Wednesday 31 December 2014

சோதிடத்தில் கோச்சாரப் பலன்கள் . 01-01-2015.

அன்புடையீர் வணக்கம்..மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில்                    மகிழ்ச்சியடைகிறேன்.



ஆரியர்களின் வருகை ;
இந்திய சோதிட வரலாறு ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன் வாழ்ந்த இந்திய மக்கள் சோதிடம் பார்க்கின்ற அறிவைப் பெறவில்லை. எனும்பொழுது, ஆரியர்களின் வருகை கி.மு.2000 என்று பொதுவாக வரலாற்று அறிஞர்களின் முடிவாக உள்ளது. 

இந்த ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த உடன் இங்கிருந்த இறைவழி பாட்டு அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். அதுவே இந்து சமய வேதங்களை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது. அந்த வேதங்களில் முதலாவதாக உள்ள இருக்கு வேதத்தில் உள்ள இறை வழிபாட்டு மந்திரங்களைக் கூறுவதற்கு சில நேரங்களைக் கடைபிடித்தனர். அவை முகூர்த்தம்,திதி, ருதுக்கள்,கிரகணம்,பொன்றவற்றை பயன் படுத்தியுள்ளனர். இவை அடிப்படை வானசாத்திர அறிவைக் கொண்டதாகும். இந்த அறிவை எங்கிருந்து பெற்றனர்…நிச்சயமாக இந்த அறிவு இந்தியர்களுக்கு இல்லை. பின் எங்கிருந்து வானசாத்திர அறிவைப் பெற்றனர்……………

உண்மையில் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த குடியேற்றக் காரர்களாவர். அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான குடிப்பெயர்ச்சியினால் ஐரோப்பாவிலிருந்து ஒவ்வொரு நதிசார்ந்த நாடுகளில் குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்ததில் மிகவும் முதன்மையானதாக இந்தோ-ஈரானிய கலாச்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்பொழுது உள்ள ஈராக்கின் பாக்தாத் நகரை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள நிலங்களை நாடுகளைக் கணக்கில் கொள்ளலாம். 

ஐரோப்பியர்கள்குடிபெயர்வதற்குமுன்னரேஇப்பகுதியில்சுமேரியர்கள், மெசபதோமியர்கள்,அக்கேடியன்கள், போன்ற இனத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் அடிப்படை வானசாத்திரத்தை அறிந்து வைத்துள்ளனர். பின்னர் வந்த ஐரோப்பியக்குடியேற்றக்காரர்கள் அவற்றை அறிந்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் வாழ்ந்த  அசீரியர்கள், பாபிலோனியர், சால்தியர்கள் போன்ரோர் வானசாத்திரத்தையும், அதன் மூலம் பலனாகக் கூறப்படும் கலைகளையும் அறிந்துள்ளனர்.

உலகின் எவருக்கும் இல்லாத சிறப்பு சால்தியர்களுக்கு உண்டு. இவர்கள் பாரசீக வளைகுடாப் பகுதியில்யூப்ரடீஸ், டைகிரீஸ் நதிகளின் முகத்துவாரத்தில் வாழ்ந்தவராவர். அதனால் வானத்தில் ஏற்படும் கோள்கள்,நட்சத்திரங்களின் மாற்றங்களை எளிதாக வெறும் கண்களைக் கொண்டு கணிக்கக் கூடியவர்களாக இருந்தனர்.அதனாலேயே தொடர்ச்சியான இரண்டாயிரம் ஆண்டுகள் வானத்தை ஆய்வு பல்வேறு முடிவுகளை அறிவித்துள்ளனர். அவர்களே சோதிட சாத்திரத்தின் முன்னோடிகளும் ஆவர்.

சோதிடத்தோற்றம்.
மிகவும் தெளிவாக கோள்களைக் குறித்து ஆய்வு செய்து அவற்றிற்கான பண்புகளை வெளியிட்டனர். பூமிக்கு வெளிவட்ட கோள்களான சனி,குரு,செவ்வாய், உள்வட்ட கோள்களான சூரியன், சுக்கிரன்,புதன். சந்திரன்,ஆகிய ஏழு கோள்களயும் கண்டுபிடித்து பலன்களைப் பார்த்தனர்.
சனி………………………………..துன்பம்
குரு………………………………..நன்மை
செவ்வாய்………………போர்குணம்
சூரியன்……………………..நிர்வாகம்
சுக்கிரன்………………….பெரும் விளைச்சல்
புதன் …………………………எழுத்து
சந்திரன்………………… வேளாண்மை.       ஆகிய அடிப்படை குணங்களைக் கொண்டு பலன்கள் பார்க்கப்பட்டன.

மேலே கூறப்பட்டுள்ள கோள்களின் வரிசைப்படி ஒரு நாளின் ஒவ்வொரு காலத்திற்கும் பலன்கள் பார்த்துள்ளனர். தற்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமே ஹோரா நேரம்  என்று. இதுவே சோதிடப்பலன்கள் பார்க்கப்பட்டதற்கு அடிப்படை நிலைகளாகும். இவற்றை ஏற்படுத்தியது சால்தியர்கள் ஆவர். பின்னர் படிப்படியாக இந்திய சோதிடத்திலும் இடம் பெற்றது.
சால்தியர்களின் சோதிடம், வானசாத்திரம் அக்கால வழக்கில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 

அதனாலேயே புனிதர் இயேசு அவர்கள் பிறந்ததற்கு இவர்களே சாட்சி பகர்ந்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பைபிளில் பார்க்க வேண்டும். மத்தேயு;2-2.கிழக்கில் இருந்து வந்த சோதிடர்கள் சாட்சி கூறினர். பிறந்திருப்பது தேவகுமாரன் என்று எழுதப்பட்டிருக்கும். ஜெருசலத்திற்கு கிழக்கில் உள்ள நாடு சால்திய,பாபிலோனியாவாகும்.

எனவே முதலில் ஒவ்வொரு நேரங்களுக்குப் பிரித்து பலன் பார்க்கப்பட்டதிலிருந்து பலவேறு முறைகள் கண்டுபிடிக்கப் பட்டு சோதிடம்,,,, உலகம் முழுவதும் பரவியது. இவையெல்லாம் கி.மு2000திலிருந்து கி.மு 001வரைக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால்  கி.மு 2000ல் அங்கிருந்து இங்கு வந்த ஆரியர்கள் தொடக்கால வானசாத்திரத்தையும் அதற்குரிய பலன்களையுமே ஏற்படுத்தியுள்ளனர்.



கோச்சார கோள்களின் பலன்கள்;
இந்திய சோதிடத்தில் கோச்சாரக் கோள்களைக் கொண்டு பலன்கள் பார்க்கும் முறை தொடக்கதிலிருந்து வந்துள்ளது. முதன் முதலில் கோள்களின் கோச்சாரப் பலன்கள கிரகணத்திற்கே பார்க்கப்பட்டன. ஏனெனில் கிரகண காலத்தில் ஏற்படும் இயற்கை குழப்பங்களைக் கண்டு அஞ்சியாதால் கவனமாக கிரகண காலங்கள் கண்டு பிடிக்கப் பட்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டனர்.
அதன் பின்னர் ஒவ்வொரு கோள்களிற்கும் பண்புகள் கொடுக்கப்பட்டு பலன்கள் பார்க்கப்பட்டன.

பொதுவாக அக்காலங்களில் தனிமனித சாதகம் எழுதும் அளவிற்கு சோதிடசாத்திரம் வளரவில்லை.அதனால் தனிப்பட்ட மக்களுக்கு சோதிடப்பலன்கள் பார்க்கப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு அரச வம்சத்தினரும் தங்கள் குலத்திற்கு என்று ஒரு நட்சத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குல நட்சட்த்திரத்தில் நற்கோள்கள் வந்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று சோதிடவியல் பலனாகக் கூறப்பட்டது. அதேபோல் தங்கள் குலத்திற்கான நட்சத்திரத்தில் தீயகோள்கள் வந்தால் அந்த அரச குலத்தினர்க்கு தீய பலன்கள் நடைபெறும் என்று சோதிடப் பலனாகக் கூறப்பட்டது. இதுவே கோச்சாரப் பலன் பார்ப்பதற்குரிய முறையாக இருந்தது.

பின்னர் தனி மனிதன் பிறந்த நட்சத்திரம் கணிக்கத் தெரிந்த பிறகு அவருடைய நட்சத்திற்கு கோச்சாரக் கோள்களின் பெயர்ச்சிக்குரிய பலன்கள் பார்க்கப்பட்டன. {{{{{{சாதகங்கள் எழுதாத காலங்கள்.}}}}}}} ஆதலால் வெறும் கோச்சாரக் கோள்களைக் கொண்டே எதிர்காலப் பலன்கள் பார்க்கப் பட்டன.
பின்னர் இராசிமண்டலங்களைக் கொண்டு அவற்றில் கோள்கள் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று சோதிடப்பலன்கள் கூரும் நூல்கள் உருவாக்கப்பட்டன.

இவற்றிலும் கோச்சாரப்பலன்கள் பார்க்கும் முறையின் வளர்ச்சியில் அஸ்டவர்க்கப்பலன்கள் கணிதங்கள் ஏற்படுத்தப் பட்டன. அவற்றைக் கொண்டு எதிர்காலப் பலன்கள் பார்க்கப்பட்டன. {அதாவது கோள்கள் அடுத்த இராசிக்கு செல்லும் வரை உள்ள நாட்களுக்குப் பலன்கள் பார்க்கப்பட்டன.}

இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலப் பலன்களைக் கூறும் சரியான தசா,புத்தி முறைகள் ஏற்படுதப்படவில்லை. அதனால் கோச்சார அடிப்படையில் எதிர்காலபலன்கள் பார்க்கப்பட்டன.

கோச்சாரப் பலன் கூறும் முறை வெறும் சந்திரன் ஒரு கோளை மட்டும் மையப்படுத்தி பார்க்கும் முறையாக மாறியுள்ளது. இக்கோச்சாரப் பலன்களில் மற்ற எந்த கோளும் இடம் பெறாது. தனி மனித சாதகமும் தேவையில்லை என்றாகிறது. எனும் பொழுது உலகில் உள்ள ஒரு இராசியில் சுமார் 65 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்குமான பலன்களாகும்` மிகவும் பொதுவானதும் அனைவருக்கும் பொருந்தாத பலன்களாக உருவாகும். எனவே தான் தனிமனித சாதகம் எழுதிய பின்னர் சந்த்ரன் ஒருவனை மட்டும் மையப்படுத்திக் கூறும் கோச்சாரப் பலன்கள் எந்த அளவு வேலை செய்கிறது என்று வினா எழுகிறது.    

உண்மையில் நன்கு சோதிடம் அறிந்த அன்பர்கள் ஒருவருடைய சாதகத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவிற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை கோச்சாரப் பலன்களிற்கு கொடுக்கமாட்டார். வேண்டுமானால் வாடிக்கையாளர் கேட்பதற்காக கூறலாமே தவிர அவரது மனசாட்சி இடம் கொடுக்காது.

எதிர்காலப் பலன்களை வரையறுப்பதில் 95 விழுக்காடு தனி மனித சாதகத்தின் கோள்களின் நிலைகளும்,தசா.புத்திகளுமே தீர்மானிக்கும். நிச்சயமாக கோச்சாரக் கோள்களின் {சந்திரன் மட்டும்} பலன்கள் சாதாரண நிலையிலேயே பலனளிக்கும்.


தனி மனித சாதகம் இல்லாமல் ,{ பிரஸ்னம் போன்ற }  பலன்கள் கூறும் முறையை நான் கூறவில்லை. ஏனெனில் அவை முழுவதுமாக சாதகம் எழுதி பார்க்கும் அமைப்பாகும்.


தற்பொழுது அருமையான கணிதங்கள் நம்மிடம் உள்ளன. அதைக்கொண்டு ஒரு சாதகரின் எதிர்காலப் பலன்களைத் தெளிவாக எடுத்துக் கூறமுடியும். இவற்றில் சந்திரனை மட்டும் மையப்படுத்தும் கோச்சாரப் பலனைக் கருத்தில் கொள்ளாமலே பலன்கள் கூறமுடியும். எனவே கோச்சாரப் பலன்களை சாதாரண நிலையிலேயே வைத்துக் கொண்டால் தேவையற்ற குழப்பங்களுக்கு வழி ஏற்படாது.


விம்சோத்தரி தசா அமைப்பில் ஒன்பது கோள்களும் பங்கு கொள்கின்றன. அவற்றின் கோச்சார நிலைகளைக் கொண்டு பலன்களைக் கூறலாமே தவிர தனிப்பட்ட சந்திரனை மட்டும் மையப்படுத்தும் பிறந்த இராசிப் பலன்களை சாதாரணமாகக் கொள்வோம்.    நன்றி..நன்றி….

MY BEST WISHES IN 2015 CHRISTIAN ERA…..

WITH REGARDS
PROFESSOR. DR. VIMALAN

01-01-2015..COIMBATORE.