VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Monday, 20 July 2015

சோதிடமும்- சோதிடர்களும்.--- இரண்டாம் கட்டுரை / 21-07-2015.


சோதிடமும்- சோதிடர்களும். 
   இரண்டாம் கட்டுரை


தமிழ் சோதிட உலகத்தினரே வணக்கம். 


ஆம் இது ஏமாற்றும் காலமாகும். மக்களை எப்படியெல்லாம்  ஏமாற்றமுடியுமோ அப்படியெல்லாம் ஒருவரை ஒருவரை ஏமாற்றிக்கொள்கின்றனர்…. அதற்கு பக்க பலமாக பல அமைப்புகள் இருக்கின்றன….. அவற்றில் ஒன்று இந்த சோதிடக்கலையுமாகும்..


பூர்வ புண்ணியம் என்ற ஒன்றைச் சொல்லி ஏமாற்றும் வித்தை இந்திய சமயங்கள் அனைத்திலும் உள்ளன. இந்து சமயம் ((((((((((( இப்படி ஒரு சமயமே இல்லை என்போர் இருக்கின்றனர்.. இதை சனாதன தர்மம் - வைதீக சமயம் என்றெல்லாம் மாற்றிக் கூறுவர்…)))))))))))) இப்பொழுதும் இந்துசமயம் இருக்கிறது .. ஆனால் வழிபாடும், ஆகமங்களிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னர் ஹோமத்தில் உயிர் பலி கொடுக்கப்படும் .இப்பொழுது அதற்கு பதிலாக சிறிய வேள்வி குண்டம் அமைத்து பட்டுத் துணிகள் பலியிடப்படுகின்றன…


இந்தியாவில் உள்ள சமயங்களில் இனக்குழு சமயத்திற்கு அடுத்தாற்போல் பழமையான சமயம் இந்து சமயமாகும். இச்சமயத்தின் ஆணிவேர்கள்- புனிதம்- தீட்டு- பூர்வபுண்ணியம் போன்றவையாகும்.. முற்பிறப்பு – அடுத்த பிறப்பு பற்றி பேசும் அமைப்பாகும். அதனால் முற்பிறப்பில் செய்த தீய கர்மங்களுக்கு, இப்பிறப்பில் நன்மை செய்தால் , அடுத்தபிறவியில் நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையான கொள்கையுடையதாகும்… இந்த கொள்கை இறைவணக்க பரிகாரமாகவே இருக்கிறது…. இவ்வாறு இறைவனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பதாகும்… கி.பி. 700 க்கு முன்னர் அனைத்து ஹிந்து சமய ஹோமத்திலும் உயிர்கள் பலியிடப்பட்டன. இதற்கு பின்னர் இந்து சமயம் வழிபாடுகள் மாற்றப்பட்டு கோயில், சிலை வழிபாடுகள் உள்ள சைவ சமயம், வைணவ சமயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு காரணமாக அமைந்தது கி.மு. 600 முதல் கி.பி.700 வரை எழுச்சி பெற்றிருந்த சமண சமயமும் , பௌத்தசமயமும் ஆகும்.. இவற்றை விளக்கமாக தனியொரு பகுதியாக எழுதுகிறேன்..

(((( யூதசமயம்-- கிறித்துவசமயம்----இஸ்லாம் சமயத்தினர்க்கு முதல் ஜென்மமும் இல்லை..அடுத்த ஜென்மமும் இல்லை... உலகின் மக்கட் தொகையில் ஏழில், நான்கு பங்கு உள்ளனர்.... இவர்களுக்கு பூர்வ ஜென்ம அறிவே கிடையாது.....அதனாலேயே இறுதி தீர்ப்பு நாளுக்காக கல்லறையில் படுத்துக்கிடக்கிறார்கள்.. )))))))))))

இவ்வாறு சமய நம்பிக்கை கொண்ட பூர்வபுண்ணியம் சோதிடத்தில் இணைக்கப்பட்டு பரிகார லீலைகளை கட்டவிழ்த்துள்ளனர். இதனால் தற்கால சோதிடர்களும் இந்த பூர்வ புண்ணியம் என்று ஒன்று உண்டு என நம்பி மக்களிடம் தீய பெயர் எடுக்கின்றனர்.

பூர்வ புண்ணிய தோசங்களைக் கூறுவது ,அதைச் சொல்லி பரிகாரம் செய்வது அந்த அந்த ,சமயப் பெரியோர்களின் நம்பிக்கை வாய்ந்த செயல்களாகும்… இதில் சோதிடம் எங்கு வந்தது…… சோதிடத்தில் பூர்வ புண்ணியத்தை சொல்லி பரிகாரச் செயலுக்கு பெரிதும் அடிகோலியது நாடி சோதிடம் என்று ஒரு பொய்யான ஓலைச் சுவடிகளை தயாரித்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பாகும்…


நாடி சோதிடம் என்ற ஓலைச் சுவடி பார்க்கும் அமைப்பை நம்மவர் எவரும் கற்றுக் கொள்ள முடியாது…. இந்த அமைப்பு குறிப்பிட்ட குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும்… பல முனிவர்கள், ரிஸிகள், கடவுள்கள் பெயரால் நாடிப் பலன்கள் வாசிப்பர்…. இவற்றில் முன்ஜென்மப்பலன்கள் கூறி அதற்கு பரிகாரம் செய்ய சொல்வார்கள்…((((( இந்த நாடி சோதிடம் கடந்த நூறு ஆண்டுகளாக பொதுமக்களிடம் பயன் படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இப்படியெல்லாம் எந்த ஒரு ஓலைச் சுவடியும் இல்லை என்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தார் கூறும் அளவிற்கு பொய்யாகவும் உள்ளது….முகநூல் சோதிடர்சபை தஞ்சையில் நடந்த கூட்டத்தில் இதைப்பற்றி நூலகத்தார் பேசினர்..))))))))))))))))))))) இந்நிலையில் உள்ள  இந்த பரிகார அமைப்பு படிப்படியாக அனைவரும் பார்க்கும் நமது சோதிடத்திலும் இணைத்து விட்டனர். (((( தற்கால சோதிட நூல்களில் தான் அதிகமாக எழுதியுள்ளனர்..)))))


சோதிடம்,,, வானசாத்திரம் என்ற கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால் ஆய்வு செய்யப்பட வேண்டும் … சமயக் கருத்துக்களான பரிகாரம் கூறக்கூடாது…இல்லை சோதிடம் சமயம் சார்ந்தது என்றால் ,,, வானசாத்திரமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் கூறக்கூடாது…. அருள் வாக்கு சோதிடராக இருக்கலாம்…..


இரண்டுமில்லாமல் கடவுளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டும்., வானசாத்திரத்தையும் எடுத்துக் கொண்டும் பலன்கள் கூறுவது என்பது தங்களையும், மக்களையும், சோதிடத்தையும் ஏமாற்றும் செயலன்றி வேறு என்ன சொல்ல… எதைச் சொல்ல..
                                                                                                                                                                                        தொடரும்…………
பேராசிரியர். முனைவர்.தி.விமலன்..
#ஜோதிடம் #வான சாத்திரம் #கடவுள் #பரிகாரம் 


சோதிடமும்- சோதிடர்களும். 20-07-2015.சோதிடமும்- சோதிடர்களும்.

தமிழ் சோதிட உலகத்தினரே வணக்கம்.

தற்பொழுது 2015 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வடமொழிப்படி( சமஸ்கிருதம்) --------------------------பிரபாவதி சுற்று மன்மத ஆண்டு ஆடி மாதம் 04 தேதி ( ஆங்கிலம் 20-07-2015) ((((((( தமிழ் ஆண்டு, மாதம்,தேதி தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ))))))))))))).

இக்காலத்தில் சோதிடம் பார்க்கும் முறையில் பலவேறு பிரிவுகள் வந்துவிட்டன. அவை 1.பாரம்பரிய முறை 2.பிரசன்ன சோதிட முறை, 3.ஆருடமுறை, 4.மேற்கத்திய சோதிடமுறை, 5. இகலோக சொதிடமுறை, 6.கே.பி முறை, 7. சார சோதிட முறை என்று பல அமைப்புகளும், புதியதாக பல மெத்தடுகளும், ஸிஸ்டங்களும் வருவதாகவும் உள்ளது என்று அறிந்துள்ளோம்… இருக்கட்டும்… இவை அனைத்தும் சோதிடம் பார்க்க பலவேறு நுணுக்கங்களை உடையது என்று அவற்றைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் கூறுகிறார்கள்…நன்மையே!!!!!!!!!!!!!

மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது மேலே கண்ட சோதிடப்பிரிவுகளைப் பார்க்கும் பொழுது..???????????/// ஆனால் அவை யாவும் ஒன்றன் பின் ஒன்றாக ஆய்வு செய்து வளர்ந்தது என்றால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்திருக்கும் ..நாமும் பல வகையில் வளர்ச்சி பெற்றிருப்போம்… உண்மையில் அப்படியெல்லாம் நடைபெறவில்லை….. ஒவ்வொன்றும் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டதாகும்…அதனால் எந்த ஒரு முறையும் முடிவான விதிகளை ஏற்படுத்தி எதிர்காலப் பலன்களைக் கூற வாய்ப்பை ஏற்படுத்தவில்லை….மாறாக தங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி ஆய்வு எதுவும் செய்யாமல் தான் கூறுவதே சரியென்று முடிவிற்கு வந்து ஒவ்வொன்றுடனும் சண்டை செய்வதையே கொள்கையாகக் கொண்டுள்ளன….அதனால் சோதிடர்களாகிய நமக்கு எந்த ஒரு பயனும் இல்லை… 

((((((((((( இந்த முறைகளையெல்லாம் கற்றுத் தருகிறேன் என்று கூறும் நபர்களுக்கெல்லாம் நல்ல வருமாணம்…….ஆனால் கற்று வரும் சோதிடர்களுக்கோ பட்டை நாமம்…)))))) நானும் பல்கலையில் பாடம் எழுதி பட்டங்களைக் கொடுத்தேன்… அப்பொழுதும் நான் அனைத்து மாணவர்களிடம் கூறுவது இதைத்தான் ..தயவு செய்து ஆய்வு செய்யுங்கள்… இங்கு ஏராளமான விதிகளும் முறைகளும் உள்ளன…அவற்றை பல நூறு சாதகங்களைக்கொண்டு ஆய்வு செய்து முடிவுகளைக் கொடுங்கள் என்றேன்…ஆனால் அவ்வாறு ஒரு நபர்கூட இதுவரை வரவேயில்லை…… ஏனென்று கேட்டால் பொருளாதரம் அல்லது வயதைக் காரணம் காட்டி ஆய்வு செய்ய மாட்டார்கள்…

என்னிடம் பலர் கேட்டதை இங்கு கூறுகிறேன்.. எந்த முறை அனைவரும் பலன் கூற சரியாக வருகிறது என்று முடிவிற்கு வந்து விட்டீர்களா…. அப்படியானால் அந்த முறையை உலகிற்கு அறிவியுங்கள்…. நாங்கள் அனைவரும் குழம்பாமல் பலன் சொல்கிறோம் என்றனர்……
நானும் இதற்கு பலன் கூறுவதில் தாமதமாக உள்ளேன்….என்னிடம் எனது மாணவர்கள் ஒவ்வொருத்தருக்கும் , ஒரே பிரிவின் (((((((((((((( கணித ஆசிரியர்மட்டும் இவைபோல் ஒவ்வொரு துறையிலும் 50சாதகங்கள் )))))))))) 50 சாதகங்கள் கொடுக்கப்பட்டு, பத்து விதிகளும் கொடுத்து  முடிவு அறிவித்த ஆயிரம் திட்டக்கட்டுரைகள் உள்ளன….. அவற்றைக் கொண்டு ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறேன்…முடிவு எப்பொழுது வரும் என்று தெரியவில்லை….

இருப்பினும் நாங்கள் செய்த ஆய்வு , ஒருத்தருடைய தொழிலிற்கு எந்த கோள் கூடுதலாக பங்கு வகிக்கிறது என்றும், அதற்கு எந்த பாவத் தொடர்பில் அக்கோள் செயல் படுகிறது என்றும் பொதுவாக ஆராயப்பட்டது….. அவ்வாறு பத்து விதிகள் ஏற்படுத்தி ஒவ்வொரு கோளும் பத்து விதிகளில் 50 சாதகங்களுக்கும் ஏற்படுத்தும் பங்கினை எண்ணி எடுத்து முடிவுகள் கொடுக்கப்பட்டன….. ஆய்வு மிகச் சிறியதாக இருந்தாலும் ,அடிப்படையான சில முடிவுகளுக்கு கொண்டு சென்றன….

அவை….
பத்து விதிகளிலும் கோள்கள் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளன.. அவற்றில் தலைபிற்குரிய காரகமான கோள்கள் விகிதாசார அடிப்படையில் கூடுதலாக பங்கு பெற்றதை காண முடிந்தது… ஒருசில தலைப்பைத் தவிர மற்ற அனைத்தும் ஓரளவு நன்றாகவே இருந்தன…. ஆனால் தனியாக ஒரு கோள் மட்டும் குறிப்பிட்ட விதியில் மட்டும் செயல் படுகிறது என்று முடிவிற்கு வர முடியவில்லை….. சரி இவற்றையெல்லாம் அடுத்து அடுத்து தாங்களே புதிய விதிகளை ஏற்படுத்தி ஆய்வு செய்வார்கள் என்று எதிர் பார்த்தால் ,,,அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை……..


உங்கள் பார்வைக்கு ;-
                                ஆய்வு விதிகள்- விளக்கங்கள்.

விதி எண்-1

பத்தாம் பாவாதிபதியுடன் இணைந்த கோள்கள்.
தொழில் செய்யும் பத்தாம் பாவக அதிபதியுடன் இணைந்த கோளின் காரகத் தன்மையில் ஒரு சில சாதகர்கள் தொழில் செய்வர் என்றுள்ளது. எனவே இக் கருத்து ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. இதே போல் கீழே காணும் விதிகளும் ஆய்விற்குட்படுத்தப்பட்டன.

விதி எண்-2

பத்தாம் பாவகத்தை பார்க்கும் கோள்
இந்திய சோதிடத்தின் கோள்களின் பார்வைக்கு கூடுதல் பலம் உள்ளதாக எழுதப்பட்டுள்ளது….பத்தாம் பாவகத்தை பார்க்கும் கோளின் தனமையில் தொழில் உள்ளதா?

விதி எண்-3

இலக்ன நட்சத்திராதிபதி
ஒருவர் இலக்ன பாகை இருக்கின்ற நட்சத்திர அதிபதியின் தொழிலை செய்வார் என்றுள்ளது.

விதி எண்-4

பத்தாம் பாவகத்தில் உள்ள கோள்கள்.
பத்தாம் பாவத்தில் உள்ள கோள்களின் தொழில்கள்…

விதி எண்- 5

பத்தாம் பாவக அதிபதிக் கோள் நின்ற நவாம்ச அதிபதிக்கோளின் தொழில்.

விதி எண்-6

பத்தாம் பாவ அதிபதிக்கோள் நின்ற இராசி அதிபதிக் கோளின் தொழில்.

விதி எண்-7

இலக்ன அதிபதிக்கோளின் தொழில்
.
விதி எண்-8

பத்தாம் பாவக அதிபதிக்கோளின் தொழில்.

விதி எண்-9

பத்தாம் பாவக அதிபதிக்கோள் நின்ற நட்சத்திர அதிபதிக் கோளின் தொழில்.

விதி எண்-10

இலக்ன அதிபதிக்கோளுடன் இணைந்த கோளின் தொழில்கள்…..

கோள்களின் பங்களிப்புகள் எத்தனை விழுக்காடுகள் இடம் பெற்றுள்ளன என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன….
இவ்வாறு ஆய்விற்கு வித்திட்டும் ஆய்வு நடைபெறாதபொழுது…இங்கு எந்த முறை சிறந்தது என்று எப்படிக்கூற முடியும்… வாடிக்கையாளருக்கு சரியான எதிர்காலத்தைக் கூறாமல் அவர்களை திசை திருப்பி தோசங்களினால் பலன்கள் நடைபெறவில்லை.. அதனால் அதற்கு பாரிகாரமாக யாகங்களையும் ,கோயில் வழிபாட்டையும் கூறினால் எப்படி சரியாகும்……

சரி அவர்கள் படியே தோசபரிகாரம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்றால் ,,,,,,,,,,,,,,,,,, கோள்களின் தோசத்தினால் சிறையில் வாடும் அன்பர்களுக்கு அவர்களுக்குரிய பரிகாரம் செய்தால் விடுதலை கிடைத்து விடுமா????? ((((((((((( தோசத்தினாலோ அல்லது தீய பாவகச் செயலினாலோ சிறைக்கு செல்லவேண்டும் என்பது சோதிட விதியாகும். இதைக் கூறுவதே நமது கடமையும் ஆகும்…. இந்த சாதகர்களை ஆய்வு செய்தால் எந்த காலத்தில், எந்த கோளின் பாதிப்பில், எந்த பாவக தசா புத்தியில் சிறைக்கு சென்றார்கள் என்று கண்டு பிடிக்கலாம்… அதைக்கொண்டு நமது வாடிக்கையாளர்களுக்கு பலன் கூறாலாம்.. இது போன்று பல நடவடிக்கைகளை ஆய்வு செய்து எதிர்காலப் பலன்களைக்கூறலாம்…. ஆனால் அவை எல்லாம் இல்லை……

நான் தான் பெரிய சோதிடன் ,எனது முறையே சிறந்தது, எனக்கு எல்லாம் தெரியும் என்று மற்றவரை மட்டம் தட்டுவது, போன்ற செயல்களினால் யாருக்கு இலாபம்….  அவர்களே தங்களைத் தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்……..

வழக்கறிஞர்கள் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கி பேசிக்கொள்வதில்லை…. ஏனெனில் இவருடைய திறமை உடனே தெரிந்து விடும்.. அவர்களுக்கு வெற்றியும், தோழ்வியும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்…. அதனால் தங்களவர்களை தாக்கிக் கொள்வதில்லை…. அதேபோல்

மருத்துவர்கள் தங்களுக்குள் தாக்கிக்கொள்வதில்லை…பொறியியளாலர்களும் , கணக்கியளாலர்களும் அப்படியே…..
ஆனால் சோதிடர்கள் ………. பாவம் இவர்களைக் கவனிக்க நாதியே இல்லாதவர்கள்….. ஏமாந்த சோதிடர்களை வைத்து யாராவது ஒரு ஏமாற்றுக்கார சோதிடர் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்….. இது ஏமாற்றும் காலம்….                   ( தொடரும் )

பேராசிரியர். முனைவர். தி.விமலன்..