பலன்கள் கூறப்பட்டால் கூடுதலான கெடுபலன்களை அனுபவிக்க நேரிடும். எப்படியெனில் 1,7,ஆம் பாவத்தில் இக்கோள்களின் செயல்கள் எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே… (கடைசி வரை கணவன் –மனைவி உறவில் துன்பங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்.) 4,7, ஆம் பாவத்தில் இருந்தால் சுகமும், தொழிலும் எப்படி வேண்டுமானாலும் துன்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இவை சோதிடர்கள் அனைவரும் அறிந்ததே….

இந்த யோகங்கள் கேந்த்திரத்தில் உள்ள கோள்களின் தன்மைக்கேற்ப பலன்களை பிரித்து கண்டு பிடித்துக் கூறவேண்டும்..அப்படி பார்த்தோமானால் அதிகமான கோள்கள் நிலைகளை ஏற்படுத்தி பலன்கள் எழுதலாம்… இருப்பினும் இப்பலன்களை எல்லாம் அவ்வப்பொழுதுள்ள கோள்களின் அடிப்படையில் யூகித்தறிந்து கூறப்பட வேண்டும்.


உரேனஸ், நெப்ட்யூன் கோள்களுக்குரிய பலன்களைப் படித்து அதற்கு தகுந்தாற்போல் பலன்களை அறிந்து கொள்க....


……. நன்றி-----நாளை சந்திப்போம்…


Professor Dr.T.Vimalan. Ph.D.    03- 04 -2015.