Monday 27 October 2014

சோதிடப்பரிகாரத்தினால் கர்மவினைப்பலன்களை மாற்ற முடியாது.

அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு, பேராசிரியர் .விமலனின் வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது. 

வினா எண் 2. பரிகாரத்தினால் கர்மவினைப் பலன்களை மாற்றியமைக்க முடியுமா ?   இவ்வினாவிற்கு விடையளிப்பதற்கு முன்னர் ஒருமுடிவிற்கு வரலாம்.    வானசாத்திர சோதிடம் என்பது நட்சத்திரங்கள்,இராசிகள்,    கோள்கள், பாவகங்கள், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறுகணிதப் பிரிவுகளை கணித்து எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய செயல்களை முன்னரே தெரிவிக்கும் அறிவியல் சார்ந்த கலையாகும். எனவே இதில் புறவகைப்பரிகாரச்செயல்களினால் ஒரு பொழுதும் கர்மப்பலன்களை மாற்றியமைக்கமுடியாது. 
எப்படியெனில், ஒருவர் சாதகத்தில் தீமையான காலத்தில் கொலை  செய்யும்படியாகின்றது.  இதற்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இந்த செயல்களை சோதிடத்தினால் முன்னரே கூறமுடியும்.ஆனால் நடைபெறும் தீயவிளைவுகளை மாற்றியமைக்கமுடியாது.இதற்கு எந்த பரிகாரத்தை செய்து சிறைவாசத்தில் இருந்து விடுவிக்கமுடியும். இப்படியெல்லாம் கர்மவினைப் பயனை மாற்றியமைக்கமுடியும் என்றால் நாமும் முகேஸ் அம்பானி போல் கனவு இல்லத்தில் வாழமுடியும். 
 நமது இந்தியர் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பெருமைக்கும் மதிப்பிற்கும் உரிய திருவாளர்.  satya nadella  (06-01-1967 ல்பிறந்தவர்.)அவர்கள் தனது கர்மவினையினால் ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஒரு பணியாளர் இவ்வளவு சம்பளம் பெறுவது அவரது சாதகத்தின் கோள் நிலைப்பலன்கள் ஆகும் . எனவே தீயகாலத்தினால் எற்படும் தீய செயல்களின் விளைவுகள்,  நல்ல செயல்கள் செய்வதற்குரிய நல்லகாலம் வரும் வரைக்கும் காத்திருக்க வைக்கும் நன்றி. உங்களின் அடுத்த வினாவில் மற்ற பலன்களைக் காணலாம்.